கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை
சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, ஜன., 30க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை; சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த, வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்த மனு: ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக நிரந்தர சட்டம் கொண்டு வரக் கோரி, சென்னை, மெரினா கடற்கரையில், மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். ஜன., 23ம் தேதி, ஜல்லிக்கட்டு நடத்த அரசு சட்டம் இயற்ற போவதாகவும், போராட்டத்தை வாபஸ் பெறும்படியும், போலீஸ் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

போலீசாரே தீ வைத்தனர்அவசர சட்டம் குறித்து விவாதிக்க, அங்கு இருந்தோர் அவகாசம் கேட்டனர். இதையடுத்து, போலீஸ் மற்றும் சமூக விரோதிகளின் துாண்டுதலின்படி, வன்முறை நடந்தது.

சென்னையே ஸ்தம்பித்தது. பொது மக்களால் எங்கும் செல்ல முடியவில்லை.
ஆட்டோவுக்கு போலீசாரே தீ வைத்தனர்; போலீஸ் பாதுகாப்புடன் ஒரு பெண் போலீஸ், குடிசைக்கு தீ வைத்தார்; வாகனங்களை சேதப்படுத்தினர்; காரில் இருந்த பொருட்களை போலீசார் திருடினர்; வீட்டுக்குள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தினர். பொது மக்களை நோக்கி போலீசார் கற்களை வீசினர்.

இவற்றை பார்க்கும் போது, வன்முறையை போலீசார் நடத்தியது தெளிவாகும். பொது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பினர்; போலீசார் அத்துமீறி நடந்தது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றும்படி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பி உள்ளேன்.

போலீசுக்கு எதிராக ஆதாரங்கள்


வன்முறை சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பவங்கள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, போலீஸ் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ''போலீஸ் அத்துமீறலை நிரூபிக்க, போதிய ஆதாரங்கள் உள்ளன; போலீஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement

உடனே, நீதிபதி மகாதேவன், ''நீங்கள் அனுப்பிய மனு, இப்போது தான் கிடைத்திருக்கும்; அதற்கு, அவர்கள் பதிலளிக்கட்டும்; விசாரணையை, திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன்,'' என்றார்.
'காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை' என, வழக்கறிஞர் சுரேஷ் முறையிட்டார். அதற்கு, நீதிபதி மகாதேவன், ''குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தால், அதன் மீது உத்தரவு பிறப்பிக்க முடியும்; முறையான சிகிச்சை அளிக்கும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன்,'' என்றார்.
'போராட்டம் நடத்துவோரை இடையூறு செய்யக் கூடாது' என, பாவேந்தன், செந்தில்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, நீதிபதி முடித்து வைத்தார். 'போராட்டம் முடிந்து விட்டதால், மனுவை நிலுவையில் வைக்க வேண்டியதில்லை' என, உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmai nanban - Chennai,இந்தியா
26-ஜன-201722:21:42 IST Report Abuse

unmai nanbanஇந்திய ஜனநாயகம் சாமானியர்களுக்கு என்று இபோது ஆகுதோ அன்று தான் முழு சுதந்திரம் கிடைத்ததாகுமாம்

Rate this:
Girija - Chennai,இந்தியா
26-ஜன-201708:48:12 IST Report Abuse

Girijaதொட்டதெற்கெல்லாம் சி பி ஐ விசாரணை என்றால் தமிழ்நாடு போலீஸ் என்ற பெயரை சி பி ஐ போலீஸ் என்று மாற்றிவிடலாம். ஸ்கொட்லாந்துயார்டு போலீஸ் பற்றி புகழ்ந்து எப்பவோ சுஜாதா எழுதினாலும் எழுதினார் இன்னும் அதைப்பற்றி பேச்சு , ஸ்கொட்லாந்துயார்டு போலீஸ் , அமெரிக்க போலீஸ் ல்லாம் பெரிய சூரன்கள் இல்லை, ரெட்டைக்கோபுரம் தகர்ப்பு , லண்டனில் பெண் எம் பி கொலை உதாரணம், கோர்ட் நேரத்தை வீணடிக்கும் செயல்.

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
26-ஜன-201712:13:54 IST Report Abuse

Needhiyin Pakkam Nil சார் அதிகாரத்தில் இருப்பவனை வைத்து தான் தீர்ப்புகள் எழுதப்படுகிறது, இதில் சி பி ஐ மட்டும் இல்ல உன்னை படைத்த கடவுளே வந்து விசாரித்தாலும் கூட தீர்ப்பு அதிகாரத்தில் உள்ளவனின் கட்டளையை பொறுத்தே அமையும். கண்டைனர் வழக்கை சி பி ஐ தானே விசாரிக்குது......? ...

Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
26-ஜன-201715:29:36 IST Report Abuse

RAMAKRISHNAN NATESAN     பின்னர் திருடன் கிட்டேயே விசாரணை கொடுத்தால் தீ வைத்தவன் இவன் தான் என்று கண் கூடாக தெரிகிறது கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு மேலும் இவ்வளவு நாள் நம்ம போலீஸ் இதையே செய்து அடுத்தவன் மீது பழி போட்டுள்ளது இப்போ வசமா மாட்டிக்கொண்டது ...

Rate this:
skandh - chennai,இந்தியா
26-ஜன-201722:57:42 IST Report Abuse

skandhமோடியை திட்டியது, சசிகலா, பன்னீரை திட்டியது,கோட்டையை நோக்கி ஊர்வலம் செய்ய தூண்டியது மேலும் பலவற்றை பார்க்கும் போது இதை சி பி ஐ விஜாரித்தால் சரிப்படாது தானே வாய் கொடுத்து மாட்டுவது போல இந்த காசை என் ஐ எ விடம் விஜாரிக்க கொடுக்க வேண்டும் அப்போது தான் எந்த எந்த தேசவிரோதிகள் இந்த கூட்டத்தில் சேர்ந்தனர் என்பது தெரியவரும் . அவர்களையும் அவர்களை தூண்டிய அரசியல் வாதிகளையும் உடனே உள்ளே தள்ளலாம். ...

Rate this:
skandh - chennai,இந்தியா
26-ஜன-201723:02:36 IST Report Abuse

skandhசுப்ரமணிய ஸ்வாமி இளைஞர்களை போறுக்கின்னு சொல்லலை. அதில் ஊடுருவிய அரசியல்வாதிகளை,சமூக விரோதிகளை தான் பொறுக்கினார். இப்போதான் புரிகின்றது. ...

Rate this:
Mariadas - Chennai,இந்தியா
26-ஜன-201708:16:52 IST Report Abuse

Mariadasசென்னை வன்முறை காவல்துறையின் ஜனநாயகமற்ற ஒரு மோசமான முகத்தையே காட்டுகிறது. சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய இவர்களே ஒரு அமைதியான போராட்டத்தை ஒடுக்க வன்முறையை கட்டவிழ்த்து விட்டு ரவுடிகளாக மாறியதை காணும்போது இது ஒரு ஜனநாயக நாடா என்றே எண்ண தோன்றுகிறது. கையில் லத்தியையும் பலத்தையும் வைத்திருந்தால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் நாட்டில் செய்யலாமா? மக்களின் வரி பணத்தில் சம்பளமும் சலுகைகளையும் பெறும் இவர்கள் மக்களை கேவலமாக அடிப்பதும் உதைப்பதும் பொறுத்துக்கொள்ள முடியாது, கேவலமானது. எனவே கோர்ட் மிக கடுமையான தண்டனையும், இதுபோல மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான வழிமுறைகளையும் தரவேண்டும். இதுவே ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு. ஜெய்ஹிந்த்

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X