பொது செய்தி

தமிழ்நாடு

இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு' வைக்கும் இளைஞர்கள்

Added : ஜன 19, 2017 | கருத்துகள் (99)
Share
Advertisement
இவங்களப் பாத்து கத்துக்கங்க.. முன்னுதாரணமான இளைஞர்கள்

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராடி வரும் இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசாருக்கு உதவியதுடன்,
அங்கிருந்த குப்பைகளை தாங்களே சுத்தம் செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினர்.


போராட்டம்:

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்களும். பெண்களும் ஒன்று திரண்டனர். மாபெரும் இளைஞர் சக்திக்கு முன்னாள் தமிழகமே குலுங்கியது. கடந்த 3 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அனைவரும், தங்களின் வீடு மறந்து, களிப்பு துறந்து ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என ஓரணி திரண்டு போராடி வருகின்றனர்.


காவல்துறைக்கு தோழனாக..

சென்னை- மெரினாவில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு திரண்டுள்ள இளைஞர்களும், பெண்களும் கொட்டும் பனியிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவில் மெரினா சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும் போதெல்லாம், போலீசாருக்கு துணையாக களமிறங்கும் இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.

மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் சாப்பிட்டு வீசிய இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நேரத்திலும் சளைக்காமல் அவர்கள் செய்த இப்பணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


முன்னுதாரணம்:

கட்சி பொதுக்கூட்டம் போன்று கூட்டம் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது, குப்பைகளை குவிப்பது அதை அரசு துப்புரவு பணியாளர்களை கொண்ட சுத்தம் செய்வது என்று இருந்த வழக்கத்தை இந்த இளைஞர்கள் மாற்றியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக திரண்டுள்ள இளைஞர்கள் மது அருந்தாமல், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டப்பாதையிலிருந்து சிறிதும் விலகாமல், அறவழியில் நடத்தி கொண்டிருப்பது பலருக்கு ‛குட்டு' வைப்பது போல் அமைந்துள்ளது . இவர்கள் அனைத்து தரப்பினருக்கும் முன்னுதாரணமாக திகழ்வதற்காக மக்கள் மனதில் என்றும் நிற்பார்கள் இந்த இளைஞர்கள்..

