பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நட்டு பசுமை பொங்கல்

Added : ஜன 16, 2017
Advertisement

அவிநாசி : தைத்திருநாளை முன்னிட்டு, கருவலூர் அருகேயுள்ள <உப்பிலிபாளையத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை பொங்கல் கொண்டாடப்பட்டது.அவிநாசி அருகேயுள்ள கருவலூர், உப்பிலிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து, கிராமத்தை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கதிட்டமிட்டுள்ளனர். தை முதல் நாளில், அம்மன் கோவில் முன்பு கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று கூடி, பொங்கல் வைத்தனர்; தொடர்ந்து, மரக்கன்று நடும் பணியை துவக்கினர்.கிராம மக்கள் கூறியதாவது:மரங்கள் இல்லாததால், மழை வளம் குறைந்து, நிலத்தடி நீர் மட்டம், ஆயிரத்து, 500 அடிக்கும் கீழே சென்றுள்ளது. மழையின்றி, வறட்சி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வாக, கிராமம் முழுவதும் மரங்கள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். மண்ணின் மரபு சார்ந்த மரங்களான அரச மரம், ஆல மரம், வேம்பு, பூவரசு, நாவல், மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகிறது.மரக்கன்றுகள் நடுவதோடு மட்டுமின்றி, அவற்றை முறையாக பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிராக்டர், தண்ணீர் தொட்டி, தண்ணீரை, கிராமத்தை சேர்ந்த பலர் வழங்க முன்வந்துள்ளனர். கிராம இளைஞர்கள், 30 பேர், தனித்தனி குழுவாக செயல்பட்டு, நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்பர். அனைத்து வீடுகளுக்கு முன்பும், மரக்கன்றுகள் நடப்பட்டு, வீட்டு உரிமையாளர்களே பராமரிக்க இசைவு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X