பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.660 கோடி!
குறுகிய கால பயிர் கடனுக்கான வட்டி தள்ளுபடி
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடில்லி:குறுகிய கால பயிர்களுக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை, தள்ளுபடி செய்ய,மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, 660.50 கோடி ரூபாய் மதிப்பிலான,வட்டி தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.

குறுகிய கால பயிர் கடனுக்கான வட்டி தள்ளுபடி ரூ.660 கோடி!:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

விவசாயிகள், குறுகிய கால பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்ய, கூட்டுறவு வங்கி களிடமிருந்து கடன் பெற்றனர். 2016 நவம்பரில், மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். கடும் பணத் தட்டுப்பாடு காரண மாக, விவசாயிகள், தங்கள் கடன் தவணைத் தொகை மற்றும் அதற்கான வட்டியை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

அதே போல், விளைபொருட்களை விற்பனை செய்து, அதற்கான தொகையை ரொக்கமாக

பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, விவசாயிகள் நலன் கருதி, குறுகிய கால பயிர்களுக் காக, விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கான வட்டியை, தள்ளுபடி செய்ய, மத்திய அரசு முடிவெடுத்தது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை யின், நவ., - டிச., மாதங்களுக்கான வட்டியை, தள்ளு படி செய்ய, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம், 660.50 கோடி ரூபாய் மதிப்பிலான, வட்டி தொகை தள்ளுபடி செய்யப் படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தமாதங்களில், விவசாயி கள், தங்கள் கடனுக்கான வட்டியை செலுத்தியிருந் தால், அந்த தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப் படும் எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீட்டு கடனுக்கு வட்டி மானியம்


கிராமப்புறங்களில் வீடு கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு லட்சம் ரூபாய் வரை பெறப் படும் வீட்டுக் கடனுக்கு, 3 சதவீத வட்டி மானியம் வழங்கும் திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிராமப்புறங்களில் கட்டப்படும் புதிய வீடுகளுக்கு மட்டு மின்றி, ஏற்கனவே உள்ள வீடுகளை சீரமைப்பு செய்ய பெறப்படும் கடன் களுக்கும், இந்த சலுகை பொருந்தும்.
இதன் மூலம், கிராமப்புறங்களில்,கட்டுமான துறை சார்ந்த வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, 2022ல், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட முடியும் எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.எம்.,களுக்குகூடுதல் அங்கீகாரம்


ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை

Advertisement

நிறு வனங்கள், பட்டம் வழங்க அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.ஐ.எம்.,களில், மேலாண்மை பாடத்தில், பி.ஜி.டி.எம்., மற்றும் 'பெல்லோ' பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பட்டய சான்றிதழ்களே வழங்கப்படுகின்றன. இவை, எம்.பி.ஏ., பட்டத்திற்கு நிகரானதாக கருதப் பட்டாலும், வெளிநாடுகளில், இந்த சான்றிதழ்கள் பட்டப்படிப்புக்கு நிகரானதாக ஏற்கப்படுவதில்லை.

எனவே, ஐ.ஐ.எம்.,களில், பட்டப் படிப் புகளை நடத்தி, அந்த அமைப்பு களே பட்டம் வழங்க வகை செய்யும் மசோதா, மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, அமைச்சரவை, நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.ஐ.எம்.,களை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்க ளாக அறிவிக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மூத்த குடிமக்களுக்குபுதிய பென்ஷன் திட்டம்


மூத்த குடிமக்களுக்கான, புதிய பென்ஷன் திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களின், எதிர்கால, பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 'வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எல்.ஐ.சி., நிறுவனத்தின் மூலம்,செயல்படுத்தப் பட உள்ள இந்த திட்டத்தில் இணைவோருக்கு, ஆண்டுக்கு, 8 சதவீத உத்தரவாத வட்டியுடன், பிரதி மாதம், காலாண்டு,அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற வகையில், பென்ஷன் தொகை வழங்கப்படும்.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
25-ஜன-201712:19:52 IST Report Abuse

Amanullahஇது மலைமுழுங்கி மல்லையாவுக்குத் தள்ளுபடி செய்ததை கணக்கில் எடுத்தால் இது ஒன்றுமே இல்லை... அதுவும் தனிப்பட்ட நபர்களின் கடன்கள் என்று பார்த்தால் மல்லையா வாங்கியதில் 0.001 சதவீதம் கூட வராது. வட்டியைத் தள்ளுபடி செய்வதைவிட கடன்களைத் தள்ளுபடி செய்வதே விவியசாயிகளின் குறை தீர்க்கும்.

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
25-ஜன-201710:24:04 IST Report Abuse

Mohamed Ilyasமோடி இந்த அளவுக்காகவாவது மனது இறங்கி விவசாயத்திற்கு உதவியதை பாராட்டுகிறேன் இதே மாதுரி பல சிறு குறு தொழிலாளர்கள் கடன் வாங்காமலும் பல இழப்பீடுகளை இந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்தித்துள்ளனர் இதனை யார் எடுக்கட்டுவது மேலும் விவசாயிகளின் நஷ்டத்தை யார் ஏற்பது ?

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
25-ஜன-201707:21:59 IST Report Abuse

தேச நேசன் உள்ளூர் நீர்நிலை நீரை வைத்து ஓரு மாத பயிராக காய்கறி போன்றவற்றை விளைவிப்பார்கள் இவற்றை ஆண்டுக்கு மூன்று நான்கு போகம் நடக்கும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் (கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்) நபார்டு வங்கியால் வட்டியைத தள்ளுபடி செய்யம் முடிவதில்லை எனவே வட்டியில்லாமல் அந்த ஓரிரு மாதங்களுக்கு கடனாக வழங்கச்சொல்லி அவ்வட்டியை மத்திய அரசே நபார்ட் வங்கிக்கு செலுத்திவிடும் இதுபோன்ற விவசாய பொருளாதாரம் பலருக்குப் புரிவதில்லை இதைப்போய் காங்கிரஸ் அரசால் அடமானமில்லா கடன் வழங்கப்பட்டு அது திரும்ப வசூலிக்காமல் போன மல்லையாவின் கடனோடு ஒப்பிடுவது முட்டாள்தனம், மல்லையாவைப் பிடித்தாலே அவனது கடன்களை வசூலித்துவிடலாம் என்பது மூட நம்பிக்கை அவனுக்கு சொத்துக்கு மேல பன்மடங்கு கடனுள்ளது நேற்றுகூட தனியார் வங்கியான IDBI மல்லையாவுக்கு அடமானமில்லாக் கடன் கொடுத்ததற்காக அதன் உயர் அதிகாரிகளும் மல்லையாவின் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளார் மோதி அரசின் ஆட்சிக்காலம் காங்கிரஸ் செய்த இமாலய ஊழல்கள் தவறுகளை சரிசெய்வதற்கே ஆகிவிடும் போலிருக்கிறது

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X