கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் ஆணவக்கொலை: இருவருக்கு தூக்கு; தமிழகத்தில் முதல் வழக்கில் தீர்ப்பு

Updated : ஜன 10, 2017 | Added : ஜன 10, 2017 | கருத்துகள் (76)
Advertisement
பெண் ஆணவக் கொலை: இருவருக்கு தூக்கு ; தமிழகத்தல் முதல் வழக்கில் தீர்ப்பு

திருநெல்வேலி; ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை வெட்டிக்கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. ஆணவக்கொலை வழக்கில் தமிழகத்தில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.
திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் 27. ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். 2016 மே மாதம் 3ம் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர்.


காதலரின் அக்காள் கொலை :

மகளை தேடிய சங்கரநாராயணன் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டில் விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை என்றார். ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணியாவார். கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த ஆணவக்கொலையாகும்.
கணவன் மனைவிக்கு தண்டனை : சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், மனைவி செல்லம்மாள் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கடந்த மே மாதத்தில் நடந்த ஆணவக்கொலைக்கு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நெல்லை கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.



பாராட்டுக்குரிய தீர்ப்பு:

தமிழகத்தில் சமீபத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முதன் முதலாக தண்டனை அறிவிக்கப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 8 மாதத்தில் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - erode,இந்தியா
11-ஜன-201707:57:03 IST Report Abuse
Kumar மதிக்கறதே இல்லையே அப்புறம் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் மான ரோஷமுல்லவன் மதிக்காதவர் வீட்டு பெண்ணை பார்ப்பானா?? மதியாதார் தலைவாசல் மிதியாதே.. அதெல்லாம் ரத்தத்துல இருக்கணும்.. இந்த ஒருவிஷயமே அவர்கள் தரத்தை காட்டிக் கொடுத்துவிடும்..
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai ,இந்தியா
11-ஜன-201703:57:49 IST Report Abuse
Karthik படித்த, நல்ல நிலைமையில் உள்ள தலித்தை கூட, ஏழையாக உள்ள உயர் சாதியினர் ஏற்றுக்கொள்வது இல்லை.....ஒரு தலித் சமுகத்தில் பணக்காரனாக இருந்தாலும் அவன் தலித்தாகவே பார்க்கப்படுகிறான். இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்குத்தான். இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்தாலும், தலித் என்கிற முத்திரை அழுத்தமாக உள்ளது. இதற்கு என்ன பதில்?
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
11-ஜன-201701:05:55 IST Report Abuse
ramasamy naicken அப்போலோவில் ஒரு பெண்ணை அனுமதித்து 75 நாட்கள் சித்தரவதை செய்து சாகடித்தால் அது ஆணவ கொலை சட்டத்தில் வராதா?
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
11-ஜன-201706:14:34 IST Report Abuse
karunchilaiகொள்ளைக்காக அல்லவா நடந்தது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X