அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கவர்னர் உரை புறக்கணிப்பு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை:சட்டசபையில், கவர்னர் உரையை புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கவர்னர் உரை புறக்கணிப்பு, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சட்டசபையில் நேற்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச துவங்கியதும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உரையை புறக்கணித்து, தி.மு.க., - காங்., - இந்தியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின், அவர்கள் கூறியதாவது: ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்:தமிழகம் முழுவதும், கொந்தளிப்பான நிலை உள்ளது. மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு, ஒரு வார காலமாக, ஜல்லிக்கட்டுக்காக போராடினர். இந்த பிரச்னையில், தமிழக அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை. முறையாக நடந்திருந்தால், இந்த போராட்டம் நடந்திருக்காது. இந்த அரசு, தற்காலிகமாக ஏதோ செய்து, மாணவர்களையும், மக்களையும் ஏமாற்ற முயற்சித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அறவழியில் போராடிய மாணவர்களுடன், முதல்வர் பேச்சு நடத்தி இருக்க வேண்டும். அவ்வாறு நடத்தியிருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. அரசு நடவடிக்கை கவலைக்குரியதாகஉள்ளது.

* ராமசாமி, காங்., சட்டசபை தலைவர்: நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்கள் அகிம்சை வழியில் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக, அரசு எடுக்கும் நடவடிக்கையை, கடந்த ஆண்டு ஏன் எடுக்கவில்லை. சரியான அணுகுமுறையை, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டத்தின் விளைவுகளுக்கு, மத்திய, மாநில அரசுகளே காரணம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி


மெரினாவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, முதல்வர் சந்திக்காதது ஏன்' என, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.சட்டசபையில், நேற்று,ஜல்லிக்கட்டு சட்ட மசோதா மீது நடந்த விவாதம்:ஸ்டாலின்: தமிழர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்கும், இந்த மசோதாவை, தி.மு.க., வரவேற்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக,

Advertisement

இது நிகழ்ந்துள்ளது. இது, மாணவர்கள் நடத்திய மொழி புரட்சியை நினைவூட்டுகிறது.
மெரினாவில் மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தின் போது, அவர்களை சந்தித்து, தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை, முதல்வர் விளக்கி இருக்க வேண்டும். தற்போது, அங்கு அசாதாரண சூழல் நிலவுவதை தவிர்த்திருக்கலாம்.
முதல்வர்: நான் டில்லி போவதற்கு முன், மாணவர்கள், என்னை பார்க்க விரும்புவதை அறிந்து, விமான டிக்கெட்டை ரத்து செய்து, அவர்களை சந்தித்தேன்; சென்னை திரும்பிய பிறகும் சந்தித்தேன். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெறாததால், தடை பெறப்பட்டது.
ஸ்டாலின்: அப்படி இருந்தாலும், தி.மு.க., ஆட்சியில், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-201720:15:14 IST Report Abuse

தமிழவேல் இருந்து முழுதும் கேட்டுக் கொண்டு விவாதம் செய்திருக்க வேண்டும். விவாதத்திற்கு அனுமதி இல்லை என்றால் வெளிநடப்பு செய்யலாம்.

Rate this:
Ramudu - Chennai,இந்தியா
24-ஜன-201720:05:32 IST Report Abuse

Ramuduதளபதி அவர்களே... சிறிது காலமாக உங்கள் பேச்சில் ஒரு தனித்துவம் தெரிந்தது.... ம்ச்... ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உங்கள் ஸ்டண்ட் டை பார்த்து பழைய குருடி கதவை திறடி கதை மாதிரி ஆயிடுச்சு..

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
24-ஜன-201719:48:35 IST Report Abuse

John Shiva   U.Kதி மு க ஒரு குடும்ப கட்சி ,ஊழலில் முதலிடம் .இவர்களுக்கு வெளிநடப்பு செய்வதில் மிக திறமைசாலிகள் .அடுத்த தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளையும் புறக்கணித்து ஒரு வீரத் தமிழன் தமிழ்நாட்டை ஆள மாணவர்கள் திட சங்கற்பம் எடுக்கணும்

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X