அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜல்லிக்கட்டு, கவர்னரின் அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம், நிரந்தர தீர்வு கிடைக்கும், மாணவர்கள் முடிவு

'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டத்தை தொடர்வோம்' என, போராட்ட களத்தில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு, கவர்னரின் அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம், நிரந்தர தீர்வு கிடைக்கும், மாணவர்கள் முடிவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, 2014 மே, 7ம் தேதி, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, உரிய நடவடிக்கை எடுக்காமல், அரசியல் கட்சிகள், ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்யத் துவங்கின. அதனால், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.

இந்த ஆண்டு தடை நீங்கி விடும் என்ற நம்பிக்கையில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், விழா ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், தடை நீக்கப்படாததால், பொங்கல் பண்டிகைக்கு, போட்டி நடத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அறவழி போராட்டத்தில் குதித்தனர்.

அவசர பயணம்


அனைத்து மாவட்டங்களிலும், லட்சக்கணக் கான இளைஞர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். சென்னையில், மெரினா கடற்கரையில், இதுவரை இல்லாத அளவுக்கு, லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் திரண்டு, ஐந்து நாட்களாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு

நாள், இந்த போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், அவசரமாக டில்லி சென்று, பிரதமரை சந்தித்தார். 'ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்' என,
வலியுறுத்தினார். 'உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மத்திய
அரசால், அவசர சட்டம் கொண்டு வர இயலாது. அதேநேரம், தமிழக அரசு கொண்டு வரும்
அவசர சட்டத்திற்கு, மத்திய அரசு உறுதுணை யாக இருக்கும்' என, பிரதமர் உறுதி அளித்தார்.

தற்காலிகமானது


அதன்படி, நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு, நேற்று கவர்னர் ஒப்புத லுடன், அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள் ளது. ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு விட்ட தால், இன்று, மாநிலம் முழுவதும், ஜல்லிக் கட்டு நடைபெறும் என, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று மாலை அறிவித்தார். அதன் படி, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க, நேற்று இரவு, மதுரை கிளம்பி சென்றார்.
ஆனால், முதல்வர் கூறியதையோ, தமிழக அரசின் அவசர சட்டத்தையோ, போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

* அவசர சட்டம் என்பது தற்காலிகமானது; நிரந்தர தீர்வு வேண்டும்
* குடியரசு தின விழாவிற்கு, இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, அவசர சட்டம் பிறப்பித்து, அவசரமாக ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க பார்க்கின்றனர்
* இப்போது நிரந்தர தீர்வு காணாவிட்டால், பிறகு எப்போதும், அது கிடைக்காது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம் என, அறிவித்துள்ளனர்.அலங்கா நல்லுார் மக்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி,

Advertisement

புதுச்சேரி என, பல இடங்க ளிலும் பரவியுள்ள போராட்டக்காரர் களும், இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால், இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா; போராட்டம் கைவிடப்படுமா என்றகேள்விகள் எழுந்துள்ளன.

விமர்சனங்கள் வரத்தான் செய்யும்!


'அவசர சட்டத்தை, முன்னதாகவே கொண்டு வந்திருக்கலாமே. தமிழக அரசு ஏன் அதை செய்யவில்லை?' என்ற கேள்விக்கு, ''அதற்குரிய நேரம் இப்போது தான் வந்துள்ளது. அதை முழுமையாக செய்து காண்பித்திருக்கி றோம். இது தான் நிரந்தர தீர்வு,'' என்றார் பன்னீர்.

'உங்களை சமூக வலைதளங்களில், கடுமை யாக விமர்சிக்கின்றனரே...' என, கேட்டதற்கு, ''பொது வாழ்க்கை என்றால், விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை, அண்ணாதுரை கற்றுத் தந்துள்ளார்,'' என்றார்.

இது தான் நிரந்தர தீர்வு!


''ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க, இந்த அவசர சட்டம் தான் நிரந்தர தீர்வாக அமையும். அதற்காக, 23ம் தேதி கூடும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே, சட்ட மசோதா நிறைவேற்றப் படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தின், வரலாற்று சிறப்புமிக்க, பாரம் பரிய உரிமையான, ஜல்லிக்கட்டு நடத்துவதற் குரிய தடை முழுமையாக, தமிழக அரசின் அவசர சட்டத்தின்படி நீக்கப்பட்டிருக்கிறது. நாளை, 23ம் தேதி துவங்க உள்ள, சட்டசபை கூட்டத் தொடரில், அதற்கான சட்ட முன்வடிவு வரைவு கொண்டு வரப்பட்டு, முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும்.

