அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மேனரிசம்: தீபாவும் முயற்சி

Added : ஜன 17, 2017 | கருத்துகள் (108)
Advertisement
ஜெயலலிதா மேனரிசம், தீபாவும் முயற்சி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா எப்படி தன்னை, ஜெயலலிதாவாக மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறாரோ, அதே போலவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தன்னை, அச்சு அசலாக ஜெயலலிதா போலவே மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் இறங்கி உள்ளார். அதற்காக, கடந்த ஒரு வார காலமாக, அவரது தி.நகர் வீட்டில், பல்வேறுவிதமான பயிற்சிகள் நடந்துள்ளன.


ஜெ., மேனரிசம்:


இது குறித்து, அ.தி.மு.க., மற்றும் தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரைப் போலவே உடையணிவது, பொட்டு வைப்பது, இரட்டை விரலை உயர்த்திக் காட்டுவது, அவர் பயன்படுத்திய காரை பயன்படுத்துவது, நாற்காலியைப் பயன்படுத்துவது என, சசிகலா தன்னை, அச்சு அசலான ஜெயலலிதாவாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி, அதை பின்பற்றியும் வருகிறார். ஆனால், தோற்றத்தில் கடுமையான வேறுபாடுகள் இருப்பதால், சசிகலாவுக்கு அது முழுமையாகப் பொருந்தவில்லை. இருந்தாலும், அவர், தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு, அதை செய்து வருகிறார். இதற்காக, தனியாக மேக்கப் பெண்களை நியமித்துக் கொண்டிருக்கும் சசிகலா, தினந்தோறும் அவர்களை வைத்து, மேக்கப் போட்டுக் கொண்ட பின்பே, கட்சி அலுவலகம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்கிறார். போயஸ் தோட்டத்தில் இருந்து, கட்சியினரை சந்திக்க வேண்டும் என்றாலும், ஜெயலலிதா போலவே போடப்பட்ட மேக்கப்களிலேயே வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உருவத்தை ஒத்து இருக்கும், அவரது அண்ணன் மகள் தீபாவும், இதே பாணியை செயல்படுத்தத் துவங்கி இருக்கிறார். இதற்காக, ஒரு வார காலமாக, சென்னை, தி.நகர் இல்லத்தில், ஜெயலலிதாவாக தீபாவை மாற்றும் தீவிரத்தில் மேக்கப் பெண்கள் களம் இறங்கினர். ஜெயலலிதா போலவே சேலை, ஜாக்கெட், கொண்டை அணிந்த தீபா, அவரைப் போலவே கையை உயர்த்தி இரட்டை இலையை காண்பிக்கும் மேனரிஷத்தை எல்லாம், ஜெயலலிதாவின் பழைய வீடியோ தொகுப்புகளைப் போட்டுப் பார்த்து, அதைப் போலவே கண்ணாடி முன் நின்று, செய்து பார்த்தார். அதை, அருகில் இருந்த பெண்கள் சரிப்படுத்தினர்.


சிறப்பு போட்டோ ஷூட்:

தொடர்ந்து, சசிகலாவைப் போலவே, சிறப்பு போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. போஸ்டர்கள்; பேனர்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், தன்னுடைய படங்களாக, தான் வெளியிடும் படங்களையே பயன்படுத்துமாறு தொண்டர்களிடம் தீபா கேட்டுக் கொள்ளவிருக்கிறார். புதிதாக கட்சி ஆரம்பிப்பதற்குள், தன்னை, இன்னொரு ஜெயலலிதாவாக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில், தீபா உறுதியாக இருக்கிறார். அதற்காகவே, இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன. இதை, தீபா, முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். சசிகலாவைப் பார்த்து, தீபா காப்பியடித்தது போல இருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவை ஒத்து இருப்பது தீபாதான் என்பதால், காஸ்டியூம்; மேனரிஷங்களிலும், மக்களின் ஈர்ப்பை, தீபாவே பெறுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilarasu K - Salem,இந்தியா
18-ஜன-201712:44:54 IST Report Abuse
Thamilarasu K சகாயம் அவர்களை தலைவராக முன்னிறுத்தி ஒரு இயக்கம் காண்போம்...எம்.ஜி.ஆர் என்கிற மனிதரை சக்தியால் மக்களை ஒன்றிணைப்போம். சேவை ஒன்றையே குறியாக கொள்வோம். www.facebook.com/Mgrammaadmk-1504703179554906/ இங்கு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Shiva - Bangalore,இந்தியா
18-ஜன-201712:03:49 IST Report Abuse
Shiva உலகத்துலயே இப்படி ஒரு கேடு கெட்ட கூட்டம் வேற எங்கயும் இருக்காது..
Rate this:
Share this comment
karthie - coimbatore ,இந்தியா
18-ஜன-201712:49:30 IST Report Abuse
karthieeven sasikala or deepa no one can become like AMMA,one MGR AND ONE AMMA,...pigs cannot become lion...
Rate this:
Share this comment
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
18-ஜன-201709:13:10 IST Report Abuse
Muga Kannadi ஈர பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி... என்ன செய்யறோம்னு தமிழனுக்கு தெரியல்ல. சசி பிடிக்கல்ல, யாராவது ஒருவரை தலைவனாக்கி அவனை follow செய்யணும், அவங்களுக்கு யாருன்னு காட்டணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X