பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மாணவர் போராட்டத்தால்
மிரண்ட அமெரிக்க நிறுவனங்கள்!

கோவை:ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஆடிப்போனது மத்திய, மாநில அரசுகள் மட்டு மல்ல; அமெரிக்க நிறுவனங்களும் தான். குளிர்பான விற்பனையில், 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட என்ன காரணம் என ஆராய, கள ஆய்வாளர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மாணவர் போராட்டத்தால் மிரண்ட அமெரிக்க நிறுவனங்கள்!

தமிழகத்தில், கல்லுாரி மாணவர்களால் துவக் கப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், 'பீட்டா' மீது பாய்ந்து, அமெரிக்க நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு எதிரானதாக திசை மாறியது.'பீட்டா'வின் பூர்வீகம் அமெரிக்கா என்பதால், அந்த நாட்டு நிறுவனங்களின் தயா ரிப்புகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என, போராட்டக்களங்களில் குரல்கள் வலுத் தன. கோக கோலா, பெப்சி உள்ளிட்ட அன்னிய நிறுவனங்களின்பொருட்களை உடைத்தெறிந்து தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர் இளைஞர்கள்.


இதன் தொடர்ச்சியாக கோவை நகர கடைகளில், 'இங்கு கோககோலா, பெப்சி' விற்கப்படுவதில்லை' என்ற அறிவிப்புகளை வைத்தனர். இது குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

நேற்று முன்தினம் கோவை நகரின் மத்தியிலுள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் திரண்ட பொதுமக்கள், அங்குள்ள கடையின் முன் அமெரிக்க நிறுவன தயாரிப்பு குளிர்பான பாட்டில்களை சாலை யில் உடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவ் வழியாகச் சென்ற மக்களும் பங்கேற்றனர். இது போன்ற எதிர் பிரசாரங்களால், தமிழகத்தில் அன்னிய நிறுவன குளிர்பானங்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தென் மாநிலங்களுக்கான குளிர்பான டீலர் ஹரீஸ் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் காரணமாக, தமிழகத்தில் குறிப்பாக சென்னை,கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், குறிப்பிட்ட பிராண்ட் குளிர்பான விற்பனை பாதிக் கப்பட்டது. வழக்கமான மொத்த விற்பனையில், 25 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

Advertisement

போராட்ட காலங்களில் இளைஞர்கள் புறக்கணித்ததும், கல்லுாரி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதும் காரணமாக இருக்கலாம். பொதுவாக, ஆண்டு தோறும் ஜனவரியில் துவங்கி ஜூன் வரை குளிர்பான விற்பனை ஏறுமுகமாக இருக்கும். இந்தாண்டு, ஆரம்பத்தி லேயே விற்பனையில் சரிவு நிலவுகிறது.

இதற்கான காரணங்களை ஆராய, கள ஆய் வாளர்களை குளிர்பான நிறுவனங்கள் அனுப்பி யுள்ளன. அவர்கள் இப்போதுதான் பணியை துவக்கியுள்ளனர். அன்னிய நிறு வனங்களின் குளிர்பான விற்பனை பாதிக்கப் பட்ட அதே வேளையில், உள்நாட்டு குளிர் பானங்களின் விற்பனையில் மாற்றமும் இல்லை; ஏற்றமும் இல்லை.இவ்வாறு, ஹரீஸ் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
28-ஜன-201709:51:12 IST Report Abuse

Kailashஅமெரிக்க நிறுவனத்தால் தான் மாணவர்கள் ஒன்று சேர்ந்தனர்( facebook , whatsup மற்றும் சமூக வலைத்தளங்கள்) இந்த நிறுவனத்தால் அவர்கள் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுக்கே பாதிப்பு (coke , pepsi ,peta ) என் உறவினர் ஒருவர் தன் IT நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் மொத்தமாக பலபேர் பணம் போட்டு அலுவலக கேன்டீனில் coke , pepsi வாங்கி வீதியில் கொட்டி போராட்டம் நடத்தினர் அதை என்னிடம் வேறு பெருமையாக கூறினார். நான் கேட்ட கேள்வி உங்களின் ப்ராஜெக்ட் அமெரிக்க நிறுவனத்தில் இருந்துதானே வருகிறது என்றேன். பதில் கூற முடியவில்லை. 1991 க்கு பிறகு நமது சந்தையில் பெரும்பகுதி ஊடுருவி விட்டனர். இந்திய நிறுவனங்களை இயக்குவது இவர்கள்தான் 100 % இந்திய நிறுவனங்களை கூட நிதி சந்தை, பங்கு சந்தை , ஆராய்ச்சி, கம்ப்யூட்டர், சாப்ட்வேர், நெட்ஒர்க், வங்கி, ஏற்றுமதி இறக்குமதி என்று பின்னி பிணைத்துள்ளனர். நாம் அவர்கள் பொருளை தடை விதிக்க முயற்சித்தால் நமக்குத்தான் பாதிப்பு. இதற்க்கு ஒரே தீர்வு. நாம் சத்தம் இல்லாமல் அமைதியாக அவர்களை புறக்கணிக்க வேண்டும். நம் நாடு நிறுவனத்தை, வளத்தை வளர்க்க வேண்டும் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ போல நம் வளத்தை பெருக்கி நம் சந்தையை நாம் கைப்பற்றி பிறகு முடிவு செய்யவேண்டும்.

Rate this:
sasikumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201710:51:58 IST Report Abuse

sasikumarகண்டிப்பாக தடை செய்ய வேண்டும், இதை முதலில் நம்மில் இருந்தும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் இந்த விஷயத்தை சொல்லி வாங்கி பருக தடைசெய்யவேண்டும் செய்வீர்களா ?

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
26-ஜன-201715:19:14 IST Report Abuse

Ramamoorthy Pஏற்கனவே அரசு வேலையிலிருப்பவர்களுக்கு ஒட்டு வங்கிக்காக சம்பளத்தையும் சலுகைகளையும் வாரி வழங்கி விட்டு புதிதாக வரும் தலை தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியாமல் அரசுகள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் கொஞ்சம் பேருக்காவது வேலை கொடுத்துக்கொண்டிருப்பது கார்ப்பரேட் கம்பெனிகளே அதையும் மூடச்செய்து அவர்களையும் தெருவுக்கு கொண்டு வரும் நல்ல காரியத்தை செய்வதற்கு தான் இந்த போராட்டமா?

Rate this:
மேலும் 127 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X