பொது செய்தி

தமிழ்நாடு

ஜன., 18க்குள் பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு :போக்குவரத்து கழக சங்கங்களிடம் உத்தரவாதம்

Added : ஜன 16, 2017
Advertisement

வரும், 18க்குள், போக்கு வரத்து கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பான போச்சுவார்த்தைக்கு குழு அமைக்க, அரசு தரப்பில் உத்தரவாதம் தெரிவிக்கப்பட்டதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணியாளர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தத்தை, கடந்த, செப்., 1ல் அமல்படுத்தியிருக்க வேண்டும். இதுவரை, பேச்சு துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை துவக்க திட்டமிட்டன.
தொடர்ந்து, டிச., 19ல் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆனால், ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிக்காததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யூ.சி., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலர், லட்சுமணன் கூறியதாவது: போக்குவரத்து கழக பணியாளர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக, டிச., 19ல் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர், 'விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும்' என, தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த, 13ல், 'பொங்கல் படி வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு மீதமுள்ள ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.
அன்று மாலை, 5:00 மணிக்கு, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'பொங்கல் படி மற்றும் ஓய்வூதியம் அளிக்கப்படும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு அமைக்க வரும், 18க்குள் அரசு ஆணை வெளியிடப்படும்' என, உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X