நிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி

Updated : ஜன 15, 2017 | Added : ஜன 08, 2017
Share
Advertisement
நிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி

உள்ளத்தில் உறைந்த விஷயங்கள் வெளிப்படுவது கலையில் தான். இருக்கும் இடம், வாழ்வியல் சூழலை பொறுத்து இவற்றின் பரிணாமம் மாறுகிறது. இந்த கலையால் கோலோச்சியவர்களும் உண்டு. தெருக்கோடிக்கு சென்றவர்களும் உண்டு. இவை இரண்டுக்கும் நடுவில் நீண்ட நாள் தாக்குபிடித்து கலையில் கோலோச்சுவது என்பது சாதாரண விஷயமல்ல.

தன் வாழ்வில் 23 ஆண்டு போராடி இன்றும் கலையில் காலுான்றி நடிப்பில் கோலோச்சி வருகிறார் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரை சேர்ந்த கோபி ஐயப்பன். மலையாள நடிகர் பரத்கோபியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு கோபி (இருவருக்கும் தலையில் முடி இல்லை) என்ற பெயரை வைத்து கொண்டார். தீவிர ஐயப்ப பக்தராக இருந்ததால் 'ஐயப்பன் கோபி' என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி அழகப்பா கலை கல்லுாரியில் படித்தவர். பெற்றோரின் விருப்பத்தால் பேங்க் ஆப் மதுராவில் பணியாற்றினார். வங்கி பணி வாழ்க்கை நடத்த போதுமானதாக இருந்தாலும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் 2003ல் பணியை ராஜினாமா செய்து விட்டு கோடம்பாக்கம் புறப்பட்டார். இவருக்கு முதல் வாய்ப்பு பாலசந்தரால் 'ஜாதிமல்லி' படத்துக்காக வழங்கப்பட்டது. குணசித்திரம், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து தற்போது 80 படங்களில் நடித்துள்ளார்.

காரைக்குடி வந்த அவரிடம் சில நிமிடங்கள்: சிறுவயதில் வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி உள்ளிட்ட நாடகங்களை வீதிகளில் போடும்போது திரும்ப, திரும்ப சென்று பார்ப்பேன். அந்த நாடகங்கள் தான் என்னை நடிக்க துாண்டியவை. வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது பெற்றோர் விருப்பம். டைரக்டர் பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்தாலும், அதன் பிறகு கிடைக்கும் வேடத்தில் நடித்தேன். தற்போது பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன்.

நகைச்சுவை நடிப்பிற்கு வரம்பு கிடையாது. நம் விருப்பத்துக்கு நடிக்கலாம். நகைச்சுவையில் நம் வாழ்க்கை அனுபவங்களை வித்தியாசமாக வெளிப் படுத்த கற்றிருக்க வேண்டும். யதார்த்த காமெடிக்கு எப்போதும் சினிமாவில் ஏறுமுகம் இருக்கும். நகைச்சுவை நடிகர் என்பதால் ஒரு படத்தில் அதிக பட்சம் ஐந்து சீன் வரைக்கும் தான் வழங்கப்படுகிறது. ஒரு படம் முழுவதும் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டும் என்பது நிறைவேறாத ஆசை. நகைச்சுவையின் தன்மை மாறி விட்டது. கவுண்டமணி - செந்தில், வடிவேல் ஆகியோர் படங்களில் அடிவாங்கினால் நகைச்சுவை. அதை மாற்றியவர் சந்தானம். வசனம் மூலம் நகைச்சுவையை அளிப்பவர். தற்போது நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை, நம்பினால் சந்தோஷம், நம்பலைன்னா ரொம்ப சந்தோஷம், என் ஆளோட செருப்பை காணோம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன், என்றார். இவரை பாராட்ட: 98404 66688

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X