சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதிகளுக்கு பேனாவில் கஞ்சா கடத்திய சிறை ஊழியர் கைது

Added : ஜன 24, 2017
Advertisement

புழல்: மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, பேனாக்கள் மூலம், கஞ்சா கடத்திய, சிறை ஊழியன் கைதுசெய்யப்பட்டான்.சென்னை புழல் மத்திய தண்டனை சிறை அலுவலகத்தில், உதவியாளராக வேலை செய்து வந்தவன், பெரியகருப்பன், 51. சிறை வளாக காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தான்.நேற்று முன்தினம் காலை, அவன் பணிக்கு சென்ற போது, சிறைக்காவலர்கள் அவனை சோதித்தனர். அவன் வைத்திருந்த, மூன்று மார்க்கர் பேனாக்களை சோதித்த போது, அதில், தலா, 10 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார், பெரிய கருப்பனை கைது செய்து, விசாரித்த போது, சிறையில் உள்ள தண்டனைகைதி, ராஜேந்திரன் என்கிற ராஜு மற்றும், சில கைதிகளுக்கு, கஞ்சாகடத்தியது தெரிந்தது.ஒரு முறை கஞ்சா கடத்த, 1,000 ரூபாய், அவன் பெற்றிருக்கிறான். மேலும் அவன், சில மாதமாக முக்கிய கைதிகளுக்கு, கஞ்சா கடத்தியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X