அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா நியமனத்தில் தொடரும் சர்ச்சைகள்
தேர்தல் மூலமே பொ.செ.,வாக முடியும் என கருத்து

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டது சரியா என்ற, கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளில், பொதுச்செயலர் நியமனம் பற்றி எந்த விதியும் இல்லை என்பதால், இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

 சசிகலா நியமனத்தில் தொடரும் சர்ச்சைகள் தேர்தல் மூலமே பொ.செ.,வாக முடியும் என கருத்து

முதல்வராக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., வின் பொதுச் செயலராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பின், நேற்று முன்தினம், அ.தி.மு.க., வின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் சட்ட விதி, 20(2)ன்படி, புதிய பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால ஏற்பாடு


மேலும், கட்சியை நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுப்பது; கொள்கைகள் வகுப்பது; வங்கி கணக்குகளை இயக்க, பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த, பொதுச்செயலர் நியமனம் மிக இன்றியமையாததாக உள்ளது.

அதை முடிவு செய்யும் அதிகாரம், கட்சியின் சட்ட திட்ட விதி, 19(8)ல் பொதுக்குழுவுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது எனவும், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கட்சியின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். 'தேர்வு செய்யப்படும் வரை நியமனம்' என, குறிப்பிட்டுள்ள தால், இது இடைக்கால ஏற்பாடு என, கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், அ.தி.மு.க.,வின் சட்ட திட்ட விதிகளில், பொதுச் செயலர் நியமனம் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. கட்சி யின் பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, விதி, 20 (2)ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட

வேண்டும் என்ற விதியை மாற்ற வோ, திருத்தவோ, பொதுக்குழுவுக்கு கூட அதிகாரமில்லை எனவும், விதி - 43ல், கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், கட்சியின் அடித்தளமாக, இது உள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு, கட்சியின் சட்ட விதிகளை வகுக்க, திருத்த, நீக்க அதிகாரங்கள் இருந்தும், பொதுச்செயலர் தேர்வை பொறுத்தவரை உள்ள விதியில், எந்த மாற்றமும் செய்ய அதிகாரம் இல்லை. அதனால், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, பொதுச்செயலர்என்பவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, நியமனம் செய்ய முடியாது.

பொதுச்செயலர் இல்லை


என்றாலோ, அந்த இடம் காலியானாலோ, அதற்காக பொதுச்செயலரை நியமிக்கலாம் என, சட்ட திட்ட விதிகளில் எங்கும் கூறப்படவில்லை. ஆனால், பொதுச்செயலர் இல்லாத பட்சத்தில், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலர்கள், பொதுச் செயலரின் பணிகளை மேற்கொள்ளலாம் என, விதி, 21(2)ல் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில், துணைப் பொதுச்செயலர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமித்திருந்தால், பொதுச் செயலரின் பணிகளை, அவர்களால் மேற்கொள்ள முடியும். பொதுச்செயலர் பதவி காலியானாலும், அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதவியில் நீடிக்கலாம்.

தற்போது, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவால், ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்க முடியாது. ஏனென்றால், அவர், தேர்ந்தெடுக் கப்பட்ட பொதுச்செயலர் அல்ல.அ.தி.மு.க., வை பொறுத்தவரை, பொதுச்செயலர் என்றால், அவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.

கட்சியின் நிர்வாகத்துக்கு, பொதுச்செயலரே பொறுப்பு. நிர்வாகிகள் நியமனம், பொதுக்குழு, நிர்வாகக்குழு கூட்டுவதற்கான அதிகாரம் என, பொதுச்செயலரிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

கட்சி சார்பில், தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கும்படி, தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பும் படிவத்தில், பொதுச்செயலர் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.

அதனால் தான், ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, தஞ்சை உள்ளிட்ட, மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்காக, படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது.

Advertisementபொதுச்செயலர் நியமனம் பற்றி, உயர் நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:
அ.தி.மு.க., சட்ட விதி 19 (8)ல்,கட்சியின் கொள்கைகள்,திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், பொதுச்செயலர் நியமனம் பற்றி முடிவு செய் யும்அதிகாரம் இருப்பதாக, எங்கும் குறிப்பிடப் பட வில்லை.நியமிக்க முடியாது

ஒரு கட்சி என்றால், தேர்தல் ஆணையத்துக்கு, அந்த கட்சி அளித்த சட்ட திட்ட விதிகளின் படியே செயல்பட முடியும். அப்படி பார்த்தால், அ.தி.மு.க.,வுக்கு, பொதுச்செயலர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்; நியமிக்கப்பட முடி யாது. தேர்தல் ஆணையத்துக்கு, இந்த பிரச் னையை, கட்சி உறுப்பினர்களால் கொண்டு செல்ல முடியும்.

