சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பரவும் போராட்டம்: இளைஞர்களை இணைத்த வலைதளங்கள்

Updated : ஜன 17, 2017 | Added : ஜன 17, 2017 | கருத்துகள் (55)
Advertisement
தமிழகம் முழுவதும் பரவும் போராட்டம்: இளைஞர்களை இணைத்த வலைதளங்கள்

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி அலங்காநல்லுாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீயாக பரவி வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த கோரி இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் களத்தில் இறங்கி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நேற்று(திங்கட்கிழமை) காலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்தனர். வாடிவாசல் முன் திரண்ட அவர்கள் பீட்டாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வாடிவாசலிலிருந்து காளைகள் வெளியேறாமல் கலையமாட்டோம் என உறுதியுடன் கூறினர்.


விடிய விடிய போராட்டம்


அலங்காநல்லுாரில் இரவு முழுவதும் கலைந்து செல்லாமல் இளைஞர்கள் போராடினர். தண்ணீர், உணவு கிடைப்பதில் போலீசார் தடுத்தும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து வாடிப்பட்டியில் உள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.


உள்ளிருப்பு போராட்டம்

போலீசார் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு இளைஞர்கள் மறுத்துவிட்டனர். விடுவித்தாலும் அலங்காநல்லுாருக்கு தான் செல்வோம். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராடுவோம் என உறுதியாக தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


தமிழகம் முழுவதும்...


இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல், மவுன போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


மாவட்ட வாரியாக போராட்ட கள விபரம்:


சென்னை:

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வர வேண்டும் அல்லது தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என உறுதியளித்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் இரவிலும் போராட்டம் தொடரும் என கூறுகின்றனர்.

போராட்டத்தை கட்டுபடுத்த போலீசார் மெரினா பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்தனர். இருப்பினும், அவர்கள் செல்போன் டார்ச் லைட் வைத்து போராடி வருகின்றனர்.

திருநெல்வேலி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி திருநெல்வேலியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். வ.உ.சி. திடலில் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். மேலும் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன் இளைஞர்கள், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

வேலூர்: ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் குடியாத்தம் நகரில், பஸ் நிலையம் எதிரே இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

கோவை: வ.உ.சி. மைதானத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் காளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் கைதாகினர். கல்லறைத்தோட்டம் பகுதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் பகுதிகளிலில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு பேனர்களை ஏந்தி பேரணி நடத்தினர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் சிறுவர்,சிறுமியர் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி: கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.

நாளை கல்லுாரிகள் புறக்கணிப்பு
ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை கல்லுாரிகளை புறக்கணிக்க கோரி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல்கள் பரவி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramasivam - Chennai,இந்தியா
18-ஜன-201716:32:13 IST Report Abuse
Paramasivam சென்னையில் சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள காக்னிசண்ட், HCL, விப்ரோ , டெக் மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் சுமார் 2000 க்கு மேற்பட்டோர் காலை முதல் எல்காட் நுழைவாயிலில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Subbu - chennai,இந்தியா
18-ஜன-201717:35:18 IST Report Abuse
Subbuஇந்த ஜல்லிக்கட்டு என்ற பெயரை பொங்கல் விளையாட்டு எனவும்,அல்லது வெவ்வேறு பெயர்களை மாற்றி நடத்தினால் அரசும்/உச்சநீதிமன்றங்களும் ஒன்றும் செய்யவே முடியாது என்றும், மேலும் அந்தந்த பகுதி கிராம மக்கள்,கிராமசபையை கூட்டி தீர்மானங்கள் போட்டு இப்படிப்பட்ட பொங்கல் விழாக்களை நடத்தினால் எந்த சட்டமும் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது என ஒய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார், இப்படி உணர்ச்சிவயப்பட்டு போராடிக்கொண்டு இருக்கும் இளஞ்சர்கள் அதனை செயல்பலடுத்துங்கள் நண்பர்களே,...
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
18-ஜன-201715:47:15 IST Report Abuse
Narayan உண்மையான வில்லன்கள் பீட்டா, விலங்கு உரிமை இயக்கங்கள், சுப்ரீம் கோர்ட், காங்கிரஸ், திமுக, அதிமுகவுக்கு எதிராக இருக்க வேண்டிய இந்த போராட்டத்தை, ஜல்லிக்கட்டுவுக்கு உண்மையில் ஆதரிக்கும், பட்டியலை மாற்றி கோர்ட்டில் வாதாடி உதவும் பாஜக, இந்துத்வ இயக்கங்களுக்கு எதிராக திரும்பி உள்ளது துரத்ரிஷ்டமானது முட்டாள்தனமானதும் கூட. மத்திய அரசின் அவசர சட்டம் டிராப்ட் எல்லாம் ரெடியாக உள்ளது. ஆனால் தீர்ப்பு வராமல் அதை செய்ய முடியாது. ஷா பானோ வழக்கில் செய்தது போல செய்வதென்றால் தீர்ப்பு வந்தவுடன் பார்லி கூட்ட வேண்டும். இரண்டுக்கும் முதலில் தீர்ப்பு வர வேண்டும். தீர்ப்பு காரணமே இல்லாமல் ஒத்தி வைத்து இப்போது வராத வண்ணம் செய்ததும் பீட்டா காங்கிரஸ் சதியே.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201714:55:13 IST Report Abuse
PRABHU துரோகங்களை பொறுத்தது போதும் ...இது தான் கடைசி தருணம்.....இதை விட்டால் நம் தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துவிட்டார்கள் ...ஒரு தேசிய இனத்தின் எழிச்சி.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X