அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில்
ரஜினியை சீண்டிய ஸ்டாலின்

சென்னை:'ரஜினியை சந்திக்கும் மோடி, ஜல்லிக்கட்டுக்காக வந்த, அ.தி.மு.க., - எம்.பி.,க் களை சந்திக்க மறுத்தது ஏன்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 தி.மு.க.,  ரஜினியை சீண்டிய ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய, -மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்

பேசியதாவது:- ஜல்லிக்கட்டு நடைபெறும் என, நம்பிக்கையோடு காத்திருந்தோம். அதிர்ச்சியூட்டும் வகையில், ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது, தமிழர் களின் பண்பாட்டுக்கு,கலாசாரத்துக்கு ஆபத்தை உருவாக்கும்.

தமிழகத்தில், இளைஞர்கள், மாணவர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். நானும்,எம்.எல்.ஏ., துரைமுருகனும், சென்னை கடற்கரை சாலையில் வந்த போது, இளைஞர்கள் திரளாக கூடி, மனித சங்கிலியாக நிற்பதை பார்த்தோம். 1965-ல், ஆட்சி மாற்றத்துக்கு, மொழிப்போர் போராட்டம், எப்படி காரணமாக அமைந்ததோ, அதே போல, இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

குடிநீர் கேட்டு, ஆந்திரா சென்ற முதல்வர், ஜல்லிக் கட்டுக்காக, டில்லி சென்று, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம். அதை, ஏன் அவர் செய்யவில்லை; அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், 50 பேரால்,பிரதமரை சந்திக்க முடியவில்லை. ஆனால்,

Advertisement

தனக்கு வேண்டிய,சினிமா நடிகர்களான, ரஜினி, அமீர் கான் போன்றோரை, மோடி சந்திக்கிறார்.

சினிமா கலைஞர்களுக்கு, தனியாக புகழ் இருக்கலாம்; சந்திக்கலாம். அதே நேரத்தில், தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற கோரிய, எம்.பி.,க்களைஅவர் சந்தித்திருக்க வேண்டும்; அதை மறுத்தது ஏன்?இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
19-ஜன-201711:12:03 IST Report Abuse

Sam Rajarajanசினிமா நடிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடி ஏன் எம் பிக்களை சந்திக்க மறுத்தார். இதுதான் கேள்வி. அதை பற்றி பேசாமல் ரஜினியை சீண்டினார் ஸ்டாலின் என்று சிண்டு முடிவது யார்.

Rate this:
ramasubramanian - Tuticorin,இந்தியா
17-ஜன-201713:27:13 IST Report Abuse

ramasubramanianரஜினி அரசியலில் இறங்கியபின் கண்டனங்கள் அறிக்கைகள் எதிர்ப்புகள் தெரிவிக்கலாமே.

Rate this:
nizamudin - trichy,இந்தியா
17-ஜன-201707:26:36 IST Report Abuse

nizamudinஸ்டாலின் சினிமா நட்சத்திரங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதம்மர் MP கலை ஏன் சந்திக்க மறுக்கிறார் என்றுதான் கேட்டார்? ஆளும் கட்சிக்கு ஆதரவாக தான் பேசி உள்ளார் ?

Rate this:
மேலும் 94 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X