நடைமுறை சிக்கலை தாண்டி சாதனை படைத்த பட்ஜெட் | நடைமுறை சிக்கலை தாண்டி சாதனை படைத்த பட்ஜெட் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நடைமுறை சிக்கலை தாண்டி
சாதனை படைத்த பட்ஜெட்

முன்னாள் மத்திய அமைச்சர், இ.அகமதுவின் மறைவு ஏற்படுத்திய எதிர்பாராத நடைமுறை சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளித்து, பெரும் போராட்டத்துக்கு மத்தியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் தாக்கல் பார்லிமென்டில் அரங்கேறியது.

நடைமுறை சிக்கலை தாண்டி சாதனை படைத்த பட்ஜெட்


நேற்று முன்தினம், பார்லிமென்டின் மைய மண்டபத்தில், லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க் களின் கூட்டுக் கூட்டத்தில், தன் உரையை ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, வாசித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.,யுமான, இ.அகமது, இருக்கையில் இருந்தவாறே சரிந்தார்.அப்போதே, காப்பாற்ற முடியாத நிலையில் அவரது உடல்நிலை இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியதால், கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரது உறவினர்கள் கூட அனுமதிக்கப்படாததால், சந்தேகமும் வதந்தியும், பரவிய வண்ணம் இருந்தன. இதையடுத்து, சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸ் தலைவர் கள், மருத்துவமனைக்கு விரைந்தாலும், அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படவே, சர்ச்சை தீவிரமானது. சிட்டிங், எம்.பி., மரணம் அடைந்தால், சபையை, நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டுமென்பது விதி. ஆனால், ரயில்வேக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் கைவிடப்பட்டு, வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய, மத்திய அரசு நாள் குறித்து வைத்திருந்தது.

எதிர்க்கட்சிகள் போராடின


மேலும், வழக்கமான பிப்., 28க்கு பதில், ஒரு மாதத்துக்கு முன், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் புதிய நடைமுறையை, இந்த ஆண்டு அமல்படுத்தும் பெருமிதத்திலும் மத்திய அரசு இருந்தது.ஆனால், அகமதுவின் மரணத்தால் புதிய நெருக்கடி ஏற்பட்டது. அகமதுவின் மறைவுச் செய்தியை, அவரது உறவினர்கள், நள்ளிரவு

முதலே அனைவரிடமும் கூறி வந்தாலும், அதை உறுதிப்படுத்தும் விதமாக, அரசு தரப்பில் அறிவிப்பு இல்லாததால், பட்ஜெட் தாக்கல் ஆகுமா, ஆகாதா என்ற சந்தேகம், தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, பட்ஜெட் தாக்கலை மார்ச் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டுமென்று, தலைமைத் தேர்தல் கமிஷன் வரை சென்று, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் போராடின.
இந்நிலையில், அகமது விவகாரத்தால், பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போட வேண்டுமென்று,காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி உருவானது. எதிர்பாராத விதமாக, ஆளும் கூட்டணியில் இருந்த சிவசேனாவும், இதை வலியுறுத்தியது. இதனால், புதன் காலை வரை, பார்லிமென்ட் வட்டாரங்களில் பெரும் குழப்பமும் சந்தேகமும் காணப்பட்டது.
இருப்பினும், அனைத்து விஷயங் களையும் இறுதி செய்து, தயார் நிலையில் உள்ளதால், பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போட வேண்டாம்; அதேநேரம் அகமது மறைவுக்கு உரிய மரியாதை மற்றும் அஞ்சலியை செலுத்தலாமென, அரசு வட்டாரங்கள் தீர்மானித்தன.

மவுன அஞ்சலி :


இதையடுத்து, அகமதுவின் மறைவு அதிகாரபூர்வமாக உறுதிப் படுத்தப்பட, பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு உட்பட பலரும், நேரில் சென்று, அஞ்சலி செலுத்தினர். பின், திட்டமிட்டபடி காலை, 11:00 மணிக்கு, லோக்சபா கூடியது. முதல் வேலையாக, அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசிக்க, அனைவரும், 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''இந்த சபை, எம்.பி.,யின் மறைவுக்கு, நிச்சயம் ஒத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டு விட்டதால், பட்ஜெட் தாக்கலை நிறுத்த முடியாத நிலை. இதற்கு மாற்றாக, அகமதுவின் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக வியாழனன்று, சபையை நாள் முழுவதும் ஒத்தி வைத்துக் கொள்ளலாம்,'' எனகூறினார்.