இந்த அவசர சட்டமானது, ஆறு மாத காலத்திற்கு, உறுதியாக நடைமுறையில் இருக்கும்.அதற்குள் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாம் காலதாமதம் செய்யாமல், வரும் சட்ட சபை கூட்டத் தொடரிலேயே, உரிய சட்டம் உருவாக்க உள்ளோம். அதனால், ஜல்லிக் கட்டுக்கு மீண்டும் தடை ஏற்படும் என்ற சந்தேகம் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
22-ஜன-201720:28:35 IST Report Abuse

Agni Shivaஇந்த போராட்டம் தொடர வேண்டும். இடைவிடாது தொடர வேண்டும். தமிழன் போராட்டத்திற்காகவே பிறந்தவன் என்பதை உலகம் அறிய வேண்டும். ஆகவே இந்த போராட்டம் தொடரவேண்டும். நிரந்தரமாக தடை நீக்கப்பட்டாலும் இந்த போராட்டம் தொடரவேண்டும். தமிழன் என்பவன் ஏமாளி அல்ல என்று உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் தொடரவேண்டும். உங்களது பேரப்பிள்ளைகள் கூட இங்கு வந்து தலைமை தாங்கும் அளவிற்கு இந்த போராட்டம் நூற்றாண்டுகளுக்கு தொடரவேண்டும். வாழ்த்துக்கள், தான் எதை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை அறியா, அறிவில்லா இளம் அ சிங்கங்களுக்கு.

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
22-ஜன-201722:33:03 IST Report Abuse

Indianஉங்கள் பீதி புரிகிறது ,, உங்கள் அரசியல் அடிப்படையையே இந்த இளஞ்சிங்கங்கள் ஆட்டம் காட்டி விட்டதல்லவா ...

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
22-ஜன-201722:42:27 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..மோசடிகளை தலை மகனாக,தலைவனாக கொண்டவர்கள் இப்படிதான் எழத்துக்கள இப்படிதானிருக்கும் இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறுதான் அக்னிசிவா. ...

Rate this:

சத்திவேல்,டிறம்மன்,நோர்வே.இது_ஒரு_சகோதரியின்_பதிவு 3 நாட்களாக பகலில் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.. நேற்று இரவு போராட்டம் தீவிரமடைய அங்கயே இரவு முழுவதும் அமர்ந்திருந்தேன்... வித்தியாசமான பல கோஷங்கள்.. இளைஞர்களின் உற்சாகம்.. இளைஞர்களின் உத்வேகம்... "ஏம்மா காலேஜ் கிளம்பிட்டியா... இந்த பக்கமா போகாத... பக்கத்துல இருக்குற பொறுக்கி பசங்க போற வர பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு திரியுதுங்க.. பாத்து போ" இந்த மாதிரியான ஆண்களைப் பார்த்து பார்த்து ஆண்கள் எல்லாருமே இப்படித்தானோ..? என்ற எண்ணம்... நம்ம அப்பா கூட அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்திருப்பாரு போல.. என்றெல்லாம் எண்ண தோன்றும்.. டெல்லி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் நிகழ்ந்த கற்பழிப்பு போன்ற கோர சம்பவங்களை கேள்விபடும்போதெல்லாம் ஆண்களை பற்றிய தவறான எண்ணம் கொழுந்து விட்டு எரியும்.. ச்சா... என்ன ஆண்கள் இவர்கள்.... எப்படி சலித்துக் கொள்வேன்.. ஆனால் நேற்று ஒரு இரவில்., என் தந்தையுடன் அமர்ந்திருந்தேன்.. இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்... ஒரு பக்கம் மைக்கில் ஒருவர் ஒருவராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள்... கைத்தட்டல் விசில் சத்தமுமாக இருந்தது... ஒருபுறம் வாட்டர் பாக்கெட்டுக்களும் , மற்றொரு புறம் இரவு உணவு பொட்டலங்களும் பிஸ்கெட் பாக்கெட்டுக்களும் பறந்து கொண்டிருந்தன... 4 நாட்களாக தொடர் போராட்டத்திலும் சற்றும் சோர்வடையாமல் அங்கும் இங்குமாக குரல் எழுப்பி கொண்டிருந்தனர்.. "சாப்பாடு எல்லாருக்கும் வந்துருச்சா? வரலைன்னா கைய தூக்குங்க" வியப்பு... இரத்த உறவு இல்லை... முன் பின் தெரியாது... இப்படியிருந்தும் அவ்வளவு பாசம்..."பாஸ் நாங்க சாப்பிட்டோம்... சாப்பிடாதவங்களுக்கு கொடுங்க... பர்ஸ்ட் நீங்க சாப்பிட்டீங்களா.?" என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது.. ஆயிரம் தந்தைகளுடனும் லட்சக்கணக்கான சகோதர சகோதரியுடனும் ஒருபிடி சாதம் உண்ட உணர்வு எப்படி இருந்தது தெரியுமா.. அப்படி இருந்துச்சு.. சொல்ல வார்த்தை இல்லை.. சாப்பிட்டு முடிப்பதற்குள் 2 வாட்டர் பாக்கெட்டுகள் என்னிடத்தில்.... லட்சக்கணக்கான ஆண்களை கடந்தே இயற்கை உபாதைகளுக்கு செல்ல நேர்ந்தாலும் ஒருவரின் நிழல் கூட என் மீது விழவில்லை... முதல் முறை எழுந்து செல்லும் போது அப்பா கூட பாதுகாப்புக்கு வந்தார்... 2 வது முறை செல்கையில் எழுந்திருக்க முயற்சி செய்த தந்தையின் தோளில் அழுத்தி நீ இங்கயே இருங்க நா போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு தனியாவே கூட்டத்தில் சென்றேன்... அன்றைய இரவிலும் கூட அனைத்து ஆண்களும் என் கண்களுக்கு அழகாகவே காட்சியளித்தனர்... வித்தியாசமான அடுக்குமொழி வசனங்கள்.. விடியும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது... விடியற்காலையில் வீடு திரும்புகையில் அப்பா வண்டி எடுத்திட்டு வர்றேன்.. இங்கயே இருனு சொல்லிட்டு போனாரு.. குப்பைகளை அகற்ற சில இளைஞர்கள் பைகளுடன் சுற்றி கொண்டிருந்தனர்... குப்பை அள்ளும் ஒருவன்... என்னை கண்டு புன்னகைத்தான்... அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு... அப்பா செல்லும் வரை கவனித்திருப்பான் போல.. அப்பா அன்று சொன்ன பொறுக்கி பசங்கள்ல ஒருத்தன்... பதிலுக்கு நானும் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தேன்... ஆண்களை பற்றிய அத்துனை தவறான எண்ணங்களையும் உடைத்தெறிந்தது... காலை 8.30 க்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்... தமிழன்டா.. ஒரு இந்திய தமிழ் மாணவியின் மடல் whatsup இலிருந்து. .....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
22-ஜன-201721:24:27 IST Report Abuse

