கோவிந்தராசனின் மணக்கும் தாழம்பூ

Updated : ஜன 04, 2017 | Added : ஜன 03, 2017 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவிந்தராசனின் மணக்கும் 'தாழம்பூ'முப்பரிமாண அட்டை,கண்களில் ஒற்றிக்கொள்ளும் வண்ணம் மற்றும் அழகிய தாள்களில் அச்சாகி புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தகாலத்தில் ஒருவர் விடாப்பிடியாக கையெழுத்து பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்.கடந்த 38வருடங்களாக தாழம்பூ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்திவரும் எம்.எஸ்.கோவிந்தராசன்தான் அவர்.புதுக்கோட்டை
கோவிந்தராசனின் மணக்கும் தாழம்பூ

கோவிந்தராசனின் மணக்கும் 'தாழம்பூ'
முப்பரிமாண அட்டை,கண்களில் ஒற்றிக்கொள்ளும் வண்ணம் மற்றும் அழகிய தாள்களில் அச்சாகி புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தகாலத்தில் ஒருவர் விடாப்பிடியாக கையெழுத்து பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
கடந்த 38வருடங்களாக தாழம்பூ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்திவரும் எம்.எஸ்.கோவிந்தராசன்தான் அவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் விஜயபுரம் கிராமத்தில் தற்போது சித்த மருத்துவராக இருக்கும் கோவிந்தராசன் பள்ளியில் படிக்கும் போதே சிற்றிதழ் நடத்திவந்தார்.
பிறகு ஒவிய ஆசிரியர் படிப்பை முடித்து தனது குடும்ப தொழிலான மருத்துவத்தொழிலுக்கு வந்த போது மீண்டும் சிற்றிதழ் ஆசை துளிர்விட்டது.அந்த நேரம் வானொலியில் 'தாழம்பூவின் நறுமணத்தில் தரமிருக்கும்.. நல்ல தரமிருக்கும்' என்ற பாடல் காற்றில் மிதந்துவர தாழம்பூ என்று தன் சிற்றிதழுக்கு பெயர் வைத்துவிட்டார்.

1977ல் இரண்டு இதழ்களை கைகளால் எழுதி தயாரித்தார், அதிலும் இரண்டாவது இதழ் கார்பன் பேப்பரில் உருவாகியதாகும்.கையால் எழுதிய இதழை பிலிப்பைன்ஸ் வானொலிக்கு அனுப்பிவைத்தார்.அந்த வானெலியில் தாழம்பூ பற்றி விரிவான விமர்சனம் வரவே நிறைய பேர் கோவிந்தராசனை தொடர்பு கொண்டு பாராட்டி எங்களுக்கும் அந்த இதழ் கிடைக்குமா? என்று கேட்டனர்.
இதனால் உற்சாகம் வரப்பெற்ற கோவிந்தராசன் இருபது முப்பது என்று கார்பன் பேப்பர்கள் வைத்து எழுதி அட்டையில் வாட்டர் கலரில் ஒவியம் வரைந்து அடுத்தடுத்து இதழ்கள் தயாரித்து அனுப்பிவந்தார்.

இந்த நிலையில் ஜெராக்ஸ் எனப்படும் ஔியச்சு இயந்திரம் வரவே கார்பன் வைத்து எழுதும் வேலை குறைந்தது.ஆனால் திருச்சியில் மட்டுமே இந்த ஔியச்சு இயந்திரம் இருந்ததால் செலவு அதிகரித்தது ஆனாலும் சிற்றிதழ் ஆர்வம் காரணமாக தொடர்ந்து நடத்தினார்.
இருபத்து நான்கு பக்கம் கொண்டு இரு மாதத்திற்கு ஒரு முறை வரும் இவரது தாழம்பூ இதழில் புதிய கவிஞர்களின் கவிதைகள் பிரதான இடம் பிடித்திருக்கிறது இதைத்தாண்டி மருத்துவம் பிரபலங்களின் பேட்டி வாசகர்கள் கடிதங்கள் ஜோக்ஸ் என்று பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றது.வாசகர்களே நிறைய எழுதுவது இதழில் பிளஸ் பாயிண்ட்.