அது மட்டுமின்றி, சசிகலா நியமனத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர வும் முடியும். பொதுச்செயலர் தேர்தல் என்பதும், முறைப்படி நடக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பு, விண்ணப்பம் பெறுதல் என, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட வேண்டும். அதன்படி, முறையாக பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.இவ்வாறு மூத்த வழக்கறிஞர் கூறினார்.

ஏற்கனவே, சசிகலாவை பொதுச்செயலராக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை கோரி, சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது, பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டு விட்ட தால், இதையும் எதிர்த்து, சசிகலா புஷ்பா தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அடுத்த வாரத்தில், இதை எதிர்பார்க்கலாம்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்
31-டிச-201619:03:37 IST Report Abuse

CHANDRU-PARIS///அ.தி.மு.க.,வின் சட்ட திட்ட விதிகளில், பொதுச் செயலர் நியமனம் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. கட்சி யின் பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, விதி, 20 (2)ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற வோ, திருத்தவோ, பொதுக்குழுவுக்கு கூட அதிகாரமில்லை எனவும், விதி - 43ல், கூறப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு, கட்சியின் சட்ட விதிகளை வகுக்க, திருத்த, நீக்க அதிகாரங்கள் இருந்தும், பொதுச்செயலர் தேர்வை பொறுத்தவரை உள்ள விதியில், எந்த மாற்றமும் செய்ய அதிகாரம் இல்லை. அதனால், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, பொதுச்செயலர்என்பவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, நியமனம் செய்ய முடியாது/// தன் காலத்திற்கு பிறகு எதிர்காலத்தில் இப்படி ஏதாவது ஏடாகூடமா நடக்கும் என்று தான் அதன் நிறுவனர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றே தீர்க்கதரிசனமா தொலைநோக்கு பார்வையோடு பொதுக்குழுவுக்கு, கட்சியின் சட்ட விதிகளை வகுக்க, திருத்த, நீக்க அதிகாரங்கள் இருந்தும், பொதுச்செயலர் தேர்வை பொறுத்தவரை உள்ள விதியில், எந்த மாற்றமும் செய்ய அதிகாரம் இல்லை. அதனால், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, பொதுச்செயலர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, நியமனம் செய்ய முடியாது. அது மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச்செயலர் தேர்ந்தெடுக்க படவேண்டும் என்று விதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்..... தலைவரோட தீர்க்கதரிசனம்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
31-டிச-201618:06:57 IST Report Abuse

Balajiஇதெல்லாம் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகளுக்கு தெரியாமலா இருக்கும்???? இருந்தும் மீறுகிறார்கள் என்றால் இதை எங்கு கொண்டு போய் சொல்வது.... முழு அதிகாரத்துடன் சசியின் பிடியில் கட்சி சென்றால் அவ்வளவு தான்......... இதை மக்களும் அடிமட்ட தொண்டர்களும் உணர்ந்துள்ளனர் என்பது வரை சந்தோசம் தான்....... இவரால் தேர்தலை எதிர்கொண்டெல்லாம் வென்றுவிடுவார் என்று சொல்ல முடியாது..... அவருக்கு எதிர்ப்பு தான் அதிகம் இருக்கிறது...... இதை அவரது போஸ்டர் கிழிப்பதையும் இவரது படத்தில் மட்டும் சாணி அடிப்பதிலும் உணர முடிகிறது........

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-டிச-201615:28:01 IST Report Abuse

Nagarajan Dஅடிமைகள் ராஜ்ஜியத்தில் யார் தலைவராக இருந்தால் என்ன. நம்ம நாட்டு சட்டம் இருக்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. நாம கேஸ் போடுவோம் ஆனா கோர்ட் வாய்தா கொடுத்தே சாவடித்து விடும். சிதம்பரம் செட்டியார் தேர்தல் ரிசல்ட் கேஸ் இன்னும் முடியலே அவன் கொள்ளை அடிச்சிட்டு போய்ட்டான். இப்ப அவன் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வந்த என்ன வராட்டி என்ன.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X