சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது | சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது:
தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது

அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார்.

 சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது

ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார்.

அதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'தலைமை ஏற்க வர வேண்டும்' என, தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் கார்டன் வீடு வெறிச்சோடி கிடக்க, தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை என, 14 மாவட்டங் களில் இருந்து, ஏராளமான தொண்டர்கள், தீபா வீட்டுக்கு வந்தனர்.

அவர்களிடம் தீபா பேசும் போது, ''என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். தொண்டர் கள் பொறுமையோடு இருக்க வேண்டும். விரைவில், நல்ல முடிவை அறிவிக்கிறேன். ஜெயலலிதாவின் புகழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்ற, தயாராக உள்ளேன்,'' என்றார்.

அப்போது தொண்டர்கள், 'அரசியலுக்கு வர பயப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்' என கோஷமிட்டனர். அதற்கு பதிலளித்த தீபா, ‛‛எனக்கு பயம் எதுவும் இல்லை'' என்றார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தொண் டர்களிடம் கருத்து கேட்டு, என் கருத்தை பகிர்ந்து கொண்ட பின், முடிவை அறிவிப்பேன். தொண்டர் களுடன் கலந்து பேசியே, முடிவு செய்வேன். அ.தி. மு.க.,வை கைப்பற்றுவதா, புதிய கட்சி துவங்குவதா என, இன்னமும் முடிவு செய்யவில்லை.சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை. அவர் முதல்வரா னால், அப்போது கருத்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பேனர்கள் கிழிப்பு


பெரம்பலுார் நகரில், சசிகலாவுக்கு ஆதரவுமற்றும் வாழ்த்து தெரிவித்து, நகரின் முக்கிய இடங்களில், அவரது ஆதரவாளர்கள், 'டிஜிட்டல்' பேனர் வைத் தனர். அவற்றில் உள்ள, சசிகலா புகைப்படங் கள் கிழிக்கப்பட்டன.

தம்பிதுரையின் சசி புராணம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 30ம் நாள் நினைவு மவுன ஊர்வலம், கரூரில் நடந்தது. ஊர்வலம் முடி வில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து பேசா மல், சசிகலா புராணம் பாடினார். இது, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

தை மாதம் அரசியல் பிரவேசம்


தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவரும் வர விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், தன் முடிவை, தை மாதம் அறிவிக்கலாம் என, அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரண மாகவே, அவர் விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறி வருகிறார்.

Advertisement


மதுரையில் குமுறல்


மதுரை, ஜெய்ஹிந்த்புரம், 90வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் போஸ். மாநகராட்சி யில் சுகாதார குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர், ''என் போன்ற கட்சிக்காரர்களுக்கு, சசிகலா தலைமை பிடிக்கலை. இதே மனநிலை யில் தான் தொண்டர்கள் உள்ளனர்.

தீபா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். அவர் முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். அவர் அரசியலுக்கு வராதபட்சத்தில், நாங்கள் கட்சியை விட்டு விலகி விடுவோம்,'' என்றார்.

இந்நிலையில், தீபா ஆதரவாளர்கள், 7ம் தேதி, கடலுாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கிராமங்களில் தீபாவுக்கு பெருகும் ஆதரவுசென்னை செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு


திண்டுக்கல்:தமிழக கிராமங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெருகும் ஆதரவு குறித்தும், அவருக்கு ஆதரவாக சென்னை செல்லும் வாகனங்கள் குறித்தும் உளவுத்துறை யினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்குப்பின், சசிகலாவை விரும்பாத தொண்டர்களிடையே, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வேடசந்துார், வடமதுரை, வத்தலகுண்டு, நத்தம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

போலீசார் தடை விதித்த போதும், எதிர்ப்பை மீறி ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் தீபா விற்கு ஆதரவு தெரிவிக்க பலர் சென்னை சென்ற வண்ணம் உள்ளனர். அதேநேரம் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும் நடக்கிறது.

உளவுத்துறை கணக்கெடுப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிராமங்கள், கட்சியினர், நிர்வாகிகள் விபரங்களை உளவுத் துறை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர் எத்தனை ஆண்டுகளாக கட்சியில் உள்ளார், அவர் அ.தி.மு.க., விலும், உள்ளாட்சி அமைப்பிலும் பதவிகள் ஏதும் வகித்துள்ளாரா என்பது குறித்தும் தகவல்கள் திரட்டுகின்றனர்.

வாகனங்கள் கண்காணிப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அவரின் வீடு முன் ஆதரவாளர்கள் தினமும் குவிகின்றனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்களையும், யார் தலைமையில் செல் கின்றனர் என்ற விபரங்களையும் உளவுத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
07-ஜன-201701:34:56 IST Report Abuse

கீரன் கோவைபோயஸ் கார்டனில் வேலைக்காரி கொடுமை என்று தி நகருக்குப் போனால் அங்கே சொந்தக்காரி கொடுமை சிங்கு சிக்குன்னு ஆடிட்டிருக்கு..

