பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு வேண்டுகோள்

Added : ஜன 22, 2017 | கருத்துகள் (126)
Advertisement
ஜல்லிக்கட்டு, கார்த்திகேய சிவசேனாதிபதி

சென்னை: ‛ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார். காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே, இறுதியில் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசால் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முதல் கட்ட நடவடிக்கையாக எடுத்து கொண்டு, சட்டரீதியாகவும், பார்லிமென்ட் மூலமாகவும் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிகளை துவக்குவோம். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவே, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


பிரதமர், முதல்வரை நம்புங்கள்:

சுமூகமான தீர்வை ஏற்படுத்த நமது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களை நாம் நம்ப வேண்டும். நாளை, அலங்காநல்லூரில் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்புவோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவியுங்கள். புதிய பிரச்னைகள் ஏதும்வேண்டும். காளைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். ஒரு பிரச்னை ஏற்பட்டால், விலங்குகள் நல அமைப்புகள் அதை கோர்ட்டுக்கு எடுத்த செல்ல தயாராக உள்ளனர்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நாம் அமைதியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்ட ரீதியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிப்போம். இதற்காக, பிரதமர், மூன்று மத்திய அமைச்சர்கள், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள்பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அளித்துள்ள வாக்குறுதியை நம்புவோம். மாணவர்களும், மக்களும் போராட முன்வராவிட்டால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது. இந்த சூழ்நிலையில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும். அதன் பிறகு சிறிது ஓய்வு எடுத்து விட்டு, இது குறித்து சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் நெல்லையில் ஆலோசனை நடத்துவோம்.

மாணவர்களை வணங்குகிறேன்: போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவின், கல்லூரியின் பிற அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் காணுங்கள். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். அர்த்தமுள்ள தீர்வுகளை, அரசியல் சட்டப்படி தான் ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டங்களும் அந்த வகையில் தான் இருக்க வேண்டும். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட காரணமாக இருந்த மாணவர்களை வணங்குகிறேன். இந்த போராட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கடந்த மாதம் மாற்றப்பட்டு விட்டார். விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்ற புதிய வாரியம் இன்னும் இரண்டு மாதங்களில் செயல்பட துவங்கும். மேலும், பீட்டா அமைப்பின் நிதி மோசடி குறித்து விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். முறையான புகார்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்உறுதி அளித்துள்ளார். விரைவில் அந்த புகார் மனு வெளியிடப்படும். அதை அனைத்து தரப்பினரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
23-ஜன-201702:33:56 IST Report Abuse
Sekar KR நமது முதல்வரின் வார்த்தைக்கு முதலில் மரியாதை கொடுத்தால் தான் அவர் மீது மத்திய அரசுக்கு மரியாதை இருக்கும். இல்லை என்றால் மற்ற MP களுக்கு கிடைக்கும் மரியாதை கூட இருக்காது. நமக்கு அது ஏற்றது அல்ல. வாழ்க வளர்க மாணவர் சக்தி. தீய சக்திகள் ஊடுறுவல்களுக்கு இடம் கொடுக்காதீர். ஓட்டுக்கு காசும் இலவசமும் வேண்டாம் என்று உறுதி எடுப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
23-ஜன-201700:01:24 IST Report Abuse
Sahayam அண்ணா ஹசாரே போராட்டம் இப்படித்தான் முடிவுக்கு கொண்டு வர பட்டது. அனால் லோக் பால் இன்னமும் கொண்டு வர வில்லை
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
22-ஜன-201723:28:51 IST Report Abuse
Manian சரியான வழி நடத்த தெரிந்த மாணவத் தலைவரில்லாமல் ஆரம்பிக்கும் எந்த கலகமும் எந்த நாட்டிலும் சமுகமாக நடந்ததாக சரித்திரம் இல்லை. இதை மாப்(mob)மனோநிலை என்பார்கள். வெரும் உணர்ச்சி காரணமாக(சிந்தித்து எடுக்காத)அதன் திசை தீயவர்களின் கைக்கு போய்விடும்.ஆரம்ப குறிக்கோள் கடிவாளம் இல்லாத காட்டு குதிரை போல் தறி கெட்டு ஓடும். சைனாவில் டின்னமன் சதுர மைதனாத்தில் எத்தனையோ பேர்கள் கொல்லப்பட்டார்கள்.சமூக விரோதிகள், அரசியல் வியாதிகள் இந்த புரட்சியை சுய நலத்திற்கு எப்படி உபயோகித்து கொள்வவா்கள் என்பதை சீக்கிரமே இந்த மணாவர்கள் உணவார்கள்.இந்த உண்மை சுடும்.இங்கே பலரும் இதை ஏற்க மருப்பார்கள். மழை வெள்ளம் வரும் போது தண்ணீரை சேமிக்க வழி செய்யாதைப் போலவே இந்த புரட்ச்சியும் வீணாகிறதே என்பதை நினைக்கும் போது, சுதந்திரத்திற்கு பாடுபட்டு உயிர் இழந்தவர்கள் தங்கள் உயிர் இழப்பு வீணாக போனதே என்று வருந்தம் நிலை தற்போதும் மறுபடியும் அரங்கேருகிறதே. சரித்திம் திரும்புகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X