சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போராட்ட களத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்?
ஆதி முதல் அந்தம் வரை போலீஸ் அதிகாரி 'பளிச்'

ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பிய, கல்லுாரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு அறவழிப் போராட்டம், திடீரென திசைமாறி கலவரத்தில் முடிய காரணம் என்ன; போராட்டக்காரர்களுடன் ஊடுருவிய நபர்கள் யார்? அவர்களது திட்டம் என்னவாக இருந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்ட களத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்? ஆதி முதல் அந்தம் வரை போலீஸ் அதிகாரி 'பளிச்'

தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தின் முதல், மூன்று நாட்கள் எவ்வித பிரச்னையும் இல்லை. நான்காம் நாள் நக்சல் ஆதரவு, இனவாத, மதவாத போக்கு கொண்ட நபர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவினர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், மெல்ல மெல்ல பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர்செல்வத்தை வசைபாடும் களமாக மாறியது. மோடியை குறி வைத்து, ஒரு கூட்டம் இயங்கத் துவங்கியது. அவர்கள், சர்வதேச மத பயங்கரவாதி படத்துடன் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் மக்களுக்கு, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள், ஆயிரக்கணக்கில் வினியோகிக்கப்பட்டன.

சமூக வலைதளங்கள்


சென்னை, மெரினா, கோவை, வ.உ.சி., மைதானத்திலும் இது போன்ற பிரசாரங்கள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பரப்பினர். போராட்ட களங்களில் ஊடுருவிய இளைஞர்கள் சிலர் மைக், ஒலிபெருக்கி வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்தி, தனித்து இயங்க ஆரம்பித்தனர். மேடை பேச்சுக்குரிய நாகரிகமின்றி, ஆட்சியாளர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர்; மோடியை ஒருமையில் விமர்சித்தனர்.
ஏற்கனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, 'இவ்வாறெல்லாம் நாகரிகமின்றி பேசக்கூடாது' என, அறிவுறுத்தியபோது எதிர்த்து மிரட்டியுள்ளனர். தங்களின் அறவழி போராட்ட நோக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதால், மாணவர்கள் அமைதி காத்தனர்.

இதை தங்களுக்கு சாதகமாக்கிய ஊடுருவல்காரர்கள், போராட்டம் நடந்த இடத்துக்கான பாதுகாப்பு வளையத்திலும் இடம்பிடித்தனர். போக்குவரத்து சீரமைப்பு, உணவு வழங்கல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என, அனைத்திலும், தங்களது ஆட்களை ஈடுபடுத்தினர்.

ஊடுருவல்காரர்களே தீர்மானித்து


ஒரு கட்டத்தில், இவர்களை மீறி யாரும் அங்கே இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. 'ஹிப் ஹாப் தமிழா' ஆதிக்கு கோவை வ.உசி., பூங்காவில் நேர்ந்த அவமரியாதையும்,
மிரட்டலும் இதற்கு உதாரணம். அவர் எந்த மேடையில் நின்று, என்ன பேச வேண்டும் என்பதையும் ஊடுருவல்காரர்களே தீர்மானித்து, அவர் மீது திணித்தனர். அவர் மறுத்ததால், அவமானப்படுத்தினர். வெறுப்படைந்த அவர் வெளியேறினார்.
தனக்கு நேரிட்ட மிக மோசமான அனுபவத்தை, வீடியோ வாக்குமூலமாக, 'பேஸ்புக்'கிலும் பதிவிட்டார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை, தமிழக அரசு அறிவித்ததும், போராட்டம் முடிவுக்கு வரும் என்றே பலரும் நம்பினர். ஆனால், போராட்டத்தை இறுதி செய்ய விடாமல், சில சக்திகள் முட்டுக்கட்டை போட்டன.ஜல்லிக்கட்டு கோரிக்கையுடன், மேலும் பல கோரிக்கைகளையும் முன் வைத்து கூட்டத்தை கலையாமல் பார்த்துக் கொண்டனர்.
சென்னை, மெரினா கடற்கரையில் திரண்டிருந்த பல லட்சம் மக்களின் பிரதிநிதியாக செயல்பட்ட சிலர், தங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். 'அதிகாரப்பூர்வ கமிட்டி' ஒன்றை அமைத்து, வெளிப்படையாக அறிவியுங்கள். அந்த கமிட்டியில் உள்ளவர்களுடன் அரசு பேச்சு நடத்தும்' என்று தெரிவித்தோம்.பல லட்சம் பேரில், யாரை, கமிட்டியில் சேர்ப்பது என்ற குழப்பம் அவர்களுக்கு. அதனால், அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஓரிரு முக்கிய நபர்களுடன் தொடர்ந்து பேசி வந்தோம்.


