அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு,
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர் கள் மட்டும், அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், அவரச பொதுக்குழு கூட்டம் என்று மட்டும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் கூட்டப் பொருள் குறித்து, எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவரிடமும், கையெழுத்து வாங்கப்பட்டது. அதன்பின் கூட்டத்தில், கட்சி சட்ட திட்ட விதி, 20, பிரிவு இரண்டில் கூறப்பட்டுள்ளபடி,
பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை நியமித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை தேர்வு செய்ய, முறைப்படி தேர்தல் அறிவிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய, கால அவகாசம்அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எதிர்ப்பாளர்கள் மனு தாக்கல் செய்யக்கூடும் என்பதால், அதை தவிர்த்து விட்டு, தற்காலிக பொதுச் செயலராக சசிகலாவை நியமித்துள்ளனர்.
எனினும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, சசி நியமனம் குறித்து, தகவல் தெரிவிக்கப்படாததால், இதை செல்லாது என அறிவிக்கக் கோரி, வழக்கு தொடரவும், தேர்தல் கமிஷனில் முறையிடவும், அதிருப்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி கூறுகையில்,''கட்சி சட்ட விதிகளின்படி, நியமனம் செய்யப்பட்டிருந்தால், பிரச்னை எதுவும்
எழாது. விதிமீறல் இருப்பது பற்றி, தேர்தல் கமிஷனிடம் யாராவது புகார்
அளித்தால், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கும். தேர்வு செல்லாது எனக் கூறுவோர், நீதிமன்றம் சென்று தான் நிரூபிக்க வேண்டும்,'' என்றார்.
சசிக்கு எதிர்ப்பு
அ.தி.மு.க., பொதுச்செயலாளராக சசிகலா கட்சியினர் கோஷம் எழுப்பினர்.நேற்று நெல்லை பேட்டை பகுதியில் அ.தி.மு.க., 49வது வட்ட செயலாளர் அமீர் உட்பட கட்சியினர் உறுப்பினர்கள் அட்டைகளுடன் சசிகலாவிற்கு எதிராகவும், ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்களும் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (40)
Reply
Reply
Reply