அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தில் ஊடுருவிய தீய சக்திகள்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Updated : ஜன 25, 2017 | Added : ஜன 25, 2017 | கருத்துகள் (130)
Share
Advertisement
பொன் ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு, மத்திய இணை அமைச்சர், ஜனாதிபதி, முதல்வர் பன்னீர், தமிழகம், Pon.Radhakrishnan, Jallikattu, Panneerselvam, TamilNadu

சென்னை: ‛‛ சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் தீய சக்திகள் ஊடுருவியது குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


ஏற்கனவே சொன்னோம்

சென்னை துறைமுகத்தில், இன்று(ஜன.,25) காலை பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறவில்லை. அது தான் பிரச்னைக்கு காரணம். அதன் பிறகு வந்த அ.தி.முக., அரசும் அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறவில்லை. 2016ல் மத்திய அரசு பிறப்பித்த அரசாணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்த பிறகு, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. மாநில அரசு சட்டம் கொண்டு வரலாம் என, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஏற்கனவே கூறினர்.


தீ வைத்தது யார்?

சென்னையில் முதல் நாள் போராட்டம் நடக்கும் போதே விரும்பதகாத சக்திகள், தீய சக்திகள் ஊடுருவி விட்டன. இதை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன்? போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்ததாக வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன. காக்கி உடையில் இருந்த தீய சக்திகள் யார்? அதை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன்? போராட்டத்தின் போது தனி நாடு, விடுதலை புலி ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு மதத்தின் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது ஏன், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.


முதல்வரை தடுத்தது யார்?

அலங்காநல்லூரில் முதல்வர் பன்னீர்செல்வத்தை தடை செய்தது, கிராம மக்கள் இல்லை. அங்கு இருந்த தீய சக்திகள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தீய சக்திகள் பரவிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
26-ஜன-201705:08:41 IST Report Abuse
Vetri Vel இவரை பொறுத்தவரை தமிழகமே ஒரு தீய சக்தி தானோ... இவரு .. இன்னும் எந்த மூஞ்சியோடு ஜல்லிக்கட்டு பத்தி போராட்டம் பத்தி பேசுறாரு... தமிழனை பத்தி தமிழ் நாட்டை பத்தி பேசுவதை விட்டு...
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
25-ஜன-201723:32:46 IST Report Abuse
PRAKASH.P Pon radhakrishnan sir... Where u went and actions u did for last two years to make sure jallikkattu ban to remove..then you talk all other stuffs..
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
25-ஜன-201721:49:03 IST Report Abuse
SaiBaba மாணவர்களே, இளைஞர்களே, பெற்றோர்களே, ஏழாம் நாள் கிடைத்த கொடுமைகள் மனம் வலிக்கத்தான் செய்யும். கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். இந்த அடிதடியை எதிர்பார்த்து தானே நாம் போராட்ட களத்தில் குதித்தோம். நாம் யாரை எதிர்த்தோம்? நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த அரசுகளை எதிர்த்தோம். காவலர்களும் அரசியல் வாதிகளும் புத்தர்களல்ல என்று தெரிந்து தான் எதிர்த்தோம். நீங்கள் கண்டவை அனைத்தும் போரில் பெற்ற விழுப்புண்கள். இந்த கூட்டம் கலைத்தலை முதல் நாளே அடிதடி கொண்டு அவர்கள் மேற்கொண்டிருந்தால் உங்கள் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். காவல் துறையும் அரசாங்கமும் அராஜகம் செய்திருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள், அது உங்களுக்கு கிடைத்த இரண்டாம் வெற்றி. நாளை ஆளப்போவது நீங்கள் தான். அதை மறக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X