அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குத்துமதிப்பாய் ஜெ.,யின் சொத்து மதிப்பு!

கர்நாடகாவில் நடந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 306 சொத்துகள் பட்டியலிடப்பட்டன. 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்பதே ஜெ., சமீபமாய் அதிகமாய் உச்சரித்த வார்த்தை. தற்போது ஜெயலலிதா இறந்த நிலையில், 'அம்மா'வாக தொண்டர்கள் நினைத்த ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது உறவினருக்கா, குழந்தையாக நினைத்த தொண்டர்களுக்கா, குடும்பமாக நினைத்த கழகத்துக்கா அல்லது அவர் கூட இருந்த கூட்டத்துக்கா? சம்பந்தப்பட்டவர்கள் தான் விளக்க வேண்டும்.

இந்த 306 சொத்துக்களில் முதல் 100 சொத்துக்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. 101 முதல் 200 வரை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாளை மீதமுள்ள சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.

குத்துமதிப்பாய் ஜெ.,யின் சொத்து மதிப்பு!

101. பையனுார் கிராமம், சர்வே எண். 379/2ல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
102. பையனுார் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில், 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில், 69.78 ஏக்கர் நிலம்.
107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில், 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில், 42.31 ஏக்கர் நிலம்.
109. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில், 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.
110. சோளிங்கநல்லுார் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.
111. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில், 12.70 ஏக்கர் நிலம்.
112. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில், 14.42 ஏக்கர் நிலம்.
113. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில், 8.6 ஏக்கர் நிலம்.
114. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில், 6.98 ஏக்கர் நிலம்.
115. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.
116. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.
117. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் 89.62 ஏக்கர் நிலம்.
118. சேரகுளம் கிராமம், சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில், 80.95 ஏக்கர் நிலம்.
119. சேரகுளம் கிராமம், சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில், 71.57 ஏக்கர் நிலம்.
120. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில், 68.09 ஏக்கர் நிலம்.
121. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் 78.09 ஏக்கர் நிலம்.
122. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6,794ல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.
123. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6,794ல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.
124. சேரகுளம் கிராமம், சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.
125. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.
126. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரகுளம் கிராமம், சர்வே எண். 1,30,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.
127. வண்டாம்பாளை கிராமத்தில், ராமராஜ் அக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.
128. வண்டாம்பாளை கிராமத்தில், சர்வே எண். 79ல் 3.11 ஏக்கர் நிலம்.
129. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.
130. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்;
வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 84/1ல் 5.19 ஏக்கர் நிலம்.
131. வண்டாம்பாளை கிராமம், மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.
132.வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 81/4ல் 3.84 ஏக்கர் நிலம்.
133. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.
134. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.
135. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில், 8.10 ஏக்கர் நிலம்.
136. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில், 9.65 ஏக்கர் நிலம்.
137. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில், 10.29 ஏக்கர் நிலம்.
138. சேரகுளம் கிராமம், சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில், 16.51 ஏக்கர் நிலம்.
139. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் 30.75 ஏக்கர் நிலம்.
140. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில், 51.40 ஏக்கர் நிலம்.
141. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில், 59.82 ஏக்கர் நிலம்.
142. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில், 8.32 ஏக்கர் நிலம்.
143. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில், 8.65 ஏக்கர் நிலம்.144. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 2ல் 1.08 ஏக்கர் நிலம்.

145. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20.1.1996 அன்று 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6.4.1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் அக்ரோ மில் நிறுவனத் தால் கொடுக்கப்பட்டுள்ளது.
146. வண்டாம்பாளை ராமராஜ் அக்ரோ மில்ஸ் வளாகத்தில், வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்டதொகை 57 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
147. வண்டாம்பாளை ராமராஜ் அக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக் காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
148. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 1ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
149. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/1ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
150. லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை 10 லட்சம் ரூபாய்.
151. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 611/2ல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
152. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.
153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
156. சென்னை லஸ் அவென்யூசர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரின்டர்ஸ் பெயரில்)
158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.
160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1யில் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் 3,197 சதுர அடி மனை.
163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3,077 மற்றும் 3,079ல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.
164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் ஏழு ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் 15.71 ஏக்கர் நிலம்.
166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 9,00 ஏக்கர் கோடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.
167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.
168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப்-யில் 210.33 ஏக்கர் நிலம்.
169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் 20.89 ஏக்கர் நிலம்.
170. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில், 2.03 ஏக்கர் நிலம்.
171. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில், 2.34 ஏக்கர் நிலம்.
172. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில், 90 சென்ட் நிலம்.
173. கடலுாரில் இண்டி-டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்காக, செலவிட்ட தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.
174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130ல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94யில் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.
176. பையனுார் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரின்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பியதற்காக செலவிடப்பட்ட தொகை, இரண்டு கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி -யில் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் ஒரு கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக்கு உட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில், ஆறு கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.
180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை, ஐந்து கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36ல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவிட்ட தொகை, ஏழு கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150ல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
183. சென்னை, சோளிங்கநல்லுார், எண். 2/1யில் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
184. சென்னை மயிலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.

