பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு: மாணவர்களை வளைக்க தி.மு.க., திடீர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Added : ஜன 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement

தமிழகம் முழுவதும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, நடந்து வரும் போராட்டத்தில், தி.மு.க.,வினர் கலந்து கொள்ள மாணவர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த, தி.மு.க., தலைமை, மாணவர்களை வளைக்கும் வகையில், நாளை மத்திய அரசு அலுவலகங்கள் முன், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் அமைப்பின் சார்பில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சென்ற நிலையில், அவர் கலந்து கொள்ள மாணவர்கள் அனுமதி வழங்க வில்லை. இதே போல், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரையின் பல இடங்களில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு பிரியவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ள சென்ற, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். மாணவர்கள் மத்தியில் தி.மு.க., உட்பட எந்த அரசியல் கட்சிக்கும் வரவேற்பு இல்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த, தி.மு.க., தலைமை மாணவர்களை தங்கம் பக்கம் இழுக்கும் வகையில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன் போராட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்கள் முன், தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக மாணவர்கள் கலந்து கொள்ள செய்யும் படி, தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, மாணவர்களை திரட்டும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க.,வின் நடவடிக்கை, ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
19-ஜன-201711:03:03 IST Report Abuse
Sam Rajarajan 18 ஆம் தேதியே போராட்டம் ஒத்தி வைக்க படுவதாக தி மு க அறிவித்துவிட்டது. ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்க சென்றார் அங்கு ஆதரவு சொல்லிவிட்டு வந்து விட்டார். இன்று எதற்க்காக இந்த பதிவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X