பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சிக்கல்!
100 சதவீதம் 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு
ரயில்வே மாறுவதில்:'இ - வாலட்'டை
தடுக்கும் வகையில் சி.ஏ.ஜி., புது நிபந்தனை

புதுடில்லி:'ரயில்வே விதிகளின் படி, ரயில் வேக்கு முதலில் பணத்தை கட்டிவிட்டு தான், டிக்கெட்களை விற்க வேண்டும்' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவல கம், கண்டிப்பாக கூறியுள்ளது; இதனால், 'இ - வாலட்' முறையில் பணப்பரிமாற்றம் நடக்க முடியாததால், ரயில்வேயை, 100 சதவீதம், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை,ரயில்வே மாறுவதில் சிக்கல்,'இ - வாலட், சி.ஏ.ஜி., புது நிபந்தனை

ரயில்வேயை, ரொக்கமில்லாத பரிவர்த்தனை யாக முற்றிலும் மாற்றும், முயற்சிக்கு, புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது.

மோடி வலியுறுத்தல்


கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 'டிஜிட்டல்' முறையில், பணப்பரிமாற்றம் செய்யும் நடைமுறைக்கு மக்கள் மாற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இணையவழி, வங்கி பணப்பரிமாற்றம், 'இ - வாலட்' பரிமாற்றம் உள்ளிட்ட, ரொக்க மில்லா பரிவர்த்தனைகள் குறித்து, மக்களிடையே தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமரின் உத்தரவுப்படி, மத்திய அரசின், பல துறைகள், இப்போது, ரொக்கமில்லா பரிவர்த்த னைக்கு மாறி வருகின்றன.மத்திய அரசின் இந்த விருப்பத்தை, நிறைவேற்றுவதில், முன்னணியில் இருப்பது ரயில்வேதான். 97 சதவீத சரக்கு போக்குவரத்தை, ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலமே செய்து வருகிறது.

பயணிகளுக்கான சேவையையும் முற்றிலும்

ரொக்கமில்லாமல் பரிவர்த்தனை செய்யும் முயற்சி யில், ரயில்வே தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'பேடிஎம், மொபிகுவிக்' போன்ற நிறுவனங்களின் 'இ - வாலட்' அல்லது 'மொபைல் வாலட்' எனப்படும், மின்னணு பணப்பை மூலமாக பணபரிமாற்றம் செய்ய, ரயில்வே, நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரயில்வே கவுன்டர்களில், நீண்ட வரிசைகளில், மக்கள்காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கில், முன்பதிவு செய்யாத டிக்கெட்களை, மொபைல் வாலட்கள் மூலம் முன் பதிவு செய்யும் முறையை, அமல் படுத்த திட்டமிட்டு உள்ளது.

'ரயில் வாலட்'


'ரயில் வாலட்' என்ற 'மொபைல் ஆப்'ஐ, 2015 ஏப்ரலில், ரயில்வே அறிமுகம் செய்தது. இதன் மூலம், பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்து வரு கின்றனர். இப்போது, அனைத்து வாலட்கள் மற்றும் கார்டுகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக, புதிதாக இரண்டு 'மொபைல் ஆப்'களை, விரைவில் அறிமுகப்படுத்தவும், ரயில்வே திட்டமிட்டுள்ளது. இப்போது, ஐ.ஆர். சி.டி.சி., என்கிற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில் மட்டுமே, இந்த வசதி உள்ளது.

அத்துடன், ஒய்.டி.எஸ்.கே., எனப்படும், பயணிகள் டிக்கெட் வசதி மையங்களில், பி.ஓ.எஸ்., எனப்படும், பாயின்ட் ஆப் சேல் கருவியை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களை பயன்படுத்தி, இந்த மிஷினி லிருந்து, முன் பதிவு, முன்பதிவில்லாத டிக்கெட் களை, பயணிகள் பெற முடியும் ஆனால், இப்போது, அந்த முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி., மறுப்பு


மொபைல்வாலட் நிறுவனங்கள், டிக்கெட்கள் விற்றபின் தான்,பணத்தை ரயில்வேக்கு செலுத்தும். ஆனால், ரயில்வே விதிகளின் படி, யாராக இருந்தாலும், ரயில்வேக்கு முதலில் பணத்தை கட்டிவிட்டு தான், டிக்கெட்களை விற்க வேண்டும்.

டிக்கெட்களை விற்ற பின், ரயில்வேக்கு பணம் செலுத்த, மொபைல் வாலட்களை அனுமதிக்க வேண்டும் என, சி.ஏ.ஜி., எனப்படும், தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்துக்கு, ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால்,

Advertisement

இதை ஏற்க, சி.ஏ.ஜி., மறுத்து விட்டது.

ரயில்வேக்கு முதலில் பணம் கட்டியபின் தான், யாராக இருந்தாலும் டிக்கெட்களை விற்க முடியும்; ஐ.ஆர்.சி.டி.சி., அப்படி தான் செய்து வருகிறது. மொபைல் வாலட்களுக்கும் இது பொருந்தும் என, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது. இதனால், ரயில்வேயின், 100 சதவீத ரொக்கமில்லா பரிமாற்ற முயற்சிக்கு தடை ஏற்பட்டுஉள்ளது.

அனுமதி பெறுவோம்


சி.ஏ.ஜி.,யின் உத்தரவு பற்றி, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரொக்கமில்லா பரிமாற்றத்துக்கு மக்கள் மாற வேண்டும் என்பதில், பிரதமர் மோடி, மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனால், மொபைல் வாலட்கள், டிக்கெட்களை விற்றபின், ரயில்வேக்கு பணம் கட்டுவதற்கு, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு, நிச்சயம் அனுமதி வாங்கி தருவார்.

இது தொடர்பாக, பிரதமர் மற்றும் சி.ஏ.ஜி.,யிடம் விரைவில் அவர் பேசுவார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், இதற்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
முற்றிலும் ரொக்கமில்லா பரிமாற்றம் என்ற நிலையை, ரயில்வே நிச்சயம் எட்டி, சாதனை படைக்கும்.

இப்போது பெரும்பாலான முன்பதிவுகளை, இணையதளம் வாயிலாகவே பயணிகள் செய்கின்றனர். அதேபோல், காகித பயன்பாடும் முற்றிலும் குறைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayadev - CHENNAI,இந்தியா
07-ஜன-201720:30:05 IST Report Abuse

Jayadevஇதெல்லாம் முதலிலேயே தெரிந்தவர்கள், தங்களின் மற்றும் தங்களை சார்ந்தவர்களின் சுய தேவைக்கு மோடி இப்படி ரொக்கமில்லா விஷயத்தை அமல் படுத்த துடிக்கிறார்

Rate this:
makkal neethi - sel,இந்தியா
07-ஜன-201711:44:39 IST Report Abuse

makkal neethi அனைத்து அரசாங்க மற்றும் பிரைவேட் அலுவலகங்கள் ஸ்கூல்கள் காலேஜ்கள் மருத்துவமனைகள் ,காவல் நிலையம்,நகராட்சி,மாநகராட்சி, போன்ற இடங்களில் முதலில் ஸ்வாப் மெச்சினே கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் லஞ்சம் ஒழியும்

Rate this:
naguchennai - chennai,இந்தியா
07-ஜன-201711:12:00 IST Report Abuse

naguchennai"கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்" அடப்பாவிங்களா என்னடா தொபுக்கடீர்னு தோசைய திருப்பி போட்டுட்டீங்க ??

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X