அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சரின் ஆலோசனை கூட்டம்:
20 வட்ட செயலர்கள் புறக்கணிப்பு

சேலம்:சேலம் மாநகர், புறநகர் மாவட்டங் களில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து, அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை, 20 வட்ட செயலர்கள் உட்பட, 80 பேர் புறக்கணித்தனர்.

 அமைச்சரின் ஆலோசனை கூட்டம்: 20 வட்ட செயலர்கள் புறக்கணிப்பு

சேலம் மாவட்டத்தில், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடு வது குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது.சேலம் மாநகர, அ.தி.மு.க.,

அலுவலகத்தில், நேற்று முன் தினம் காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாபேட்டை மண்டலத்ததை சேர்ந்த பெரும்பான்மையான நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

சேலம் மாநகரின், நான்கு பகுதிகளை சேர்ந்த, 20 வட்ட செயலர்கள் மற்றும், 25 பிற அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. மாலை யில், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை, 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

மாவட்ட செயலர்கள், அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைகூட்டத்தில், கலந்து கொள்ளாத நிர்வாகிகள் பட்டியல், தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீபா அணிக்குதலைமை யார்?


சேலம் மாவட்டத்தில், தற்போதைய அ.தி. மு.க., நிர்வாகிகள் பலர், தலைமை மீதுள்ள விரக்தியால்,

Advertisement

தீபா அணிக்கு ரகசிய ஆதரவு திரட்டி வருவ தோடு, 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, மாவட்ட தலைமை பொறுப்பு ஏற்கும்படி கோரி வருகின்றனர்.'

விரைவில், தீபா அணியின் சேலம் மாவட்ட தலைமை நிர்வாகி குறித்து தெரியவரும்' என, அ.தி.மு.க., வினர் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-201700:26:56 IST Report Abuse

தமிழ்வேல் இது ஒரு ஆரம்பம்.

Rate this:
christ - chennai,இந்தியா
15-ஜன-201713:10:41 IST Report Abuse

christவாழ்க்கையில் போராடினால் வெற்றி நிச்சயம் தீபா அவர்கள் மாபியா கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றி வழிநடத்தி செல்ல அவருக்கு வாய்ப்பும் ஆதரவு கொடுப்போம்

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
15-ஜன-201715:17:43 IST Report Abuse

kavithakannanஜீசஸ் கிறிஸ்து நீ யார் பின்னாடியாவது போயிட்டே இருப்பியா? உனக்கு சுய புத்தி கிடையாதா? உனக்கு ஒரு கொள்கை கோட்பாடு எதுவுமே கிடையாதா? நீ எல்லாம்???????? ...

Rate this:
christ - chennai,இந்தியா
15-ஜன-201718:33:57 IST Report Abuse

christஉன்ன சுருட்டிக்கிட்டு போக மாபியா கும்பல் காத்துகிட்டு இருக்கு. அந்தக்கேடு கெட்ட கும்பலிடம் இருந்து உன்னை காப்பாற்றிக்கோ ...

Rate this:
christ - chennai,இந்தியா
15-ஜன-201718:38:47 IST Report Abuse

christகவிதைகண்ணன் அப்படி உனக்கு என்ன கொள்கை கோட்பாடு சொல்லுப்பார்போம் ...

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
15-ஜன-201719:59:54 IST Report Abuse

kavithakannanஅண்ணா சொல்லுங்கள் இந்த அதிமுக கட்சிக்கு ஏதாவது கொள்கை கோட்பாடு இருக்கா? சினிமா நடிகை என்று ஜெயலலிதாவை ஆதரித்த மக்கள். அதை புரிந்த ஜெயலலிதா இதுவரை ஆடிய நாடகங்கள் முட்டாள் மக்களுக்கு புரியவில்லை தன்னை புரிந்து கொள்ளாதவர்கள் அடுத்தவர்களை கண்டிப்பாக புரிந்த கொள்ள முடியாது அந்த கேட்டகரியில் நீங்கள். நான் தரம் அறிந்து பாத்திரம் அறிந்து ஈகை ஈடுபவள்.... ...

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
15-ஜன-201713:08:50 IST Report Abuse

Chandramoulliதென் மாவட்டங்கள் , திருச்சி , வேலூர் , சேலம் , ஈரோடு , கோவை மண்டலம் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் , எந்த நேரத்திலும் தீபா அவர்களின் பின்னால் செல்லும் நிலைக்கு வந்து விட்டனர் . அதை முறையாக , திட்டமிட்டு , சிந்தாமல் சிதறாமல் எடுத்து செல்ல முக்கிய நபர் ஒருவர் இப்போது தேவை . செங்கோட்டையன் , அனிதா ராதாகிருஷ்ணன் , ராஜ கண்ணப்பன் , நயினார் நாகேந்திரன் போன்றோர் இப்போதைக்கு தேவை . அடிமட்ட தொண்டர்களிடம் நேரிடையாக தொடர்பு உள்ளவர்கள் தான் இப்போதைய தேவை . அவர்களை ஒன்றிணைக்க நபர்கள் தேவை .

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X