Rate this:
06-ஜன-201721:22:18 IST Report Abuse

DeepasankarDeepa mam we will support you. we believe that you have sufficient political knowledge as well. please occupy the Poes garden soon and take position

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
06-ஜன-201721:45:25 IST Report Abuse

Agni Shiva"Deepa mam we will NOT support you. we believe that you may not have sufficient political knowledge as well. please DON'T occupy the Poes garden soon and NOT take ANY position in the party...

Rate this:
SINGA RAJA - MADURAI,இந்தியா
06-ஜன-201720:37:28 IST Report Abuse

SINGA RAJAஅதிமுகவை பலகீனப்படுத்த அரசியல் எதிரிகள் சதிவேலைகளை துவங்கியிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் தீபா. அதிமுகவில் பிளவை உண்டாக்கிவிட்டால், யாராருக்கெல்லாம் லாபம்? அதன் பிறகு என்ன நடக்கும்? அரசியல் எதிரிகள் விரும்பிய சரியான சூழல் வந்தபிறகு, திடீரென தேர்தல் நடந்தால் அதிமுகவின் நிலைமை என்ன? தீபாவை நம்பி வந்த அம்மாவின் சில அபிமானிகளின் எதிர்காலம் என்னாகும்? தீபாவிற்கு கட்சி நடத்திச் செல்லும் அளவிற்கு தொலைநோக்குப் பார்வை இருக்கிறதா? இன்றைய சூழலில் கட்சி நடத்தி செல்வது என்பது அத்தனை எளிதா? அதை பெரிய அளவில் வளர்த்துச் செல்லும் அளவிற்கு தீபாவிற்கு பக்குவம் இருக்கிறதா? இவையெல்லாம் தீபாவின் முன் வைக்கப்படுகின்ற கேள்விகள். தீபாவை தூண்டுபவர்கள், காரியம் கைகூடிய பிறகு ஓடிவிடுவார்கள். அதன்பிறகு தீபாவின் நிலை என்ன? ஆகவே, தீபா உண்மையிலேயே, தனது அத்தை ஜெயலலிதா அம்மாவின் மீது பாசம் உள்ளவராக இருந்தால், அதிமுகவின் மீது மாறாத அன்பு கொண்டவராக இருந்தால், தற்சமயம் அமைதி காக்க வேண்டும். தன்னைத் தூண்டுபவர்களின் சூட்சுமத்தை, திட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. அம்மா ஜெயலலிதா அதனை கட்டிக்காத்தவர். இப்போது சசிகலா தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார். அவரது ஆளுமைத்திறத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கடந்த காலங்களில், அதிமுகவை அம்மா வழிநடத்தியதில், அவருக்கு பின்புலமாய் இருந்து செயல்பட்டவர்தான் சசிகலா. அம்மாவிற்குப் பிறகு கட்சியின் தலைமைப்பொறுப்பிற்கு வருகின்ற கட்சிப்பிரதிநிதிகள் அனைவருமே பொறுப்பாளர்கள் தான். அவர்களை, அம்மாவின் மீது அன்புகொண்டோரெல்லாம் ஆதரிக்கவே செய்யவேண்டும். எதிர்காலத்தில் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்கள் எவரும், தலைமைப் பொறுப்பிற்கு எளிதில் வரமுடியும். அதிமுகவெனும் ஜனநாயக கட்சியில், சாதாரண தொண்டனுக்கும் கூட, அத்தகைய பாக்கியத்தை அம்மா உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆகவே, இதனை நன்றாகக் புரிந்துகொண்டு தீபா செயல்பட வேண்டும். தேவையில்லாமல் கட்சிக்கு எதிரான போக்கில் செல்லாமல், பொறுமையாக இருக்கவேண்டும். கட்சியின் பொதுச்செயலாளரை எதிர்த்துப் பேசி, எதிரிகளின் தூண்டிலில் மாட்டி கட்சிக்கு இழுக்கு நேர அனுமதித்திடக் கூடாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், லட்சிய நோக்கத்துடன் ஏழை எளிய பாட்டாளி மக்களின் நலனுக்காகவும், சாதி சமயமற்ற சமத்துவத்தை பேணிக்காக்கவும் உருவாக்கப்பட்ட அதிமுக எனும் சமதர்மமிகு ஆலமரத்தை, யாரும் அவ்வளவு எளிதில் சாய்த்துவிட, எவருக்கும் இடம்கொடுத்து விடக்கூடாது.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஜன-201720:56:42 IST Report Abuse

மதுரை விருமாண்டிஉங்க இனிஷியல் A தானே ? A SINGA RAJA.. அதான் இருக்கும்.....

Rate this:
மேலும் 125 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X