கூட்டங்களில் பேசிப் பழக்கமில்லாததால் சசிகலா திணறல்! | கூட்டங்களில் பேசிப் பழக்கமில்லாததால் சசிகலா திணறல்: அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் பேச தெரியாமல் தவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா திணறல், அ.தி.மு.க., பேச தெரியாமல் தவிப்பு

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா திணறல், அ.தி.மு.க., பேச தெரியாமல் தவிப்பு

ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை.

ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, அவர் பேச வேண்டிய உரையை, ஒவ்வொரு பக்கமாக எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்தார். கட்சி பொதுக் குழு மற்றும் பொதுக் கூட்டங்கள்

அனைத்திலும், ஜெ., பேசுவதை வேடிக்கை பார்க்கும், பார்வையாளராக மட்டுமே இருந்தார்.

ஜெ., மறைந்ததும், அவர் வகித்து வந்த, பொதுச்செயலர் பதவியை, ஏற்றுக் கொண்டார். இதற்கு அவருக்குள்ள ஒரே தகுதி, ஜெ., உடன் இருந்தார் என்பது மட்டுமே. அவருக்கு கூட்டங் களில் பேசத் தெரியுமா; அரசு நடைமுறைகள் தெரியுமா; கட்சி நிர்வாகம் தெரியுமா என, எதுபற்றியும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிந்திக்கவில்லை.

கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எதிர்ப்பையும் கண்டு கொள்ள வில்லை. பதவியை தக்க வைத்துக் கொள்வதற் காக, மூத்த நிர்வாகிகள், சசி புராணம் பாடி வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக, கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றதும், உள் அரங்கில், கட்சி நிர்வாகிகள் மத்தியில், முதன் முறையாக பேசினார்.

அப்போது, எழுதி வைத்திருந்ததை படித்தார்; அதையும், அவரால் சரளமாக படிக்க முடிய வில்லை. ஜெ., குறித்து பேசும் போது, கண்ணீர் சிந்தியதால், அவரது பேச்சு அப்படி உள்ளது என, கட்சி நிர்வாகிகள் கருதினர். ஆனால், ஜன., 4 அன்று காலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை, கட்சி தலைமை அலுவலகத்தில்சந்தித்தார்.

Advertisement

அப்போது, எழுதி வைத்திருந்ததைக் கூட, சரியாக படிக்க முடியாமல் திணறினார்; அதை கண்டு நிர்வாகிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

பொதுச் செயலராக பதவியேற்ற போது, பேசுவதற்கான அறிக்கையை, வீட்டில் பல முறை பேசி பயிற்சி பெற்றதால், அழுகை, ஏற்ற இறக்கத்துடன், ஓரளவு பேசி சமாளித்தார்; ஆனால்,அடுத்த கூட்டத்தில் தடுமாறி விட்டார்.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


அ.தி.மு.க., பொதுச் செயலரானதும், ஜெயலலிதா போல் நடை, உடை, சிகை அலங் காரத்தை மாற்றி விட்டார் சசிகலா; ஆனால், அவர் போன்று பேச வரவில்லை. நிர்வாகிகள் மத்தியில் பேசும் போதும், எழுதி வைக்காமல், சசிகலாவால் பேச முடிய வில்லை; எழுதி வைத்ததையும், சரியாக படிக்க முடியவில்லை.

நிர்வாகிகள் மத்தியிலேயே, இப்படி பேச முடி யாமல் சொதப்புபவர், மக்கள் கூடும் பொதுக் கூட்டங்களில், அவர்களை கவரும் வகையில் எப்படி பேச முடியும். தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலாவை வைத்து சமாளிப்பது என்பது, பெரும் சவாலாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (323)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
10-பிப்-201714:03:25 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamதமிழகத்தின் தலைவிதியை நாம் என்னவென்று சொல்வது

Rate this:
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
07-ஜன-201716:34:46 IST Report Abuse

எல்.கே.மதிஅ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். கட்சியை விழுங்கி ஏப்பம் விட எண்ணுகிறாரே இதை எல்லாம் எண்ணி, எந்த தொண்டனாவது, வருத்தம் அடைந்தது உண்டா?மானம் கெட்ட ஜென்மங்களே..கட்சி சொத்தை கபளீகரம் செய்ய வந்த காளியாத்தா இந்த சசி கூட்டம்

Rate this:
நிலா - மதுரை,இந்தியா
07-ஜன-201708:13:04 IST Report Abuse

நிலாஇப்போது மத்திய அமைசர் சதி கலாவுக்கு நேரில் வாழ்த்து எல்லாம் கூட்டு களவாணிகள் இந்த தத்தி சதி கலாவுக்கு யார் ஆப்பு வைப்பார்கள்?????? எல்லாம் பணம் தான் பணம் பத்தும் செய்யும் எல்லாம் சுப்ரமணி சாமியின் சந்திரலேகா கொண்டு வந்த சனி இந்த சசிகலா அதுதான் வாய்பொத்திட்டு இருக்கிறார் சு சாமி

Rate this:
மேலும் 320 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X