ஜல்லிக்கட்டு தொடர்பாக, டில்லி சென்றிருந்த முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமரின் பெயரை கெடுக்க, தமிழகத்தில் நடந்த சதித்திட்டங்கள் குறித்த ஆதாரங்களை மோடியிடம் கொடுத்துள்ளார்.
அதனால், தமிழக அரசில் அதிகார மையங் களாக செயல்படும், சிலர் மீது, அடுத்த சில நாட்களில் நடவடிக்கை பாயலாம் என, எதிர் பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை, மெரினா உட்பட, மாநிலத்தின் பல பகுதி களிலும் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில், டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது, 'தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது, தமிழக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரும் உடனிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், அந்த அதிகாரிகள் வெளியேற, பிரதமர் மோடியுடன், முதல்வர் பன்னீர் சில நிமிடங்கள் தனியாகப் பேசினார். அப்போது, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றை, பிரதமரிடம் பன்னீர் கொடுத்ததாகவும், அதற்கு முன், அதை வாசித்ததாகவும் கூறப்படுகிறது.
கடிதத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் பற்றி கூறப்படுவதாவது:
முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, தமிழகத்தின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டியது. அதனால், பிரதமராகிய உங்களுக்கு, தமிழக மக்கள் மத்தியில், நல்ல பெயர் உருவானது. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக ஆளும் கட்சியையும், அரசையும் ஆட்டிப் படைக்கும் அதிகார மையமாக இருக்கும் ஒருவர் செயல்படுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமராகிய
உங்களுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராக வும் கோஷங்கள் எழுப்ப, அந்த நபரின் துாண்டுதலே காரணம். அவர் தான், மத்திய அரசுக்கு எதிரான பல தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார்.
தமிழக
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்ததில், முக்கிய
பங்கு வகித்தவர் அவரே. அத்துடன், என்னையும் முதல்வர் பணியை சிறப்பாக செய்ய
விடாமல், அந்த நபரும், அவரின் குடும்பத்தினரும் டார்ச்சர் கொடுக்கின்றனர்.
இந்த விஷயத்தில், நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும். இந்தத் தகவல் தான்,
மோடியிடம் பன்னீர் கொடுத்த கடிதத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், பிரதமரின் பெயரை, தமிழக மக்கள் மத்தியில், 'டேமேஜ்' செய்ததற்கான சில ஆதாரங்களையும், அதற்காக செலவு செய்த நபரின் பின்னணி பற்றிய ஆதாரங்களையும், மோடியிடம் பன்னீர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பன்னீரின் கடிதத்தையும், அவர் கொடுத்த ஆதாரங் களையும் பார்த்த பிரதமர் மோடியின் முகம் கடு கடுப்பாகியுள்ளது. உடன், 'எனக்கு எதிராக சதி செய் யும் நபர்களை எல்லாம், நான் பார்த்துகொள்கிறேன். நீங்கள் ஆட்சியை நல்ல முறையில் நடத்துங்கள்' என, கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, பிரதமர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசையும், ஆளும் கட்சியையும் ஆட்டிப்படைக்கும் நபர் பற்றிய விபரங்களையும், அவருக்கு எதிராக, மத்திய- - மாநில அரசுகள் தொடர்ந்துள்ள வழக்குகளின் விபரங்களையும், மத்திய உளவுத்துறை, டில்லிக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த நபரின் வலது கரமாக செயல்படும் நபர் பற்றிய விபரமும், பிரதமரின் பெயரை, 'டேமேஜ்' செய்வதற்காக செலவிடப்பட்ட நிதி பற்றிய தகவல்களும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோட்டை விட்ட ஐ.பி.,அதிகாரிகள் புலம்பல்
சென்னையை, தலைமையிடமாக கொண்டு, தென் மாநிலங்களை கண்காணிக்கும், மத்திய உளவுத் துறையான, ஐ.பி.,யின் இணை இயக்குனர் பணியில் தற்போதுள்ள அதிகாரிக்கு போதிய அனுபவம் இல்லை. அதனால், ஜல்லிக்கட்டு உட்பட பல விஷயங்களில், மத்திய அரசு மீது, மக்களிடயே உள்ள எதிர்மறை எண்ணங்களை சேகரித்து, டில்லிக்கு அனுப்ப, அவர் தவறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதற்கு
காரணம், தனக்கு கீழ் வேலை பார்க்கும் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா
மற்றும் வட மாநில உளவு அதிகாரிகள் கொடுக்கும் பல தகவல்களை நம்பாமல், அவர்
உதாசீனம் செய்து
வருவதே காரணம் என, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டில்லி சந்திப்பில் பன்னீரிடம் மோடி பேசியது என்ன? முதல்வர் பன்னீர்செல்வம், டில்லியில் பிரதமரை சந்தித்த போது, 'ஒரு நாள் தங்கி யிருங்கள்; அதற்குள், ஜல்லிக்கட்டு நடத்த தேவையான முழு ஏற்பாட்டையும் செய்து தருகிறேன்' என, மோடி உறுதியளித்த தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, பா.ஜ., வட்டாரம் கூறியதாவது:
டில்லியில் பிரதமரை, 19ம் தேதி, பன்னீர் செல் வம் சந்தித்தார். அவருடன் சென்ற தம்பி துரையை, பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் பேசிய பிரதமர், மத்திய அரசால் நேரடியாக அவசர சட்டம் கொண்டு வர முடியாத நிலை பற்றி விளக்கினார். அது தொடர்பாக, ஜெயலலிதாவிடம் கூறியிருந்ததையும் தெரிவித்தார்.
மேலும், 'மாநில அரசு நினைத்தால், ஜல்லிக் கட்டு நடத்த முடியும்; அதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, கூறியுள்ளார். இதையடுத்து, பிரதமர் அலுவலகம் சார்பில், 'ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தரப்படும்' என, 'டுவிட்டரில்' பதிவு செய்தது. அதையொட்டியே, பன்னீர்செல்வமும் பேட்டி தந்தார். பின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக, இரவு டில்லியில் தங்கி யிருக்கும் படியும், சட்ட ரீதியான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட உள்ளதாகவும், பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் பிரதிநிதியாக பன்னீரை மோடி கருதுகிறார். மோடி, பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன் இடையே ரகசிய கூட்டணி என, தமிழக பா.ஜ., தகவல் பரப்பியது. இதனால், கடுப்பான சசிகலா தரப்பு, பன்னீர் செல்வத்தை உடனடியாக தமிழகம் வர பணித் தது. ஆனாலும், மோடி சொன்னபடி, டில்லியில் பன்னீர்செல்வம் தங்கினார்; கொடுத்த வாக்குறுதியை, மோடியும் நிறைவேற்றினார். இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (98)
Reply
Reply
Reply