பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம்

Added : ஜன 29, 2017 | கருத்துகள் (41)
Advertisement
 பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம்

ஜெய்ப்பூர்: பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலியை கர்னி சேனா என்ற அமைப்பினர் திடீரென புகுந்து தாக்கினர்.பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படம் இயக்கி வந்தார்.. ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நேற்று இதன் படபிடிப்பு சித்தூர்கர் கோட்டையில் நடந்தது. அப்போது கர்னிசேனா என்ற அமைப்பினர் படபிடிப்பு தளத்திற்குள் நுழைந்து இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார்.போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்யுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.. இந்த தாக்குதலுக்கு இந்தி திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது.


பன்சால் மறுப்புபத்மாவதி படம் தவறாக சித்தரிக்கப்படவில்லை என பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மறுத்துள்ளார்.இயக்குனர் பன்சாலி தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுகண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள்மீது முதல்வர் வசுந்தரா ராஜே நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dynamo - Den Haag,நெதர்லாந்து
29-ஜன-201717:08:38 IST Report Abuse
Dynamo சினிமா கதை தானே? எப்படி எடுத்தால் என்ன? வரலாற்றை புத்தகத்துல, வரலாற்று கட்டுரைகள்ல படிங்க, சினிமா புடிக்கலைனா பாக்காதீங்க...பாவம் அவரை ஏன் அடிக்கிறீங்க?
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
29-ஜன-201720:26:30 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..டைனமோ சார் பிரச்சினை என்ன்னா இங்கேயும் ஒரு.குருப் விஸ்வருபத்திற்கு பிரச்சனை செய்தது ஜெயாவின் ஆதரவோடு. ரெண்டுமே அநியாயம் . ஆனால் வரலாற்று படத்தில் அநியாய கற்பனை கலப்பு தவறு தான்....
Rate this:
Share this comment
Cancel
amjad - Trichy,இந்தியா
29-ஜன-201713:45:01 IST Report Abuse
amjad தர்மஅடி குடுத்தது சரி. லைசென்ஸ் பறிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
29-ஜன-201713:39:04 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan இங்கே கலாச்சாரம், பண்பாட்டை காக்கத்தான் ஜல்லிகட்டு போராட்டம், இந்த இயக்குனருக்கு அடி உதை என நடக்கிறது. இதற்கான செய்திகளை பார்த்து விட்டு,இன்று sun tv'l ஆனந்த விகடன்'ன் விருது வழங்கும் நிகழ்ச்சியை கண்டு களிப்போமாக. நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல நல்ல கலை அம்சங்கள் அதில் உண்டு. அதை பார்த்துவிட்டு, தமிழன் எவனுக்கு கலாச்சாரத்தை பேசும் தகுதி இருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம். வந்தேறி, பைத்தியம், ஈர் குச்சி என்றெல்லாம் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை பார்த்து முடித்த பிறகு பண்பாடு கலாச்சாரத்திற்காக போராடும் மாணவர்கள், அமைப்புகள், பொது மக்கள் யாவருக்கும் தமிழ் உணர்வு எப்படி எழுகிறது என்று பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வரும் அம்சங்கள் நாம் தொலைத்த தமிழர் கலாச்சாரமா, மீட்டெடுக்க வேண்டிய பண்பாடா என்ற தெளிவு பெற்று, தமிழர் கலாச்சாரத்தை காப்பதற்கு நடுக்குப்பம் மக்களின் உதவியையும் பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X