அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீருக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ்

Added : பிப் 03, 2017 | கருத்துகள் (19)
Share
Advertisement
பன்னீருக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ்

சென்னை: ''மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்களிக்க, சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு, என் பாராட்டுகள்,'' என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.


பாராமுகம்:

அவரது பேட்டி: மத்திய பட்ஜெட், ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்ததை நிறைவேற்றவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்குவதில், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. சர்க்கரை மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். மண்ணெண்ணெய்க்கு மாதந்தோறும், 10 காசு விலை உயர்த்துவதையும், பா.ஜ., அரசு கைவிட வேண்டும்.


பாராட்டு:

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும், 'நீட்' சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றிய, முதல்வருக்கு பாராட்டுகள். தமிழக அரசின் சட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mpvijaykhanna - dindigul,இந்தியா
03-பிப்-201723:11:39 IST Report Abuse
mpvijaykhanna panner sir, this is the right time for you. please do good to peoples and save your name and party's respect
Rate this:
Cancel
Dhanaraj Pugazhendhi - Chennai,இந்தியா
03-பிப்-201715:36:57 IST Report Abuse
Dhanaraj Pugazhendhi அய்யா பன்னீர் அவர்களே மக்கள் உங்கள் பக்கம், சதிகார சசிகலா - விடம் சரணடைந்து விடாதீர்கள்.
Rate this:
Cancel
jeans bala - CHENNAI,இந்தியா
03-பிப்-201715:11:18 IST Report Abuse
jeans bala ஒரு முதல்வருக்கு மரியாதை கிடையாது மீடியா என்ன சொல்கிறதோ சிறு பிள்ளையும் பள்ளிக்கூடபெரிய பிள்ளையும் கேட்கிறது மரியாதை கொடுக்கப்பட வேண்டும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் என்று எல்லா இடத்திலும் குறிப்பிடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X