பொது செய்தி

தமிழ்நாடு

ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி., நெகிழ்ச்சி

Added : டிச 30, 2016 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக, கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றார்.பின், அவர் கூறியதாவது: கடந்த, 1966ல், தெலுங்கு படத்தில், பாடகராக அறிமுகமானேன். தொடர்ந்து கன்னடத்திலும், 1969ல், தமிழிலும் பாடகரானேன். சாந்தி நிலையம் படத்தில், எனக்கு ஸ்வர பிச்சை போட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன். ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வந்த,
ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி., நெகிழ்ச்சி

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக, கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றார்.
பின், அவர் கூறியதாவது: கடந்த, 1966ல், தெலுங்கு படத்தில், பாடகராக அறிமுகமானேன். தொடர்ந்து கன்னடத்திலும், 1969ல், தமிழிலும் பாடகரானேன். சாந்தி நிலையம் படத்தில், எனக்கு ஸ்வர பிச்சை போட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன். ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வந்த, என் இசைப் பயணத்தில், நான் மட்டுமே இல்லை. இந்த சாதனையை புரிய உறுதுணையாக, இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என, பலர் உள்ளனர். இந்நாளில், ஜேசுதாசிடம் ஆசி பெற ஆசைப்பட்டேன்; அது நிறைவேறியது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அவர் கடனை தீர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rocky - chennai,இந்தியா
31-டிச-201610:04:31 IST Report Abuse
Rocky இதே பாலசுப்ரமணியம் மாபெரும் கலைஞனான மறைந்த டி.ம்.சௌந்தரராஜன் பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிட்டதில்லை பாராட்டியதில்லை என்ன காரணம் ?
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
31-டிச-201609:32:51 IST Report Abuse
Amirthalingam Sinniah பேதுருவின் காலை ஜேசு சுவாமி கழுவினார். இது வேதாகம புத்தகத்தில் உண்டு. இப்போது. ஜேசுதாசனின் காலை பாலசுப்ரமணியன் கழுவுகிறார். பெருமை கொள்ளாத பணிவான செயல்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-டிச-201607:15:35 IST Report Abuse
Kasimani Baskaran வாழ்த்துக்கள் SPB அவர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X