Advertisement

185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல்கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் ஐந்தில் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
190. சென்னை கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4யில் மனை எண். எஸ். 7ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9 யில் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
192. வ.உ.சி., மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.
193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4,110ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
194. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில் அபிராமபுரம், இந்தியன் வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.
195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.
196. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில், சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.
197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
198. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
199. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.
200. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.

குத்துமதிப்பாய் ஜெ.,யின் சொத்து மதிப்பு!


கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், ஆர்.கே., நகர் தொகுதியில், ஜெ., வேட்புமனு தாக்கல்
செய்தபோது, அவர் கொடுத்த தகவலின்படி, அவரிடம் இருந்த கையிருப்பு ரொக்கம், 41 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

ஜெயலலிதாவுக்கு, சென்னை, செகந்திராபாத், நீலகிரி ஆகிய இடங்களில், 25 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனக் கணக்குகள் உள்ளன. அவற்றில், ஒரு சில வங்கிகளில் ஐந்து கணக்குகள் வரை இருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. மொத்த முள்ள, 25 கணக்குகளில், மொத்தமாக, 10.63 கோடி ரூபாய் இருந்தது.

ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைஸஸ், கோடநாடு எஸ்டேட், ராயல்வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகிய ஐந்து கம்பெனிகளில், பங்குதாரராக அவருக்கு இருந்த சொத்தின் மதிப்பு, மொத்தம், 27.44 கோடி ரூபாய். அவர் தந்துள்ள தகவலின்படி, 21,280.300 கிராம் தங்க நகையும், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,250 கிலோ வெள்ளிப்பொருட்களும் அவரிடம் இருந்தன. தன்னிடம் ஒன்பது வாகனங்கள் இருப்பதாகக் கூறி, அதன் பட்டியலையும் அவர் கொடுத்திருந்தார்; அவற்றின் மொத்த மதிப்பு, 42.25 லட்சம் ரூபாய்.

வேட்புமனுவில், ஜெ., தாக்கல் செய்த கணக்கில் இருந்தவை இவை. டி.என் 09 பி.இ., 5969 என்ற பதிவு எண் கொண்ட, 'டொயோட்டோ லேண்ட் குரூசர் எல்.சி., 200' மாடல் காரையும், டிஎன் 09 பிஇ 6167 என்ற பதிவு எண் கொண்ட இன்னொரு காரையும் ஜெ., பயன்படுத்தி வந்தார். அவற்றை, இந்த வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. அந்த கார் ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம்.

அசையா சொத்துக்களில், ஆந்திர மாநிலம் ஜிடிமேட்லாவில், 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.50 ஏக்கர் விவசாய நிலமும், செய்யூரில், 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3.43 ஏக்கர் விவசாய நிலமும், ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில், 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள, 651.18 ச.மீ வீடும், சென்னை மந்தைவெளியில், 43.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,206 சதுர அடியுள்ள வணிக கட்டடமும், சென்னை பார்சன் மேனரில், 4.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 790 ச.அடி வணிக கட்டடமும் ஜெயலலிதா பெயரில் உள்ளன.

இவை தவிர போயஸ் கார்டனில் இரண்டு இடங்கள், ஜெயலலிதா பெயரில் இருக்கின்றன. மொத்தம், 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 கிரவுண்ட் வீடும், 43.96 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, 10 கிரவுண்ட் வீடும் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த அசையா சொத்துக் களின் மொத்த மதிப்பு, 72.09 கோடி ரூபாய்.

ஒட்டு மொத்தமாக, அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும், 113 கோடி ரூபாய். இந்த சொத்துக் களின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டால், பல மடங்கு அதிகமாக இருக்கும். பல்வேறு கம்பெனிகளில் பங்குதாரராக ஜெயலலிதா இருப்பது தொடர்பான விபரங்கள், இந்த வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, பையனுார் பங்களா என அதன் பட்டியல் வெகு நீளம். குத்துமதிப்பாய் ஜெ., சொத்து மதிப்பை, மொத்தமாய் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், சத்தியமாய் தலை சுற்றிப் போகும்.


Advertisement

வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
06-ஜன-201709:45:34 IST Report Abuse

மணிமேகலை  துப்புக்கெட்ட தமிழா இனியாவது விழித்துக்கொள்.

Rate this:
murugavel - muscat,oman  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-201723:07:46 IST Report Abuse

murugavelporkathir venthan comment really correct.just imagination j was pm during death.

Rate this:
venkates - ngr,இந்தியா
05-ஜன-201722:22:38 IST Report Abuse

venkatesஎம்ஜிஆர் போல ஜெயும் அவர்கள் சொத்தை சிறிது அவர்கள் குடும்ப வாரிசுக்கும், பெரும்பாலும் மக்கள் மற்றும் அவர் கட்சிக்கும் அளிப்பதே சாலச்சிறந்தது

Rate this:
மேலும் 160 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X