சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை உயிருடன் கொளுத்த முயன்ற கும்பல் : கலவரம் பற்றி போலீஸ் அதிகாரிகள் 'பகீர்'

Updated : ஜன 25, 2017 | Added : ஜன 24, 2017 | கருத்துகள் (24)
Share
Advertisement
போலீசாரை உயிருடன் கொளுத்த முயன்ற கும்பல் : கலவரம் பற்றி போலீஸ் அதிகாரிகள் 'பகீர்'

சென்னையில், நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில், பெட்ரோல் குண்டு வீசி, போலீசாரை உயிருடன் கொளுத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் என்பதால், அவர்களை கலைக்க முயலும் போது, லத்தியை கூட பயன்படுத்தக் கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுவே, எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.சென்னை, நடுக்குப்பத்தில், கலவரக்காரர்கள், கட்டடத்தின் மேல் ஏறி, எங்கள் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். அப்போது, உயிர் பிழைக்க, பெரும்பாடு பட்டோம்.

கலவரக்காரர்களின் கொலை வெறி தாக்குதலில், ஐ.ஜி., ரேங்கில் உள்ள, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை, வளசரவாக்கம், அயனாவரம், கோயம்பேடு உதவி கமிஷனர்கள் படுகாயம் அடைந்தனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஐ.சி.எப்., சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், திருவான்மியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு, எஸ்.ஐ.,க்கள், 78 போலீசார் என, 96 பேர் காயமடைந்தனர்; 95 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஐஸ் அவுஸ், எம்.கே.பி., நகர் காவல் நிலையங்களை, பூட்டி தீ வைத்தனர். போலீசார், ஜன்னலை உடைத்து, வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மயிலாப்பூர், மீன்பிடி துறைமுகம், எம்.கே.பி., நகர், அரும்பாக்கம், போலீஸ் பூத்தில் இருந்த போலீசார் மீது, பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டு உள்ளது. கீழ்ப்பாக்கத்தில், ஆயுதப்படை துணை கமிஷனர் கார்; சைதாப்பேட்டையில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனரின் கார்; விருகம்பாக்கம், அண்ணா சாலை, வடபழனி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களின் கார்கள் கொளுத்தப்பட்டு உள்ளன. வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வாகனம், போக்குவரத்து போலீசாரின் கார், சிறப்பு ரோந்து வாகனம் ஆகியவையும், தீ வைத்து எரிக்கப்பட்டன. எழும்பூரில், இணை கமிஷனரின் வாகனம், ஐஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர், ராயப்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் வாகனமும் தீக்கிரையானது. இரண்டு பெரிய வாகனங்களும், எரிக்கப்பட்டு உள்ளன.

ஜாம்பஜார், ஐஸ் அவுஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில், மொத்தம், 58 இருசக்கர ரோந்து வாகனங்களை, பெட்ரோல் குண்டு வீசி எரித்துள்ளனர். கீழ்ப்பாக்கம், ராயபுரம், தாம்பரம், சங்கர் நகர், பேசின்ட் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில், ஏழு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன. விஷமிகள், திறந்த வாகனத்தில் ஏரி கல்வீச்சு நடத்தினர். கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த போலீசாரை, கலவரக்காரர்கள் உயிருடன் எரிக்க முயன்றனர்.மொத்தம், 98 இடங்களில், போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. உயிரை பணயம் வைத்து, கலவரத்தை கட்டுப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதற்காகவா இந்த அறப்போர்? :

விஷமிகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த போலீஸ்காரர் ஒருவர், வன்முறையை தடுக்க, சமூக வலைதளங்களில், 'வீடியோ' பதிவு வெளியிட்டு உள்ளார்.அதில், அவர் கூறியுள்ளதாவது:ஆறு நாட்களாக, அறவழி போராட்டம் நடத்தினீர்கள்; உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து, நாங்களும் போராடினோம். உங்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டது. அப்படி இருக்கும் போது, எதுக்கு இந்த வன்முறை வெறியாட்டம்.நீ தமிழன் என்றால், தமிழ்நாடு போலீசில் வேலை பார்ப்பவனும், தமிழன் தானே. ஏன், இந்த கொலைவெறி தாக்குதல். ஒரு போலீஸ்காரனாக, இதை நான் தெரிவிக்கவில்லை. ஒரு தமிழனாக கேட்டுக் கொள்கிறேன்; வன்முறையை கைவிட்டு விடுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Nambi - madurai,இந்தியா
25-ஜன-201720:30:45 IST Report Abuse
Arivu Nambi உண்மையில் போலீஸ் தான் கலவரத்தில் இறங்கியது, அதாவது ஒரு வாரமாக நம்மை இரவு /பகல் என்று , இப்படி தெருவில் நிறுத்தி விட்டார்களே ,என்று ,இதற்க்கு பழி வாங்க போட்ட பிள்ளையார் சுழிதான் மெரீனாவிற்கு யாரையும் விடாமல் தடுத்தது, அப்படி தடுத்தால் மெரீனாவிற்கு வர முயற்சிப்பவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரத்தை ஆரம்பிப்பார்கள் பிறகு அடித்து வெளுக்கலாம் என்று முன்பே திட்டமிட்டிருக்கிறார்கள் ,அதே சமயம் அவர்கள் நினைத்தது போலவே உள்ளே வர முயற்சித்தவர்கள் உணவு தண்ணீர் கொடுக்கமுடியவில்லையே அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்ற கோபம் ஏற ஏற வேறு வழியில்லாமல் கல்,பாட்டில் போன்றவற்றால் தாக்க ஆரம்பித்தார்கள் .மற்றவை அனைவரும் அறிவர்.இதில் விஷமிகள் ,உள்ளே வந்தார்கள் என்று எப்படி கூறமுடியும். எல்லோரும் அதே மாணவர்கள், இளைஞர்கள் தான். இதில் துரோகிகள் சந்தேகமில்லாமல் போலிஸ்தான் .
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
25-ஜன-201720:26:20 IST Report Abuse
 Madhu ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளம் என்றெல்லாம் பேசினார்கள் அறப் போராட்டம் என்றார்கள் ஜல்லிக் கட்டு நடத்தாவிடில் இனவிருத்தி மூலம் நாட்டு மாடுகளை உற்பத்தி செய்ய முடியாது என்றார்கள் நாம் இன்று வரை நாட்டுப் பாலை மட்டும் குடித்து உயிர் வாழ்வதால், ஜல்லிக் கட்டு நின்று போனால்,சீமைப் பசுக்களின் பாலைக் குடிக்க வேண்டி வரும் என்றார்கள். ஜல்லிக்கட்டில் தோற்ற மாடுகள் இன விருத்திக்கு லாயக்கற்றவை போன்ற கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். நம்பினோம். அரை ட்ரவுசரும், டி சர்ட்டும் அணிந்த இளைஞர்கள் முந்திய ஜல்லிக்கட்டு விழாக்களில் ஏறு தழுவியதைத் திரும்பத் திரும்ப டிவி சானல்கள் காட்டிக் கொண்டிருந்தன. இதற்கிடையே நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பல இடங்களில் மஞ்சு விரட்டும், ஜல்லிக் கட்டு விளையாட்டுகள் நடைபெற்றதையும் பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். 3 பேர் உயிர்ப் பலி 50க்கும் மேற்பட்டோர் படு காயம். கர்நாடக அரசு சட்டத்தை மீறி நடந்து கொண்டதால் தாங்கள் செய்ததில் தவறு இல்லை என்றனர். மறுபடியும் காவிரி நீர்ப் பிரச்னை பற்றி இடையிடையே பேசினர். தங்களுக்கு புதிய மேடை கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக‌ பயன்படுத்திக் கொள்ளவும் புதிய அவதாரம் எடுக்கவும் பல பிரபலங்களுக்கிடையே போட்டி நிலவியது. அவசரச் சட்டம்தான் வேண்டும் என்றவர்கள், அது கிடைத்ததும் நிரந்தர சட்டம்தான் வேண்டும் எனத் தங்கள் கோரிக்கையை மாற்றினார்கள்.