சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள் : 'பீட்டா' கண்டுகொள்ளாதது ஏன்?

Added : ஜன 20, 2017 | கருத்துகள் (14)
Advertisement
தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள் : 'பீட்டா' கண்டுகொள்ளாதது ஏன்?

'மாடுகளை துன்புறுத்துவதாக, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கூச்சலிடும், 'பீட்டா'வுக்கு, நாடு முழுவதும் தினமும், 25 ஆயிரம் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவது தெரியாதா; அவற்றை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் என்ன' என, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
'தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடுத்த, 'பீட்டா'வை, நாட்டை விட்டே ஓட்டும் வரை ஓயமாட்டோம்' என, இறுதிக்கட்டப் போருக்கு தயாரானது போன்று, தமிழகமே ஆர்ப்பரித்து கிளம்பிஇருக்கிறது.அரசின் நிர்ப்பந்தத்தால், கல்லுாரிகளின் கதவுகள் அடைக்கப்பட்டாலும், வீட்டுக்கு செல்ல மறுத்து, வீதியில் இறங்கி, இரவு, பகலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
துன்புறுத்தல் : 'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்' என்பதுடன், 'பீட்டாவை இந்த மண்ணிலிருந்தே விரட்ட வேண்டும்' என்பதும் மிக முக்கிய கோரிக்கை.கடந்த, 1980ல், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட, பீட்டா, 'மனிதர்கள் போன்றே, விலங்குகளும் எவ்விதமான துன்புறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக வாழ வேண்டும்' என்பதே, தன் நோக்கம் என்கிறது. இந்த அந்நிய அமைப்பின், ஆண்டு வருவாய் சராசரியாக, 300 கோடி ரூபாய்; பெரும்பாலும் நன்கொடை. இந்தியாவில், 2,000ம் ஆண்டில் நுழைந்த பீட்டா, மும்பையில் கால் பதித்தது. 'விலங்குகள் துன்புறுத்தப்படுவதை கண்டால், அரசிடமும், நீதித் துறையிடமும் முறையிட்டு தடுப்போம்' என்கிறது.
வாய் திறக்கவில்லை : ஆனால், இதன் செயல்பாடுகளோ, அதற்கு ஏற்ப இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக வழக்குத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது, பீட்டா அமைப்பு. ஆனால், இறைச்சிக்காக, மாடுகளை, மாநிலம் விட்டு மாநிலத்துக்கு லாரிகளில், காற்றோட்டமின்றி அடைத்து, மூச்சு முட்ட கடத்தப்படுவது பற்றியோ, தினமும், நாடு முழுவதும் இறைச்சிக்காக, 25 ஆயிரம் மாடுகள் கொல்லப்படுவதை பற்றியோ, இதுவரை வாய் திறக்கவில்லை.கேரளாவில், மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையே இயங்குகிறது. அதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாத பீட்டா, தமிழர்கள் பாரம்பரியத்தின் மீது கை வைத்து விளையாடுகிறது.
ரூ.300 கோடி வருவாய் : ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தமிழகத்தில், மிருக வதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இப்படியொரு சட்டமே கிடையாது.எப்படியாவது ஜல்லிக்கட்டை ஒழித்து, நாட்டு மாடுகளை அழித்தே தீர வேண்டும் என, கங்கணம் கட்டி செயல்படும் பீட்டா, ஒன்றும் வசதியற்ற நம்மூர் சேவை அமைப்புகளை போன்றல்ல; அதன் ஆண்டு வருவாய், 300 கோடி ரூபாய்.இந்த அமைப்பின் வருவாய் எப்படி உயர்கிறது, யார், யாரெல்லாம் இந்தியாவில் இருந்து நன்கொடை கொடுத்திருக்கின்றனர், இந்த அமைப்பு, எந்தெந்த செயலுக்கு இந்தியாவில் இந்த தொகையை செலவிட்டிருக்கிறது என, மத்திய அரசு ஆய்வு செய்தால், அதிர்ச்சி தகவலும், அந்தரங்க தொடர்பும் அம்பலத்துக்கு வரக்கூடும்.காரணம், 'பல நாடுகளில் பீட்டாவின் வருவாய் குறித்து, சிறப்பு விசாரணைகள் நடந்திருக்கின்றன' என்கின்றனர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - karur,இந்தியா
22-ஜன-201703:59:54 IST Report Abuse
shan மாடுகள் உணவுக்காக கொல்லப்படுவதை தடுக்க இந்திய சட்டத்தில் இடமில்லை . ஆனால் மிருக வதைக்கு சட்டம் இருக்கிறது. நாம் ஏன் peta வை குறை கூறி கொண்டிருக்கிறோம்?. தீர்ப்பு கொடுத்தது நீதி மன்றம். நம் பக்கம் தவறு இருந்ததினால் தானே தடை வந்தது?. நீதிபதிகள் அனைவரும் peta விடம் விலை போய் விட்டார்கள் -300 கோடி கொடுத்துவிட்டார்கள் என்று கூட புரளியை கிளப்பளாம். நாம் தான் யோசிக்க வேண்டும். peta vai தடை செய் என்று கூறுவது போல் தீர்ப்பு தந்த உச்ச நீதிமன்றத்தை தடை செய் என்று கூற முடியுமா? குறை எங்கிருக்கிறது என்பதை உணர வேண்டும். நான் peta ஆதரவாளன் அல்ல. ஆனால் நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல் பாதி உண்மை மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் கூறப்படுகிறது. சந்தேகத்திற்கு peta வெப்சைட் லிங்க் ://www.petaindia.com/blog/16-bizarre-myths-promoted-jallikattu-supporters-busted/ பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
21-ஜன-201720:24:11 IST Report Abuse
வந்தியதேவன் இதுல... முக்கியமாக சொல்லணும்னா... இந்த பீட்டாவ இந்தியாவுக்கு வரவழைச்சதே... பா.ஜ.க. அமைச்சர் மேனகா காந்தியும் அவர்கள்... அமைப்பும்தான்...
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
22-ஜன-201720:45:03 IST Report Abuse
Sathya Dhara தவறு.....திரு வந்தியத்தேவன் அவர்களே......இத்தாலி அடிமைக்கு அடிமைகள் சேர்ந்து .....பாரத கலாச்சாரத்தை பூண்டோடு அழிக்க செய்யப்பட்ட சதிகளில் இதுவும் ஒன்று......
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
21-ஜன-201719:18:25 IST Report Abuse
Murugan இந்த பீட்டாவை துரத்துவதற்கு நாடு தழுவியப்போராட்டமே உகந்தது .................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X