மூன்று துறை சாதனையாளர் - மோனிகா

Added : ஜன 06, 2017
Share
Advertisement
மூன்று துறை சாதனையாளர் - மோனிகா

மழலை குரல், குழந்தை முகம், தயக்கமில்லா பதில், இப்படி பல்வேறு குணாதிசயங்களை தன்னுள் கொண்டு, சிறு வயது ஆசையை எளிதில் எட்டிப்பிடித்து, சின்னத்திரை முதல் சினிமா வரை தடம் பதித்து, வலம் வருபவர் மோனிகா.ராமநாதபுரம் வந்த இவரது பேட்டி..* உங்களை பற்றி...தஞ்சையில் வளர்ந்த நான் 8ம் வகுப்பு வரை அங்கேயே படித்தேன். கடலுார், சிதம்பரம், என பள்ளி படிப்பு தொடர்ந்தது. எம்.ஏ., சோஷியாலஜி முடித்துள்ளேன். கணவர், குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறேன்.* நடிப்பு அனுபவம்...சினிமா என்பது என் ஆசையில் இல்லை. செய்தி வாசிப்பவராக வரவேண்டும் என்பதுதான் ஆசை. அப்படி தனியார் 'டிவி'யில் செய்தியும் வாசித்து விட்டேன்.* எப்படி சின்னத்திரைக்கு வந்தீர்கள்குழந்தைத்தனமான என் முகம், மழலை குரல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுத்தந்தது. நடிகை ராதிகா, இயக்குனர்கள் பாலச்சந்தர், ஆபாவாணன் ஆகியோர் சீரியல்களில் வாய்ப்பளித்தனர்.* சினிமாவில் நுழைந்தது எப்படி'ரவுத்திரம் பழகு' படத்தில் நடிகர் ஜீவாவின் தங்கையாக நடித்தேன். 'காஷ்மோரா' படத்தில் நிருபர் கேரக்டரில் நடித்துள்ளேன்.இவை எல்லாம் சின்னத்திரையில் என் நடிப்பை பார்த்து கிடைத்த கேரக்டர்கள்.* எந்த துறையில் முத்திரை பதிக்க விருப்பம்...ஊடகத்துறையில் நுழைய வேண்டும் என்ற என் ஆசை சினிமா வரை கொண்டு சேர்த்துள்ளது. நமக்கு பிடித்ததை அர்ப்பணிப்புடன் செய்தால் பிற துறைகளிலும் முத்திரை பதிக்கலாம். இதற்கு பலரை உதாரணம் சொல்லலாம். சின்னத்திரை, சினிமா, ஊடகம் என மூன்று துறைகளில் தடம் பதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. வணிக விளம்பர வர்ணனையாளராக உள்ளேன்.* பிடித்த நடிகர்...தளபதி படத்தில் கலெக்டராக நடித்த அரவிந்தசாமி. சினிமா வாய்ப்பு தொடர்ந்தால் அவரது படத்தில் நடிக்க விரும்புகிறேன்.* குடும்ப வாழ்க்கை பற்றிகாதலித்து திருமணம் செய்து கொண்டேன். சந்தோஷமாக உள்ளேன். எங்களுக்குள் ஈகோ இல்லை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் வாழ்க்கை இனிதாக அமையும்.* புத்தாண்டில் சொல்ல விரும்புவதுஎந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடக்கூடாது. நாளை என்பது தாமதம் மட்டுமின்றி, அது வெற்றியை தராது. யாராக இருந்தாலும் துவண்டு விடாமல் முயற்சியை தொடர வேண்டும். முடிவை பற்றி கவலை படக்கூடாது. நல்லது எனில் இன்றே செய்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் வெற்றி தான்.இவரை தொடர... hmonikaemail@gmail.com.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X