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜன-201702:13:55 IST Report Abuse
மலரின் மகள் பின்னாலிருக்கும் தளபதி யாரென்று நமக்கு நன்றாகவே தெரியும். தெரியாதவர்கள் தாங்களாக தமிழ் பற்று நாட்டுப் பற்று என்று நினைத்து ஏமாற்றப் படுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. எதற்கும் ஒரு நல்ல தலைவர் வேண்டும். மெரினாவில் சென்று கடற்கரை மண்ணில் தங்குங்கள், என்று மனம் சொல்லியதா? அங்கு கலாச்சாரத்தை வளர்க்கிறோம், பண்பாடு மிக்கவர்களாக இருக்கிறோம் எங்களுக்கு அனைவரும் ஆதரவு தருகிறார்கள் ஆகையால் நாங்கள் புத்துணர்வு பெறுகிறோம் என்று மனதிற்கு தாளிட்டு கொண்டிருக்கிறார்களா? லெக்கிங்ஸ் என்பது நமது பாரம்பரியமா, தாய்ப்பால் ஊட்டுவதற்கே நாம் ஒரு இயக்கம் நடத்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். கடந்த தேர்தலில் கருத்து தெரிவித்தோருக்கு நன்கு தெரிந்திருக்கும் கருத்துக் கணிப்பு என்று என்ன நடந்தது என்று. அதே போல் இப்போது ஏதோ நடக்கிறதே? பள்ளி கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டுமா. பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் வந்து எதிர்ப்பை தெரிவிக்கக் கூடாதா? இவர்களுக்கு ஆதரவு தருவது போல பொறியியல் கல்லூரிகள் மூடப் பட்டிருப்பதாக தெரிகிறதே. ஐ ஐ டீ முத்தமிடும் செயலை வளாகத்தில் செய்தது. கலாச்சாரமா? கூட்டத்தில் சென்று பாருங்கள் கிண்டலும் கேலியும் நக்கலும், இடை இடையே உணர்ச்சி பொங்கலும். இப்போதே ரயில் மறியல் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். அமைதியாகத் தான் ஆரம்பம் இருக்கும். பிரச்சினையில் அமைதியாகி இடும் இறுதியில். வெற்றி அடைவதற்கு வழி முறைகள் சிறப்பாக திட்ட மடிப்பி பட்டிருக்க வேண்டும். திடிரென்று குடத்துடன் தண்ணீர் வரவில்லை என்று சாலை மறியல் செய்வது போல இருக்கக் கூடாது போராட்டங்கள். தலைப்பாகை முதல் காலில் அணிகின்ற மெட்டி வரை துறந்து விட்ட இளைஞர் சமூகம் இன்று கலாச்சாரம் என்று மெரினாவில் கூறுகிறோம் தமிழகமெங்கும் கூறுகிறோம் என்று சோசியல் மீடியா மட்டும் போதும் என்று நினைத்து போராடினால் எப்படி. உலகம் பறந்து விரிந்தது. கோவில்பட்டியில் சாதாரணமாக தொழிலாளிகள் தங்கள் அன்றாட ஜீவ வாழ்க்கை நடத்துவது கண்கூடு. ஒரு சிறு பிரச்சினையும் இல்லை. 5 .7 திரையில் உலகம் இருப்பதாக மீடியாவில் தெரிந்து கொண்டு நாங்கள் அறவழி போராட்டம் நடத்துகிறோம் என்று கூட்டம் போடுகிறார்கள். நீதி மன்றத்தில் எத்தனை வழக்குகளை இவர்கள் தாக்கல்செய்தார்கள். அரசுக்கு எத்தனை மகஜர் தந்தார்கள். mygov எத்தனை முறை விண்ணப்பம் அனுப்பினார்கள். வீரம் என்பது புற்றீசல் போல் கிளம்புவதில் இல்லை. காளையை விலங்கு என்ற பட்டியலில் இருந்து கால் நடை என்ற பட்டியலில் சேருங்கள் என்று கோரிக்கைக்கு இப்போது வடிவம் தந்திருக்கிறார்கள். குஜராத்தில் ஆனந் என்ற மாவட்டத்தில் நடந்த வெண்மை புரட்சியும் அமுல் உருவான கதைகளையும் அறிந்து அது போன்ற புரட்சிக்கு வித்திட வேண்டும். வாழ்நாளில் ஒரு பசுவை கூட குளிப்பாட்டி இருப்போமா நாம். பித்ரு பூஜை, கிரகப் பிரவேசத்துடன் அவைகளை தொழுவத்தில் தான் அடைப்போம். மாடாய் உழைக்கிறோம் என்ற பழமொழி என் வந்தது. அந்த அளவிற்கு மாட்டை உழைப்பை பிடுங்கி இருக்கிறோம் என்பது தானே. தோழி மலரே இளைஞர் பட்டதாரி சகோதரர்கள் போக்குவரத்திற்கு மாட்டு வண்டியை பயன் படுத்துவதை முதலில் படிக்க சொல்லி ஆதரவு தந்தது. ஜல்லி கட்டு என்று நாம் எதை எதிர்பார்க்கிறோம். காளைகளை வீரியத்தை பேருக்கும் வழிவகை அது ஒன்று தான் என்றா? தமிழகத்தின் கால்நடை மருத்துவ பல்கலை சிறப்பாகத்தானே செயல் படுகிறது. அவர்களுக்கு தெரியாத தொழில் நுட்பமா? விஞ்ஞான அறிவை பயன் படுத்தாமல், தொன்று தொட்டு அறிந்த தெரிந்த வாய் மொழி அறிவே போதும் என்கிறோமா??? கோலா காரரகளை விரட்டுவோம் சரி. அதை விரட்டுவதற்கு நாம் என்ன செய்திஉரக்க வேண்டும் பொள்ளாச்சி இளநீரை பத்து ரூபாய்க்கு தர முடியாமல் போனதே. இளநீர் ஒன்று அம்பது ரூபாய் விற்கிறதே?? ஆங்காங்கே பாட்டிலில், பாக்கெட்டில் தண்ணீரை அடைத்து தரமற்ற