பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.50,000க்கு மேல் வரி: முதல்வர்கள் குழு பரிந்துரை

மும்பை,:வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வரி விதிக்க வேண்டும் என்பது உட்பட, மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

ரூ.50,000க்கு மேல் வரி: முதல்வர்கள் குழு பரிந்துரை

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய மாநில முதல்வர்கள் குழுவை, பிரதமர், நரேந்திர மோடி அமைத்துள்ளார்.ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு, தன் பரிந்துரைகளை, பிரதமரிடம் அளித்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்



இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:வங்கிக் கணக்கில் இருந்து, 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு வரி விதிப்பது உட்பட நாங்கள் அளித்துள்ள பரிந்துரைகள், வரும், பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என, எதிர்பார்க்கிறோம்.
மத்திய - மாநில அரசுகளின் அனைத்து பரிவர்த்தனைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத வகையில், ஆதார் எனப்படும், கைவிரல் ரேகை பதிவு விபரங்கள் நம்மிடம் உள்ளது. இதன் மூலம், மிகவும் பாதுகாப்பான, எளிதானபரிவர்த்தனைகளை ஆதார் மூலம் மேற்கொள்ள முடியும்.

கருவிகள் தர வேண்டும்


'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான

Advertisement

பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வர்த்தகர்கள் மாறும் வகையில் ஊக்கமளிக்க வேண்டும். மானிய விலையில், அவர்களுக்கு கருவிகள் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளோம்.
இந்தப் பரிந்துரைகள் மூலம், அரசின் நோக்கமான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது சுலபமாகவும், அனைவருக்கும் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nazar - Nagercoil,இந்தியா
26-ஜன-201723:37:00 IST Report Abuse

Nazarஅரசு ஏழைகளின் வயிற்றில் அடித்து பணக்கரார்களை வாழ வைக்கும் திட்டங்களை செய்கிறது. குறைந்த விலையில் பெட்ரோல் வாங்கி கூடுதல் விலையில் விற்கும் வருமானம் எங்கே போகிறது.

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
26-ஜன-201722:27:55 IST Report Abuse

muruguதிருந்த வேண்டியவர்கள் மக்களே ஒழிய அரசியல் வாதிகள் இல்லை நோட்டு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்று இருக்கும் போதும் ,இன்று நடக்கும் அநியாயத்தை நாளை நோட்டுக்காக ஓட்டு போடும் அசிங்கமானவர்கள் அதிகமாக இருப்பதினால் ,அரசியல் வியாதிகள் ஏன் மாறவேண்டும் ???

Rate this:
murasu - madurai,இந்தியா
26-ஜன-201722:00:28 IST Report Abuse

murasuகோமாளித்தனமான முடிவு. இந்த மக்கள் விரோத ஆட்சியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் .. இவர்களின் இலக்கு உயர் நடுத்தர வர்க்கம். தன் உழைப்பால் உயர விடாமல் தடுப்பதுதான் இந்த ஆட்சி

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X