பொது செய்தி

தமிழ்நாடு

மெரினா வன்முறையில் போலீசாருக்கே அதிக காயம்: காவல்துறை

Updated : ஜன 28, 2017 | Added : ஜன 28, 2017 | கருத்துகள் (36)
Advertisement
வன்முறையில் போலீசாருக்கே அதிக காயம்: காவல்துறை

சென்னை: ‛மெரினா போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சமூக விரோதிகள் தாக்குதலில் போலீசாரே அதிகம் காயம் அடைந்தனர்' என சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனர் சங்கர் கூறினார்.

இதுகுறித்து, அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் மெரினாவில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதால் கலைந்து சென்றனர். ஜன.,23 ம் தேதி காலை சில நுாறு பேர் மட்டுமே இருந்தனர். சமூக விரோதிகள் போராட்டத்திலிருந்தவர்களை கலைந்து செல்ல விடாமல் தடுத்தனர்.விஷமிகள் போராட்டத்தை குடியரசு தினம் வரை தொடர்ந்து சதி செயல் செய்ய திட்டமிட்டனர். தேசத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்தி இருந்தனர்.

இருப்பினும், எவ்வித பலமும் பயன்படுத்தாமல் போராட்டக்காரர்களை கலைக்க வேண்டும் என முடிவு செய்தோம். மெரினாவில் இருந்த போலீசாருக்கு லத்தி கொடுக்கப்படவில்லை. பெண்கள் கலைக்க பெண் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். இறுதியாக மயிலாப்பூர் துணை ஆணையர் விளக்கமாக விவரித்தார். அதை ஏற்காத 3 மணி நேரம் கேட்டார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் ஆட்களை அதிகம் திரட்ட முயற்சித்தார்கள்.

விஷமிகள் சிலர் போலீசார் போராட்டக்காரர்கள் மீ்து தடியடி நடத்தப்பட்டதாக வதந்திகள் பரப்பினர். நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மெரினாவிற்குள் விஷமிகள் நுழைய முயற்சித்தனர்.

சமூக விரோதிகள் சிலர் போலீசார் மீது கல்வீசி,. பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மர்மநபர்கள் சிலரால் ஐஸ் அவுஸ் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வன்முறை கட்டுபடுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகை பயன்படுத்தினர். இதில், குறைந்த பல பிரயோகம் செய்ததால் போலீசாருக்கே அதிக காயம் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் 2 போலீசார் தீ வைத்ததாக விடியோக்கள் பரவி வருகிறது. 2 போலீசார் செய்வதை வைத்து அனைத்து போலீசாரையும் சாடுவது கண்டிக்கத்தக்கது. அந்த விடியோவில் உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடியோ ஆதரங்களில் வன்முறையில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகிறோம் திங்கட்கிழமை கோர்ட்டில் அனைவரும் ஆஜர் ஆவர்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.A.M - Riyadh,சவுதி அரேபியா
29-ஜன-201710:04:54 IST Report Abuse
K.A.M மாணவர்கள் மற்றும் இளைங்கர்களின் அற்புதமான அமைதிப்போராட்டம் வேண்டுமென்றே அடக்கப்பட்டு விட்டது. அவசர சட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி ஒன்றே இறுதியாகி விட்டது. இனி தமிழ் நாட்டிற்கு மத்திய அரசின் மூலமோ அல்லது அண்டைய மாநிலங்களின் மூலமோ அல்லது நம் தமிழக அரசின் மூலமோ என்ன கொடுமை நடந்தாலும் இனி இது போன்ற தன்னெழுச்சி மூலம் தட்டிக்கேட்க முடியாத நிலை உருவாகி விட்டது. போலீஸ் துறையை கடுகளவும் இனி நம்ப முடியாது என்றாகி விட்டது. அவர்களை தமிழர்களாகவும் நம்பி விட முடியாது. இனி தமிழகம் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் போலீசை மட்டும் காரணமாக்கி போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழ் நாட்டின் மொத்த பாதிப்புகளுக்கும் போலீஸ் துறை மட்டும்தான் காரணமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Kumar - College Station,யூ.எஸ்.ஏ
29-ஜன-201709:48:02 IST Report Abuse
Rajendra Kumar எத்தனை தமிழ் படங்கள் பாத்துருப்போம்.............
Rate this:
Share this comment
Cancel
abu lukmaan - trichy,இந்தியா
29-ஜன-201708:39:10 IST Report Abuse
abu  lukmaan போலீஸ் யை நான்கு வர்ணமாக பிரிக்கலாம் . நல்ல போலீஸ், ரவுடி போலீஸ், மாமூல் போலீஸ் , சிரிப்பு போலீஸ் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X