வெளிநடப்பு

:
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே, ''மரணம் அடைந்தவர், இந்நாள் எம்.பி., முன்னாள் அமைச்சரும் கூட. அவரது மரணத்தை வேண்டுமென்றே அறிவிக்காமல்,

Advertisement

காலதாமதமாக அறிவித்ததை ஏற்க முடியாது. பட்ஜெட் தாக்கலை தள்ளி வைக்க வேண்டும்,'' என்று கூறினார். அவரோடு இடதுசாரி, எம்.பி.,க் கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அனைத்து, எம்.பி.,க்களும், கடுமை யாக குரல் எழுப்பினர்.

'மனிதாபமற்ற செயல்' என, கோஷங்கள் போட்டபடி நின்றனர். அவர்களை சமாதானப்படுத்தியும், முடியாமல் போகவே, நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சபாநாயகர் அழைத்தார். பட்ஜெட் உரை துவங்கியவுடன், கோஷம் போட்டபடி நின்றிருந்த, பல, எம்.பி.,க்களும், சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனாலும், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உட்பட, பல காங்., - எம்.பி.,க்களும் சபையில் அமர்ந்து பட்ஜெட் உரையை கவனிக்க துவங்கினர்.

பட்ஜெட் நாளில் பார்லி., 'வெறிச்'பட்ஜெட் நகல்கள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டு தனித்தனியாக பைகளில் போடப்பட்டு, பெரிய மூட்டைகளாக, பார்லிமென்ட் வளாகத்தில் வந்திறங்கும். இவற்றை மோப்ப நாய்கள் சோதனையிடும். நீண்டவரிசையில் பத்திரிகையாளர்கள் நிற்க, இதற்கென, நிறைய கவுன்டர்கள் அமைக்கப்பட்டு வழங்கப்படும். பார்லிமென்ட் அதிகாரிகள், அலுவலர்கள் என, பலரும் தீயாய் இயங்கிக் கொண்டிருப்பர். வெளியில் இருந்தும், பலரும் சிறப்பு பாஸ்கள் மூலம், இந்த பட்ஜெட் கட்டுகளை வாங்கிச் செல்வதுண்டு.
இதனால், பட்ஜெட் தாக்கல் ஆகும் நாளில், பார்லிமென்டின் வட்ட வடிவ முதல் தள வராண்டா முழுவதும், திருவிழா கூட்டம் போல காணப்படும். ஆனால், இவை அனைத்துமே நேற்று காணப்படவில்லை. பட்ஜெட் விபரங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' முறையில் இணைய தளத்தில் ஏற்றப்பட்டு, அதை பார்த்துக் கொள்ளும்படி கூறப்பட்டு விட்டதே, இதற்கு காரணம். இருப்பினும், எம்.பி.,க்களுக்கு மட்டும் வழக்கம் போல, 'பட்ஜெட் பைகள்' வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
02-பிப்-201717:06:26 IST Report Abuse

sethuசித்தாந்தத்தில் சிக்கியவனும் மனித நேயம் என சொல்லி மதத்தை பிடித்தவனும் திருந்த வாய்ப்பு இல்லை .

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-பிப்-201714:02:25 IST Report Abuse

Malick Rajaஇது பிஜேபியினரால் மட்டுமே நல்ல பட்ஜெட் என்று சொல்ல முடியும் இது மட்டும் உறுதி ..

Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
02-பிப்-201713:07:08 IST Report Abuse

Nemam Natarajan PasupathyAll these years they were enacting a huge drama which was most unwarranted. Good thing all those "thamashas" have been given a good bye. Every Channel used to claim that they were the first and only channel to predict the budget and there used to be whole day panel discussions by the so called economic experts who used to give their sage advice as what the Finance Minister should have done etc. Bye Bye to all those dramas

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X