நான் இப்போ 'மினி' ஹீரோயின் - புதுமுகம் யுவஸ்ரீ| Dinamalar

நான் இப்போ 'மினி' ஹீரோயின் - புதுமுகம் யுவஸ்ரீ

Added : ஜன 06, 2017
நான் இப்போ 'மினி' ஹீரோயின் - புதுமுகம் யுவஸ்ரீ

பாதாம் கலந்த இவள் உடலில் பரதமும் சேர்ந்ததால், பாதங்கள் பதமாய் ஜதி போடுகின்றன. விரல்கள் நீண்ட கரங்கள் நளினம் காட்டுகின்றன. ஆரஞ்சு அதரமும், பிறைநிலா வதனமும் அழகுக்கு அணிசேர்க்க, திராவக ஒளிதரும் திராட்சை கண்களுடன் நடிப்பிலும் விருது வேட்டைக்கு கிளம்பியுள்ளார் புதுமுகம் யுவஸ்ரீ. அவரது திரையுலக பிரவேசம் பற்றி, அவர் கூறியது: என் உண்மையான பெயர் யுவஸ்ரீ. பிளஸ் 1 படிக்கிறேன். பிறந்து, வளர்ந்தது புதுச்சேரி. சின்ன பிள்ளையில இருந்து பரதநாட்டியம் ஆடுவேன். 2016 ல் பரதத்துக்காக 'தேசிய விருது'ம் வாங்கியாச்சு.என் பரத நாட்டியம் பார்த்துட்டு, இயக்குனர் சமுத்திரக்கனி ஆபீஸ்ல இருந்து கால் பண்ணினாங்க. பரதத்துல வாங்கினது போல நடிப்புலையும் விருது வாங்கணும்னு மனசுல ஆசை இருக்கு. இப்போதைக்கு 'அம்மா கணக்கு, அப்பா', படங்கள் பண்ணியிருக்கேன். என்னோட பிரண்ட்ஸ்லாம், என்னை படத்துல பார்த்துட்டு, எங்கிட்ட 'ட்ரீட்' கேட்டாங்க. கொடுத்துவிட்டேன். அமலா பால், சமுத்திரக்கனியோடு நடிக்கும் போது முதல்ல பயமா இருந்தது. அப்புறம், போகப் போக, நம்ம அம்மா, அப்பா கூட இருந்தா எப்படியோ அப்படி 'பீல்' பண்ணினேன்.எனக்கும் ஹீரோயின் ஆக வர ஆசையிராதா? இப்போதே நான் 'மினி' ஹீரோயின் தானே. அதுக்கு வீட்ல எனக்கு ரொம்ப 'சப்போர்ட்' பண்றாங்க. படிப்பு, நடிப்பு ரெண்டுக்குமே 'டைம் பிக்ஸ்' பண்ணி, படிப்புக்கு இடைஞ்சல் இல்லாம பார்த்துக்கிடுவேன்.எனக்கு பரதம் தவிர, குத்துப் பாட்டு பிடிக்கும். குத்துப் பாட்டு போட்டாலே வீட்ல ஒரே கூத்தாகத்தான் இருக்கும். லீவுல வீணை வாசிக்க கத்துக்கிட்டு இருக்கேன். ஷாப்பிங் போவேன். அப்புறம், கதை, கவிதை, நாவல்கள் படிப்பேன்.புது வருஷத்துல எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும். எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். ரசிகர்கள்லாம், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக், நெட்'ல நேரத்த போக்காதீங்க. ப்ரீ டைம்ல நல்ல 'புக்'ஸ் படிங்க, என்றார்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X