கதைக்களமே வெற்றி - ரைடக்டர் ராஜசேகர் | Dinamalar

கதைக்களமே வெற்றி - ரைடக்டர் ராஜசேகர்

Added : பிப் 02, 2017
கதைக்களமே வெற்றி - ரைடக்டர் ராஜசேகர்

திரைப்படத்தின் வெற்றி வித்தியாசமான கதைக்களம். வெளி வரும் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் படங்கள் வெற்றி பெறுகிறது. 25 வயதில் திரைத் துறையில் அசோசியேட் டைரக்டராக தடம் பதித்து, இயக்குனராக 30 வயதில் எழுச்சி பெற்றவர் 'மாப்ள சிங்கம்' டைரக்டர் ராஜ்குமார்.காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுாரியில் இளநிலை, அழகப்பா பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்று, வேலை நிமித்தமாக சென்னை சென்றவர்,24 வயதில் தன் மனதின் விருப்பம் எதை நாடி செல்கிறது என்பதை தேட ஆரம்பித்தார். ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் புத்தகங்களை தேடி படித்தார். வாசித்தல், கதை எழுத துாண்டின. கதை ஒரு கட்டத்தில் சினிமா கதையாக உருப்பெற்றது, என்கிறார் ராஜசேகர். அவரிடம் சில கேள்விகள்.* சினிமாவுக்குள் நுழைந்தது எப்படி?படிக்கும் வரை சினிமாவில் ஆர்வம் கிடையாது. எம்.பி.ஏ., முடித்து சென்னையில் பணியாற்றினேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படிக்கும்போது, கதை சொல்லும் ஆர்வம் வந்தது. இதழியல், சினிமா இரண்டும் பிடித்தது. இதழியல் படிக்க நேரம் இல்லை. பாலு மகேந்திரா சினிமா பட்டறையில் படித்தவர்கள் கூறியது என்னை கவர்ந்தது. ''நேரடி கற்றலை விட, அனுபவம் மூலம் சினிமா குறித்து அதிகமாக கற்று கொள்ளலாம்,''என்பது.உதவி இயக்குனராக முயற்சித்து, டைரக்டர் எழிலிடம் அசோசியேட் டைரக்டராக 'மனங்கொத்தி பறவை'யில் சேர்ந்தேன். தேசிங்கு ராஜாவில் வசனம் எழுதினேன். 30-வயதில் மாப்ள சிங்கம் இயக்குனர் வாய்ப்பு வந்தது.* இயக்குனராக வழி ?குறும்படம் இயக்கினால் இயக்குனராகி விடலாம்.* அடுத்த படங்கள்?கதை ரெடியாக உள்ளது. விரைவில் படம் இயக்க உள்ளேன்.* 'மாப்ள சிங்கம்' உருவானது எப்படி?நாம் எந்த விஷயத்தை பார்க்கிறோமோ அதுதான் வெளிப்பாடாக வரும். அந்த வகையில் என் ஊரில் நான் பார்த்த விஷயங்கள் நகைச்சுவை கலந்து மாப்ள சிங்கமாக வெளி வந்தது.* உங்களை கவர்ந்த இயக்குனர்கள்?நல்ல படம் இயக்கிய எல்லா இயக்குனர்களும் என்னை கவர்ந்தவர்கள். சூது கவ்வும் நளன் குமாரசாமி, இறைவி கார்த்திக் சுப்புராஜ் சம காலத்தில் பிடிக்கும். டைரக்டர் மகேந்திரன், மணிரத்தினம், பாக்கியராஜ், பாண்டியராஜன் பிடிக்கும்.* இயக்குனர் பார்வையில் சிறந்த படம் ?மக்களுக்கு பிடித்த படம், சென்றடைந்த படம் சிறந்த படம். சொல்ல வந்த கதையை படம் பார்ப்பவர்களுக்கு தெளிவாக சொன்னால் அது சிறந்த படம்.* சினிமாத்துறை பண்பாட்டை குலைக்கும் என்கிறார்களே?பண்பாட்டை குலைப்பதாக கூற முடியாது. நாம் என்ன கலாசாரத்தை பார்க்கிறோமோ அதைத்தான் படமாக எடுக்கிறோம். நம் பார்வையில் தான் படத்தின் பண்பாடு பொதிந்து கிடக்கிறது. சினிமா மட்டும் கலாசாரத்தை பாதிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.* வித்யாசமாக சிந்தியுங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள் என்கின்றனரே? அது என்ன வித்தியாசம்?ஒருவர் மாதிரி இன்னொருவர் சிந்திப்பது இல்லை, அதுவே வித்தியாசம் தான். அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாயா? மூன்று கதைகளும் ஒன்று என்றாலும் ஒவ்வொன்றிலும் வித்தியாசம் உள்ளது. அவரவர் பார்வையில் வித்தியாசமாக கொடுத்துள்ளனர்.* பொழுது போக்கு? படம் பார்ப்பது, வாசிப்பது.இவரை வாழ்த்த: nrajasekar.time@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X