அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழிக்கு பதவி இல்லை: பொதுக்குழுவுக்கு முன் குடும்ப குழப்பம்

Updated : ஜன 05, 2017 | Added : ஜன 04, 2017 | கருத்துகள் (73)
Advertisement
கனிமொழி, பதவி கிடையாது, பொதுக்குழு, குடும்ப குழப்பம்

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதால், கடந்த மாதம் கடைசியில் நடக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம், இம்மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தப் பொதுக்குழு மூலம் எப்படியும் தன்னை, கட்சியின் புதிய செயல் தலைவராக அறிவித்து விட வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்ட, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும், கட்சியின் மகளிர் அணி செயலருமான கனிமொழிக்கு, எந்த புதிய பதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராகவும்; பொருளாளராகவும்; சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின், கட்சியின் தலைவர் ஆகி விட வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கான வாய்ப்பு வரும்போதெல்லாம், அதை யாராவது தட்டிவிடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இன்று நடந்த பொதுக்குழுவில் ஒரு வழியாக செயல் தலைவராகி விட்டார். கூடவே, கட்சியின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலர் பதவியை கொடுக்க ஒப்புக்கொண்டவர், கடைசி நேரத்தில், அதெல்லாம் கிடையாது என கட்டையைப் போட்டார். இதனால், குடும்பத்தில் பொதுக்குழுவுக்கு முன், கடும் குழப்பம் நிலவியது. இதனால், கனிமொழி அதிர்ச்சியில் உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
05-ஜன-201719:54:14 IST Report Abuse
Sam Rajarajan ஸ்டாலின் செயல் தலைவர் ஆன பிறகு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. கனி மகிளர் அணி தலைவியாய் இருக்கட்டும். பிறகு பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
05-ஜன-201713:07:56 IST Report Abuse
Pasupathi Subbian எந்த காரணத்தை முன்னிட்டும் ஸ்டாலின் பதவியையே அல்லது காட்சியையோ மற்ற வாரிசுகளுடன் பங்குபோட தயாரில்லை. நாளை எந்த ஒரு பிரச்சனைக்கும் இன்றே முற்று புள்ளி வைக்கிறார். அவரவர்களுக்கு ஒதுங்கவேண்டியது ஒதுங்கிவிட்டது, இனி கட்சியும் அதை சார்ந்த சொத்துக்களும் மட்டுமே இவருக்கு சொந்தம் , இதில் அடுத்த வாரிசுகள் வரும் காலத்தில் பங்குபோடவேண்டிய நிலை உருவாக கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். ஆக அவரின் முடிவு சொத்துப்பிரச்சனையை முன்வைத்துதானே தவிர மக்கள் சேவையை பற்றியது அல்ல.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - chennai,இந்தியா
05-ஜன-201705:48:57 IST Report Abuse
vidhuran அதெல்லாம் ஒன்னும் இல்லை கலைஞருக்கு ஈடான ஒரு பதவியை ஸ்டாலின் ஆனாலும், கனிமொழி மற்றும் அழகிரி ஆனாலும் யாருக்கும் விட்டு கொடுக்கும் பக்குவம் தலைவருக்கு இருக்கவே இருக்காது. இந்த விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்றால் இளைஞர் அணியை பகைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பதால், முதலில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவியை கொடுத்து அவரை முழுவதுமாக தலைவராய் ஏற்று விட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 70 வயசுக்கு மேல் உள்ளவர்களை கழட்டி விடும் திட்டம் என்று நினைக்கிறேன். ஊடகங்களில் பெரிது படுத்துகிறமாதிரி ஸ்டாலின்-கனிமொழிக்கு அதிகார போட்டி இருப்பதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X