காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கம்: சட்ட வரைவில் திருத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கம்: சட்ட வரைவில் திருத்தம்

Updated : ஜன 20, 2017 | Added : ஜன 20, 2017 | கருத்துகள் (107)
Advertisement
காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கம்: சட்ட வரைவில் திருத்தம்

புதுடில்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி - முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சந்திப்பின்போது, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக கூறிய பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
இதன் வெளிப்பாடாக, தமிழகத்தில் நிலவும் சூழல் காரணமாக ஜல்லிக்கட்டு வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார்.மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.


காளையை நீக்கும் பிரிவு சேர்ப்பு:


இதையடுத்து, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
இந்த சட்ட வரைவுக்கு முறையே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து சட்ட வரைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு அல்லது நாளை காலை ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். இதற்காக, கவர்னர் வித்யாசாகர் நாளை சென்னை வருகிறார்.

அவசர சட்டம் நாளை அமலுக்கு வரும் நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றியின் விளம்பை தொட்டுள்ளது.

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-201711:58:07 IST Report Abuse
Lion Drsekar இதே பட்டியலில் இருந்து எங்களையும் நீக்கிவிடுங்கள், இரயில் மற்றும் பேருந்துகளில் இவைகளை விட மிகக் கொடுமையாக அடைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றனர் இதற்கு ஒரு வழி பிறக்குமா? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
nalavirumbi - SGP,சிங்கப்பூர்
21-ஜன-201710:24:26 IST Report Abuse
nalavirumbi தற்காலிக அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் செல்லாது மறுபடியும் 5 வருஷம் இந்த கேஸ் சிக்கல் ஆக்கி விடும் -புதிய தலைமுறை செய்தி
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-ஜன-201710:01:56 IST Report Abuse
Agni Shiva மத்திய அரசிற்கு மீண்டும் நன்றி தெரிவிப்போம். காளையை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது பழைய கதையே. கடந்த ஆண்டு 2016 ஜனவரி 8 ம் தேதி வெளியிடப்பட்ட அரசாங்க ஆணையில் (Gazette ) இவ்வாறு தான் காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு கொண்டாட வழிவகை செய்திருந்தார் மோடி அவர்கள். இதை பாராட்டி ஜெயா, கருணா, வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் கூட நன்றி தெரிவித்து அறிக்கைகள் விட்டுருந்தனர். ஆனால், ஜல்லிக்கட்டை கொண்டாடுவதற்கு முன்பே பீட்டா அதற்கும் உச்சநீதி மன்றத்தில் தடையை வாங்கியது. தற்போது மாநில அரசின் சட்டவரை ஏற்றுக்கொண்டு அவசர சட்டமாக கொண்டு வர இருக்கிறது. இப்போது நடக்கும் எதிர்ப்பை பார்த்து பீட்டா உச்சநீதி மன்றத்தில் இதற்கும் தடை வாங்காமல் இருக்க வேண்டும். அப்போது தான் மோடி அவர்களின் உண்மையான முயற்சிகளுக்கும் , தமிழர்களின் எதிர்பார்க்கிற்கும் ஒரு விடியல் தோன்றும். இதற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போடாமல் இருந்து, இந்த இரண்டும் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம். இந்த அவரச சட்டம் வந்தவுடன் மோடி ஒழிக, கருணா வாழ்க, காளைகள் வாழ்க என்று கத்தி தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மீண்டும் காண்பித்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜன-201714:34:29 IST Report Abuse
தமிழ்வேல் எதுக்கு (மீண்டும்) நன்றி ? நம்ம 50 கொலு பொம்மைகளையும் பார்க்க மாட்டேன்னு இருந்ததுக்கா ?...
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
23-ஜன-201714:29:57 IST Report Abuse
Maverickஉண்மையிலேயே இவனுங்களை பார்க்காம இருந்ததும் நன்றி தான் சொல்லணும்.....அவரு முன்னாலே போயி......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X