மாட்டுக் கறியையும், ஜல்லிக்கட்டு விளையாட்டையும் சம்பந்தப் படுத்தி விவாதித்தார்கள். தாங்கள் அமைதியான, அறவழிப் போராட்டம் நடத்தியதற்கு தாங்களே ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டார்கள். இவர்கள் அனைவரையும், உளவுத் துறையையும், காவல் துறை கண்காணிப்பையும் மீறி தேச விரோத சக்திகள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து தங்கள் திட்டத்தை விரைவு படுத்தி நிறைவேற்றிக் கொண்டு இருந்தார்கள் என்பது இப்போது நம் அறிவுக்கு எட்டும் விஷயம். ஏமாந்தவர்கள் அரசுத் துறையும், காவல் துறையும், உளவுத் துறையும் மட்டும் அல்ல. சத்திய உணர்வுடன் தமிழ்ப் பண்பாடு, கலாச் சாரத்தை மீட்கப் போராடிக் கொண்டிருப்பதாக எண்ணி இதில் இறங்கிய அப்பாவிப் பொது மக்களும்தான். இந்த ஒரு வாரத்தில் அரசாங்கமும், உச்ச நீதி மன்றமும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது எனும் விஷ‌ வித்துகளை வாய் வழியே மெரினாவில் கூடியிருந்த மக்களிடையே விதைப்பதில் பிரிவினை வாதிகள் வெற்றி கண்டார்கள். இறுதியாக‌ மக்களைக் கலைந்து போகச் சொன்ன போலீசாரைத் தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள். காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை (?) வீசி காவலர்களை உயிரோடு எரிக்க முயன்றார்கள். மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி கடலுக்கு அருகே சென்றார்கள். இவர்களின் நோக்கம் போலீசாரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பாவிப் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தச் செய்தால், அதன் மூலம் தமிழகத்தில் பிரிவினை வாதம் வேறூன்றி விடும் என்பதே. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை ஊடகங்கள் கூட போராளிகள் (?) என்று அழைக்க ஆரம்பித்தன. இப்போது ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து விட்டோம். இனிமேல் பண்டைத் தமிழர் மரபுப் படி வீரர்கள் வேட்டியைக் கச்சமாகக் கட்டிக் கொண்டு,தலையில் முண்டாசுடனும், வெற்று மார்புடனும் ஏறு தழுவப் போகிறார்களா? அல்லது வண்ணச் சீருடையில், அரை டிரவுசரும், டி ஷர்ட்டுடனும் அல்லது ஜீன்ஸ் பாண்ட்டுடன் ஏறு தழுவப் போகிறார்களா? மாட்டுக் கறி சாப்பிடுவதை விட்டு விடப் போகிறார்களா? ஜல்லிக் கட்டில் தோற்ற மாடுகள் இன விருத்தி செய்ய லாயக்கற்றவையா? தோற்ற மாடுகளை இனி என்ன செய்வதாக உத்தேசம்? ஜல்லிக்கட்டு இனி பொங்கலுக்கு மட்டும் நடக்குமா? அல்லது வாரா வாரம் நடக்குமா? அமைதியாக நடக்குமா? உயிரிழப்பு நேர்ந்தால் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமா? இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
25-ஜன-201719:46:07 IST Report Abuse
M.Guna Sekaran சூப்பர் அடுத்த படத்துக்கு கதை ரெடி ? எல்லா டிவி சேனலிலும் பார்த்தால் தெரியும் ? யாரு முதல் குர்ரவாளி என்று ? யாரு இந்த அதிகாரத்தை கொடுத்தது கூட்டத்தை கலைந்து போக சொல்லி , அதை முதலில் கூறுங்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X