கனவுகளைக் கைப்பற்றுவோம் 47| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் 47

Added : ஜன 11, 2017

அன்பு தோழமைகள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் .ஒரு தொழிலைத் துவங்குவதற்கு முன்னர் திட்டமிட்டபடி சந்தை ஆய்வு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும் , பல்வேறு கோணங்களில் பல தகவல்களை சேகரிப்பதால் நாம் மேற்கொள்ளும் தொழிலைத் திறமையாக நடத்த சந்தை ஆய்வு உதவும். சரியான சந்தை ஆய்வு செய்ய என்னென்ன செய்யலாம் என்பதை இன்று காண்போம்..உற்பத்தி, விற்பனை, சுற்றுப்புற தகவல்கள், இட வசதிகள், தொழில் சம்பந்தமான தகவல்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்கள், தேவையான கடனுதவி, பற்றிய விபரங்கள் குறித்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
உற்பத்தியை எடுத்துக் கொண்டால் கச்சாப்பொருள், இயந்திரங்கள் . கச்சாப்பொருள்:கச்சாப்பொருள் உற்பத்தியாளர்கள் யார் யார்?கச்சாப்பொருள் சப்ளை செய்பவர்கள் யார்?கச்சாப்பொருள்ஆர்டர் செய்ததும் செய்ய எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு ஆகும்? வரி, விலை, விபரங்கள் மற்றும் கண்டிசன்கள் என்ன? குறைந்தளவு மூலப்பொருள் தேவையளவு எவ்வளவு?உள்ளூரில் வாங்குவதற்கும் , வெளியூரில் வாங்குவதற்கும் உள்ள விலை, தரம் வேறுபாடுகள் வருடத்தில் சீசன் கட்டுப்பாடு உண்டா?அரசாங்க தரப்பிலிருந்து இப்பொருட்களுக்கு தடைகள், சட்டங்கள் ஏதும் உண்டா ?கடைசி இரண்டு வருடங்களில் என்ன என்ன விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன போன்ற விபரங்கள்..
இயந்திரங்கள்:உற்பத்திக்கு பயன்படும் இயந்திரம் இயந்திரங்களை செய்பவர்கள் யார்?இயந்திரங்களை வேலை செய்ய உபரி பொருட்களை (மோட்டார் , சுவிட்ச்) என்னென்ன வாங்க வேண்டும்? எங்கு வாங்குவது?இயந்திரங்கள் வைக்க எவ்வளவு இடம்,மற்றும் மின்சார வசதிகள் இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வர எவ்வகையான போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்கு முன்னர் இயக்கிப்பார்த்து வாங்குதல்
விற்பனை சந்தையில் நாம் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகள் :
வியாபாரிகள்::இந்த பொருளை விநியோகம் செய்யும் வியாபாரிகளில் முதன்மையானவர்கள் யார்? யார்? அவர்களது ஒப்பந்த முறை என்ன ? விற்பனை கழிவு எவ்வளவு ?எந்தெந்த பகுதிகளில் சந்தைப்படுத்துகின்றனர்? என்னவிதமான கட்டுப்பாடுகள், ஒப்பந்த முறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இருப்பு வைப்பு முறைகள் எந்த விகிதத்தில் உள்ளது ? எந்தவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் ?
வாடிக்கையாளர்:வாடிக்கையாளர்கள் யார் யார் ?வாடிக்கையாளர் இந்த பொருளை எங்கிருந்து வாங்குகிறார்கள் வாங்கும் பொழுது எதை முக்கியமாகக் கருதுகிறார்கள் இப்பொழுது சந்தையில் உள்ள பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக உள்ளதா அவர் என்ன மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றார் வாடிக்கையாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருள்களை கொடுக்க போதுமான திறமைகள், வசதிகள் உள்ளனவா
போட்டியாளர்கள்:இந்த பொருளின் போட்டியாளர்கள் யார்?அவர்கள் எத்தனை விதமான பொருட்கள் தயார் செய்கின்றார்கள் ? அவற்றின் தரம் மற்றும் விலை என்ன?போட்டியாளர்கள் கொடுக்கும் கிரெடிட் மற்றும் விற்பனை பற்றிய விபரங்கள் ? அவர்களுடைய விற்பனை பகுதிகள் எங்குள்ளன ? அவர்களுடைய பிரச்சனைகள் என்ன ?
சுற்றுப்புற தகவல்கள் :மக்கள் தொகை கலாச்சாரம் வாழ்க்கை முறை கல்வித் தகுதிநிலைவசதிகள்: போக்குவரத்துசுகாதாரம் \விவசாயமாக இருந்தால் நீராதாரங்கள் , பாசன வசதிகள்தொழில் சம்பந்தமான தகவல்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்கள், தேவையான கடனுதவி, பற்றிய விபரங்கள் குறித்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.தாய் முட்டையை இட்டுவிட்டுச் சென்றதும், அதிலிருந்து கம்பளி புழு வெளிவருகிறது. வெளிவரும் கம்பளி புழு தனது முட்டையின் மிதிச் செல்களை உண்டுவிட்டு தனது வாழ்க்கையை துவங்குகின்றது. பின்னர் பல மாற்றங்கள், தடங்கல்களுக்கு பிறகுதான் அழகான வண்ணத்துப் பூச்சியாக உருவெடுக்கும்.இதே போல் தொழில்முனைவோராக உருவாகும்போது, வெற்றிபெற வேண்டும் என்ற உற்சாகத்துடன்தான் தொடங்குகிறோம். முறையான ஆய்வு, பயிற்சி, உற்பத்தி , என்று திட்டமிட்ட வண்ணம் தொழிலை மேற்கொண்டாலும் இடையில் எவ்வளவோ தடங்கல்கள், தொழிலை செய்ய முடியாது, கைவிட்டுவிடலாம் என்று தோன்றும்போது, பல தடங்கல்களை தாண்டி வரும் வண்ணத்துப் பூச்சி போல இன்னும் அதிகமான ஆற்றலுடன், வலிமையுடனும் பயணிக்கும் போதுதான் தொழிலின் வளர்ச்சியை அடைய முடியும் என்கின்ற உத்வேகம் நம்மிடம் இருக்க வேண்டும்.ஆ. ரோஸ்லின் 9842073219

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X