எச்சரிக்கை


'நாங்கள் சொன்னால் இங்கே யாரும் கேட்க மாட்டார்கள்; அறிவுரை கூறினால், நாங்கள் விலை போய் விட்டதாக குற்றம் சாட்டுவர்' என, அவர்களும் நழுவினர். கடைசிகட்டமாக, போராட்ட குழுவின் முக்கிய நபர்களுடன் பேசினோம். 'இனவாத, மதவாத நபர்கள், உங்களது குழுவில் ஊடுருவியிருக்கின்றனர்; அவர்கள், போராட்டத்தின் போக்கையே மாற்றுவர்; சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் நேரிடலாம். உடனடியாக அந்த நபர்களை, அந்த அமைப்பினரை வெளியேற்றுங்கள்' என எச்சரித்தோம்.சில அமைப்புகள், சில நபர்களின்

Advertisement

பெயர் விபரங்களையும் அளித்தோம். போராட்ட குழுவினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதிலும், நிலைமை எல்லை மீறிவிட்டது. ஊடுருவிய சிலர், பலர் ஆகி, நுாற்றுக்கணக்கில் வலுத்து நிலை பெற்று விட்டனர்.

தனி தமிழ்நாடு, தமிழ் தேசியம், புரட்சி கோஷங்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கின. மோடிக்கு எதிராக, மத துவேஷத்தை துாண்டும் கோஷங்களும் அதிகரித்தன. அதன்பின் விழித்துக் கொண்ட போராட்டக்காரர்கள் அந்த கும்பலை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்; அது முடியாமலே போய் விட்டது. போராட்டத்தின் போக்கு திசைமாறுவதை கணித்தோம். தடுப்பு முயற்சி தோல்வி அடைந்துவிட, விளைவை எதிர்கொள்ள, போலீசாரை ஆயத்தப்படுத்தினோம்.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத மக்கள் எழுச்சியை, மத்திய அரசுக்கு எதிராக திசை திருப்பி விடும் திட்டமே, ஊடுருவல்காரர்களின் முக்கிய அம்சமாக இருந்தது.ஊடுருவல்காரர்களின் சதி திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் தான், தமிழக அரசு, அவசரச் சட்டம் பிறப்பித்ததும், போராட்ட களத்தை விட்டு கலைந்து செல்லுமாறு மக்களை, குறிப்பாக, மாணவர் களை வலியுறுத்தினோம்.

எல்லை மீறியது


போராட்டக்காரர்கள் கள நிலவரத்தை உணர்ந்து கொள்ளாமல், போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்தே, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினோம். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது கையில் லத்தி, துப்பாக்கி, ஷீல்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றே போலீசாரை அறிவுறுத்தியிருந்தோம். நிலைமை எல்லை மீறி போனதும் தான், குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்ய வேண்டியதாயிற்று. இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balamurugan - chennai,இந்தியா
30-ஜன-201713:55:16 IST Report Abuse

balamuruganஆரம்பம் முதலே சிலர் கலவரம் பண்ணும் நோக்கில் செயல்பட்டனர்.சில ஊர்களில் தண்ணீர் பாக்கட்டுகளை எறிந்தது இதற்க்கு சாட்சி.

Rate this:
tajdeen - trichy,இந்தியா
25-ஜன-201716:27:46 IST Report Abuse

tajdeenநின்னுக்கிட்டிருந்த ஆட்டோ நக்சல் காரங்க ஆட்டோ புத்திசாலி போலீஸ் அதை கண்டு பிடுச்சு கொழித்திங்க , தங்கி திட்டம் போட்ட குடுசையும் கொழித்திட்டாங்க . அவுங்க சாப்பிட வைத்திருந்த காய் கறியையும் தூக்கி எறிஞ்சுட்டாங்க . போலீசுக்கு விறு கொடுக்கணும் . இடையும் கட்டுரையில் சேர்த்துக்கங்க

Rate this:
tamilan - kovai,இந்தியா
25-ஜன-201714:32:18 IST Report Abuse

tamilanஊடுருவிய மர்ம மனிதர்

Rate this:
மேலும் 132 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X