பொது செய்தி

இந்தியா

தமிழக பண்பாட்டை காக்க மத்திய அரசு துணை நிற்கும்: மோடி

Added : ஜன 21, 2017 | கருத்துகள் (138)
Share
Advertisement
தமிழக பண்பாடு, மத்திய அரசு, மோடி

புதுடில்லி : தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக கலாச்சாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். தமிழக மக்களின் பண்பாட்டு உணர்வுகளை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைதஅது துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைய மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட எப்போதும் மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஜன-201701:21:51 IST Report Abuse
மலரின் மகள் கொன்ஜம் கொஞ்சமாக தாமரைக்கு வளர்ந்த செல்வாக்கு ஒரே வாரத்தில் அம்பேல் ஆகிவிட்டது என்று எனது தோழியர் நமட்டு சிரிப்புடன் எனக்கு வாட்ஸாப்ப் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். அப்படியா சங்கதி.
Rate this:
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
21-ஜன-201722:07:17 IST Report Abuse
Indian தமிழ இளைஜர்களின் எழுச்சி போராட்டத்துக்கு அடி பணித்தார் மோடி.. தமிழர்கள் காளையை அடக்குமுன் மோடியை அடக்கி விட்டனர்
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
21-ஜன-201719:14:24 IST Report Abuse
ganesha தமிழக மக்கள் அனைவரும் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தமிழக அரசு இந்த பிரச்னையில் ஒரு ஆணியும் புடுங்கல. அவர்களுக்கு என்ன செய்யணும் என்றே தெரியவில்லை. மக்களின் கோபம் புரிகிறது. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. அதனால் தான் இங்கேந்து மோடியை பார்த்து ஏதாவது பண்ணுங்க என்று சொன்னார். மோடி கொடுத்த அறிவுரையின்படி தான் இந்த அவசர சட்டம் கொண்டு வர முடிந்தது. மோடியின் ஆதரவு இல்லாமல் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் மோடி உடனடியாக சட்ட துறை, சுற்றுப்புற துறை, உள்துறை களுக்கு அவசரமாக இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உடனடியாக மதிய அமைச்சரவை இந்த அவசர சட்டத்தை ஜனாதிபதி க்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்தார். பத்து மணி நேரத்தில் இது அத்தனையும் செய்ய வைத்தார். இது இது ஒரு ரெகார்ட். அத்தனையும் மோடி அரசு செய்து முடித்தது. இதன் காரணமாக தான் இந்த அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர முடிந்தது. இந்த உண்மையை புரிந்து கொண்டு பேசவும். நிச்சியமாக மோடி அரசுக்கு தமிழர்கள் நன்றி சொல்லணும். மேலும் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் 48 தூக்கு தண்டனைக்கு ஆளான இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து சர்வ சாதாரணமாக மீட்டு வந்தார். மேலும் நூற்று கணக்கான மீனவர்களை சிறையில் இருந்து பல முறை விடுதலை செய்ய வைத்தார். இது அவரின் மிக பெரிய சாதனை. இதற்கு அவருக்கு தமிழர்கள் என்ன மரியாதை கொடுத்தீர்கள். பெரிய அளவில் நன்றி கூட சொல்லவில்லை. காசு வாங்கி தான் திராவிட கட்சிக்கு ஓட்டு போடுகிறீர்கள். தமிழகத்தில் பிஜேபி அரசு இல்லாத போதே இந்த சாதனையை செய்துள்ளார். நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்திருந்தால் இதை செய்திருப்பார்களா. நிச்சியமாக 48 மீனவர்களையும் இலங்கை அரசு தூக்கில் போட்டிருக்கும். பிஜேபி அரசு நம் தமிழ்நாட்டிலும் இருந்தால் அவர்களால் இன்னும் நிறைய செய்ய முடியும். அவர்களுக்கு ஒரு இடத்தில கூட ஓட்டு போடாத தமிழர்களை என்ன வென்று சொல்வது. காவேரி பிரச்னை, நதிகள் இணைப்பு அனைத்தையும் பிஜேபி அரசு நமக்காக காசு வாங்காமல் நிச்சியமாக செய்வார்கள். அவர்களுக்கு தயவு செய்து பிஜேபி ஆட்சி இங்கு வர உதவுங்க. நீங்க அவர்களுக்கு ஓட்டு போடாமல் இருந்து கர்நாடகாவில் ஓட்டு போட்டு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சியமாக இதற்க்கு ஒரு நிரந்தர நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்பு குறைவு. இன்னும் இழுத்துக்கொண்டே போகும். நீங்கள் கேட்கலாம் இது அவர்களின் கடமை என்று. கடமை தான். அனால் அவர்களை நீங்கள் உதாசீன படுத்தி அதே நேரத்தில் கர்நாடக மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டால் அவர்களை பகைத்துக் கொண்டு நமக்கா அவர்கள் நல்லது செய்ய முடியும். நெஞ்சில் கை வைத்து உண்மையில் சொல்லுங்க. நீங்கள் அவ்வாறு செய்வீர்களா ? ஆகையினால் தமிழர்களின் கடமை, காசு வாங்கி குடும்ப கட்சிகளான திராவிட கட்சிக்கு ஓட்டு போடாமல் குடும்ப ஆட்சி இல்லாத பிஜேபி க்கு ஓட்டு போட்டு நமக்கு வேண்டியது எல்லாவற்றையும் சாதித்து கொள்ள வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X