கம்ப்யூட்டர் வந்த பிறகு எதற்கு கையால் எழுதவேண்டும் என்று எண்ணி விஷயங்களை தட்டச்சு செய்து இதழ்களை வெளியிட்டார், ஆனால் வாசகர்கள் மத்தியில் தட்டச்சு பிரதிகளுக்கு வரவேற்பு இல்லாமல் போகவே மீண்டும் கையால் எழுதி ஜெராக்ஸ் எடுத்தே இப்போதும் நடத்திவருகிறார்.
இதழில் வெளிவந்த பேட்டிகளை தொகுத்து 'சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு' என்று தனிபுத்தகம் போட்டார் புத்தகம் சிறப்பாக வந்தாலும் அதில் நிறைய நட்டம் ஏற்படவே அத்துடன் புத்தகஆசையை மூட்டைகட்டிவைத்துவிட்டார்.

ஒரு காலகட்டத்தில் இதழ் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்ட போது இவரது மனைவி மாதவிதான் மிகவும் உற்சாகம் கொடுத்திருக்கிறார்.இதன் காரணமாக தொய்வின்றி இதழ் வரத்து தொடர்கிறது.
இவரது இந்த இதழ் பணியினை பாராட்டி இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.இவரது வலது கால் மூட்டு பாதிக்கப்பட்டு தற்போது நடக்கமுடியாத சூழ்நிலை ஆனாலும் விடாப்பிடியாக இதழ் நடத்திவரும் இவரை பாராட்டி சமீபத்தில் 'சிற்றிதழ் போராளி' என்ற பொருத்தமான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

தொட்டுவிடும் துாரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் கோவிந்தராசனைப் பாராட்டுவதும் அவரது இதழை பாதுகாப்பதும் நமது கடமையாகும்,கோவிந்தராசனுடன் பேசுவதற்கான எண்:9688013182.
எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-பிப்-201704:38:43 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே உண்மையில் வணங்க தகுந்தவர் இவர், முடிந்தால் இவரது ஒரு பிரதி வாங்க வேண்டும்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-ஜன-201713:39:40 IST Report Abuse
Cheran Perumal கையெழுத்து பத்திரிக்கை நடத்துவது எத்தனை கடினமான செயல் என்பது நடத்திப்பார்த்த எனக்கு தெரியும். பள்ளி நாட்களில் ஆக்கபூர்வ செய்திகளை உள்ளடக்கி வைத்திருந்த இளம் உள்ளங்களுக்கு வடிகாலாக செயல்பட்ட ஒவ்வொரு இதழும் ஒரு தாயின் பிரசவ வேதனையை ஒத்த உணர்வுடன் வெளிவந்து எங்கள் கைகளில் தவழும்போது புதிதாக மலர்ந்த ஒரு சேயை கண்ட மகிழ்வு ஏற்படும். கால ஓட்டத்தில் வறுமையை வெல்ல படிப்பை தீவிரப்படுத்த வேண்டியிருந்த நிலையில் கனவுகள் கலைந்து வாழ்க்கை சக்கரத்தில் சுழல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது எல்லாமே நின்றுபோனது. அந்த நினைவுகள் மேலெழும்ப திரு.கோவிந்தராஜன் அவர்களின் மகத்தான பணி சிறக்க மன நிறைவுடன் வாழ்த்துகிறேன்.
Rate this:
Cancel
P.Subramanian - Chennai,இந்தியா
07-ஜன-201712:57:19 IST Report Abuse
P.Subramanian தாழம்பூ தலையில் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வாசனை தெரியாது ஆனால் சுற்றி இருப்பவர்களுக்கு வாசனையை நன்கு பரப்பும். அதுபோல் சிற்றிதழ் திலகம் திரு கோவிந்தராசன் அவர்களின் தாழம்பூ மேலும் தமிழ் மணம் எனது நல்வாழ்த்துக்கள். தாழம்பூ சிற்றிதழ் வாசனையை வெளிபடுத்திய தினமலர் ஆசிரியருக்கு நன்றி. பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை கைபேசி 9894043308
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X