Agni Shivaபோராட்டம் எல்லாம் முடிந்த பின்பு அதே கடற்கரைக்கு ஒரு எட்டு மணிவாக்கில் போய் தனியாக உட்காந்து விட்டு தான் வாயேன் கண்மணி. அப்போது அங்கு வருபவனும் தமிழனாக தான் இருப்பான். இத்தனை ஆயிரம் கூட்டத்தில் ஒருவரும் இவரை நோண்டவில்லையாம். அது சாதனையும். சென்னையில் கொலைகாரன் பேட்டையில் ஒரு இரவில் தனியாக போய் வா. அங்கு இருப்பவனும் 100 % தமிழன் தான். அதற்க்கு பிறகு தமிழகத்தில் பெண்கள்மீதான குற்றங்கள் கடந்த ஆண்டு மட்டுமே 537 கற்பழிப்புகள் நடந்திருப்பதாக போலீஸ் குற்றவியல் அட்டவணை ஓன்று குறிப்பிடுகிறது. இதை செய்திருப்பவர்கள் தமிழன்கள் இல்லை என்று இவர் கூறுவாரா? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வந்ததினால் எல்லோரும் யோக்கியாமானவர்கள் ஆகிவிட்டார்களாம். குழந்தை தமிழில் பேச கத்துக்குது. ...

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
22-ஜன-201718:21:35 IST Report Abuse

Narayanஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கும் பாஜக, மோடி, சுவாமி, இந்துத்வ ஆட்களை வில்லனாக ஆக்கி விட்டார்கள் சரி. ஆரம்பத்தில் இருந்தே வில்லனாக இருக்கும் திமுக காங்கிரஸ் கட்சிகளை நல்லவர்கள் ஆக்கி விட்டார்கள் சரி. இப்போது தனி தமிழக இந்திய தேச எதிர் போராட்டமாக மாறி விட்டது. நிரந்தர தீர்வு வந்த பின்பும் போராடுவது தேச விரோத மூர்கமானவர்கள்/ மிஷனரி /நக்சல்/ திமுக கும்பல் இதனை கடத்தி விட்டது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

Rate this:
Krishna Kumar - Chennai,இந்தியா
22-ஜன-201721:12:34 IST Report Abuse

Krishna Kumarகடந்த ரெண்டு வருடமா என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்.... எப்படி பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சுட்டு இருந்தீரா. ...

Rate this:
மேலும் 92 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X