பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போராட்டத்தில் பங்கேற்ற
மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்'

போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்க வகுப்புகள் நடத்த, கல்லுாரி பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்'

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பல விஷமிகள் ஊடுருவிய தகவல்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில், போராட்டத்திற்கு சென்ற மாணவ, மாணவியர், நேற்று கல்லுாரிகளுக்கு வரவில்லை.

இயல்பு நிலைக்கு வரவில்லை


இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், 50 சதவீதத்திற்கும் மேலான மாணவ, மாணவியர் வரவில்லை. அவர்களில், சில மாணவ, மாணவியர், சொந்த ஊர்களில் உள்ளதாகவும், போராட்டத்தில் பங்கேற்ற பலர், இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை என, கல்லுாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.


இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மெரினா கடற்கரை மற்றும் சில இடங்களில், இரவிலும் மாணவ, மாணவியர் வீட்டுக்கும், விடுதிக்கும் வராமல், கடும் பனியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை அறிந்த, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
'தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள்; கல்லுாரிகளுக்கு வராவிட்டால், உடனே தகவல் கொடுங்கள்' என, பல பெற்றோர் தனிப்பட்ட முறையில், பேராசிரியர்களிடம் கேட்டுள்ளனர். எனவே, போராட்டத்தில் தனியாக பங்கேற்ற, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்க பயிற்சி அளித்து, 'கவுன்சிலிங்' தர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெரினா கடற்கரையில் காளை சிலை



'மாணவர் போராட்டத்தின் நினைவாக, மெரினா கடற்கரையில், காளை சிலையை நிறுவ வேண்டும்' என்ற பிரசாரம், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துக்கள், சமூக வலை தளங்கள் வாயிலாக மெல்ல பரவியது. மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி,

Advertisement

சென்னை மெரினாவில், ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். அமைதி வழி போராட்டம், உலகம் முழுவதும் பேசப்பட்டது.
இதனால், மத்திய அரசு ஒத்துழைப்புடன், தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, அவசர சட்டம் கொண்டு வந்தது. பின், சட்டசபையில், நிரந்தர சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மாணவர்களின் போராட்ட வெற்றியை கொண்டாடும் வகையில், மெரினா கடற்கரையில், காளைக்கு சிலை அமைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'குடியரசு தின விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்; அது, வரலாற்று பதிவாக அமையும்' என, சமூக வலை தளங்களில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தகவல்களை பரப்பி வருகின்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmai nanban - Chennai,இந்தியா
26-ஜன-201722:23:43 IST Report Abuse

unmai nanbanஇதெல்லாம் கப்ஸா அரசியல்வாதிகள் இளைஞர்களை விட்டு புதிய அணி ஏற்படுத்திடாதபடி இப்படி மிரட்டி பணியவைக்கிறார்கள் என்று மாணவர்கள் வெளியே பேச்சு

Rate this:
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
26-ஜன-201720:43:34 IST Report Abuse

Vinod Kஎன்னைக்கேட்டா கவுன்சிலிங் கிற்கு தகுதியானவர்கள் ணாமூர் அரசியல் வாதிகள். அவர்களுக்கு கவுன்சிலின் கொடுக்கலாம். எப்படி நாகரீகமாக நடந்து கொள்வது யாரையும் பாதிக்காத வகையில் எப்படி போராடுவது போராட்டத்தின் உண்மையான வடிவம், கரை வேட்டி கட்டி கறைபடியாம பந்தல்ல உட்கார்ந்து மைக் பிடித்து போராடுவதுக்கு பேர் போராட்டம் அல்ல. பிரதிபலன் பார்க்காமல் இரவு பகல் பாராமல், வெயிலிலும் மழையிலும், பணியிலும் குளிரிலும் அனைவரும் சமமாய், அனுசரணையாய், தங்களால் முடிந்தளவுக்கு போராட்டம் நடத்தும் இடங்களை சுத்தம் செய்வது, காவலர்களுக்கு உதவி செய்வது, அனைவரையும் சமமாய் மதிப்பது, முக்கியமாய் லட்சம் பேர் கூடினாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பது என்பன பலவற்றிலும் கவுன்சிலின் கொடுக்கலாம். ஏன் என்றல், இந்த போராட்டத்தில் பிரியாணி, மது, கொடுத்து அழைத்துவரவில்லை, கோஷம் எழுப்ப காசுகொடுக்க வில்லை, ஆளுயர சுவரொட்டிகளும் பேனர்களும், வைக்கவில்லை, அவைகளுக்கு வண்ண வண்ண நிலக்குகளால் அலங்கரிக்க வில்லை, அவைகளுக்கு திருட்டு மின்சாரம் வழங்க வில்லை. மேடைபேச்சு, அல்லக்கை, சால்வை, குடிக்க சோடா, என்ன எதுவுமே இல்லை. கொள்கை ஒன்றையே அதுவே குறிக்கோள் அதை நோக்கி தான் போராட்டம் இது தான் மாணவர்களின் தமிழக இளைஞர்களின் போராட்டம், இதை தான் நீங்கள் கற்க வேண்டும் அரசியல்வாதிகளே என அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள்.

Rate this:
S.Senthilkumar - Bhavnagar, Gujarat,இந்தியா
26-ஜன-201719:41:04 IST Report Abuse

S.Senthilkumarசரி, அப்போ சம்பந்தமே இல்லாம சசிகலாவை சந்தித்த பல்கலை கழக துணை வேந்தர்களுக்கு யார் கவுன்சலிங் கொடுப்பது? யாராவது தெரிந்தால் சொல்லவும்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X