நிர்வாணமாக திரிவதால் பெண்கள் மானபங்கம்: சமாஜ்வாதி எம்.எல்.ஏ, பேச்சு

Updated : ஜன 03, 2017 | Added : ஜன 03, 2017 | கருத்துகள் (85)
Share
Advertisement
பெங்களூரு, பெண்கள் மானபங்கம், நிர்வாணம், சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி

புதுடில்லி: நிர்வாணமாக திரிவது பெண்கள் மத்தியில் கலாசாரமாகி வருவதால், பெங்களூருவில் மானபங்கபடுத்தப்பட்டதாக சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி கூறியுள்ளார்.


சர்ச்சை:

பெங்களூரில், டிச., 31 நள்ளிரவு, பிரபலமான, எம்.ஜி., ரோட்டில், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஏராளமான பெண்களும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, சிலர், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த பெண்கள், போலீசாரிடம் முறையிட்டனர். இந்த சம்பவம், பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


மாறும் கலாசாரம்:

இது தொடர்பாக சமாஜ்வாதி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி கூறியதாவது: நிர்வாணமாக திரிவதை பெண்கள் பேஷனாக சொல்கின்றனர். இதனால், மானபங்க சம்பவம் நடக்க காரணமாகிறது. நமது கலாசாரத்தை மீறி நடப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கலாசாரம் மாறி வருகிறது. மேற்கத்திய கலாசாரம் நமது கலாசாரத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஈர்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், நாம் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும். இருள் சூழ்ந்த பிறகு, நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் செல்ல நினைத்தால், கணவர், தந்தையுடன் தான் செல்ல வேண்டும். வெளியாட்களுடன் அல்ல என்றார். இவ்வாறு கருத்து தெரிவித்ததற்காக, அபு ஆஸ்மிக்கு தேசிய பெண்கள் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
04-ஜன-201716:14:11 IST Report Abuse
S.P. Barucha விழா காலங்கள்,பண்டிகை நாட்களில் கொண்டாட்டம் என்றால், நாகரிகமான சமுதாயத்தில் , தெருக்களில் காம மிருகங்களின் அட்டூழியங்கள் தான் அதிகம்.தெரு பொறுக்கிகளை அடக்கவேண்டியது காவல் துறையின் இன்றியமையாத பொறுப்பு, பெண்கள் நிர்வாணமாக சென்றால் வழக்கு பதிவு செய்யலாம், பன்றி கூடத்தான் நிர்வாணமா சாக்கடையில் படுத்துள்ளது, ஏன் இந்த காம வெறியன்களெல்லாம் சாக்கடையில் போய் படுக்க வேண்டியதுதானே காவல் துறையினர் எந்த விழா கொண்டாட்டத்திற்கு முன்பும் எச்சரிக்கை அறிவிப்பு செய்யலாம், மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி க்கு அவ்வளவுதான் அறிவு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-ஜன-201707:04:36 IST Report Abuse
Lion Drsekar எப்படியும் வாழலாம் என்றாகிவிட்டது, மிருகங்கள் நம்மைப்பார்த்து தலைகுனியும் அளவிற்கு நாகரீகம் வளர்ச்சி அடைந்து கொண்டு போகிறது, குறிப்பாக பொது இடங்கள் படுக்கை அறையை விட மோசமாக மாறிவிட்டது, யாரிடம் போய் அழ? வந்தே மாதரம்
Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
04-ஜன-201716:10:48 IST Report Abuse
Renga Naayagiஇவர் சிங்கம்னு போட்டுக்கிட்டு எங்கே வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பண்ணுவார் போல...
Rate this:
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
04-ஜன-201706:47:28 IST Report Abuse
Renga Naayagi இவருடைய மருமகள் ஆயிஷா தகியா நடித்த படங்களை பார்த்தால் இப்படி பேச மாட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X