நீரை வியாபாரம் செய்வது நாம் தானே. வெளி நாட்டு கம்பனிகளா. நாம் செய்தல் சரி என்று எப்படி தவறை அனுமதிக்க முடியும். போரூர் ஏரியை ஆக்கிரமித்து, முகப்பேர் ஏரியை காணாமல் செய்தது யார். ஆயிரம் ஏரிகளின் மாவட்டம் என்ன ஆயிற்று. குளத்து தொழிலாகத் தான் இன்றும் கால்நடை தொழில் இருக்கிறது. சிகை அலங்காரத் தோளிலே மாறி விட்ட நிலையில், பால் உற்பத்தி மட்டும் குளத்து தொழிலாக இருக்கிறதே. செய்திகள் சென்றடைய வேண்டியது டில்லிக்கு. அதற்கான முயற்சிகள் வேண்டும். சிலர் கலவரம் நடக்க வேண்டும், தடி அடி நடக்க வேண்டும், பிரச்சினை பெரிதாக வேண்டும் அதற்காக தானாக கூடிய கூட்டத்தை பயன் படுத்தி குளிர் காய நினைக்கலாம். அதற்கான செயல்கல் தென் படுகின்றன. இளைய மனது தனக்கு பிடிக்காததை யார் சொன்னாலும் ஏற்காது என்பதை நன்கு புரிந்து கொண்டு அவர்களை மறைமுகமாக பயன் படுத்திக்க கொள்கிறார்கள். நோய்வருக்கும் பழக்கமான ஒரு விலங்கு. அதன் மனம் சற்று வித்தியாசமானது. வாழை பிடித்து பின்னால் இழுத்தல், அது முன்னாள் போகும், பின்புறமிருந்து முன்னாள் தள்ளினாள் அது பின்னால் வரும். எதிர்முறையில் செயல் படும் அது போன்றது தான் இளைய மனது ஆகையால், செய்யாதே என்று சொல்லி காரியத்தை சாதித்து விடுவார்கல் அரசியல் வாதிகள். கவனமாக இருக்க வேண்டும். யாரை எதிரித்து போராடுகிறோம். எதிரியை கண்ணெதிரே காண முடியாது. சட்ட சிக்கல், அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று. எங்குதான் போராட்டமனில்லை, வடக்கில், வாடா கிழக்கில் நாட்டின் கிரீடப் பகுதியில் என்று. அனைத்தையும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை, பிரச்சினை முற்றினால், போராட்டக் காரர்களை சமாளிக்க அடக்க தெரிந்திருக்கிறார்கள் திறமையாக. ஆகையால் அறிவாக அறிவால்தான் வெல்ல வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டுவந்து நினைத்ததை சாதித்தவர்கள், இப்படியா போராடினார்கள். அவர்கள் சாமர்த்தியம் நமக்கும் வேண்டும். அவசர சட்டம் அது இது என்று கோராமல், சிந்தித்து இருக்கும் சட்டத்தை நன்கு ஆய்ந்து செட்டப் படி வெல்வோம். கட்சு குரல் கொடுக்கிறார். அவரை சட்டத்தை நன்கு ஆராய்ந்து வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல வேண்டும். சாணக்கியத்தன்மை தேவை. எதிரி கட்சி ஆளும் கட்சி, சட்டம் இயற்றுவோர் அனைவரும் அமைதியாய் இருக்க நாம் யாருக்கு என்ன அழுத்தம் தரப்பு போகிறோம். நாம் வென்றாலும் தோற்றாலும் எதுவும் நடக்க வில்லை என்றாலும், நிச்சய பலன் அரசியல் வாதிகளுக்கே என்று எவ்வளவு அழகாக திறமையாக அரசியல் செய்கிறார்கள்.
Rate this:
Cancel
Skt - Salem,இந்தியா
19-ஜன-201722:45:30 IST Report Abuse
Skt தனித் தமிழ்நாடு ஒன்றே இதற்குத் தீர்வு - செந்தில்
Rate this:
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
19-ஜன-201721:51:26 IST Report Abuse
Pandianpillai Pandi போராடுகின்ற எனது சொந்தங்களே தாய்ப்பாலோடு தமிழ்பாலும் ரத்தத்தில் கலந்தது என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.. இதற்குமுன்ன்னும் இளைஞர்கள் போராடியிருக்கிறார்கள் ஆனால் அவர்களை விட ஒரு படி மேலே சென்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி தமிழர்கள் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்திருக்கிறீர்கள் என்னவென்று சொல்ல தனது கடமை மட்டும் செய்யாமல் சில காவலர்கள் போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் தருவதும் போராட்ட்டக்காரர்கள் அவர்களுக்கு உதவுவதும் ஆகா மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள்... உலகமே உன்னை கண்டு ஆடி போய் இருக்கிறது.... உங்களுடன் பங்கேற்க பொதுமக்களும் தயாராகிவிட்டனர்.... மாடுகள் எங்கள் தமிழினத்தின் அடையாளம் அதை பாதுகாப்பது நமது கடமை.... தமிழர்களின் பண்பாடுகள் என்றென்றும் ஒளி வீசி பறக்கும் என்பதில் இந்த போராட்டத்தை பார்த்த பிறகு நம்பிக்கை வந்து விட்டது ...தமிழர்களின் உணர்வுகள் சாகவில்லை அது ஒவ்வொருத்தரிடமும் மனதில் ஆழமாக இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X