ரவுண்டானா பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரவுண்டானா பணி தீவிரம்

Added : பிப் 03, 2017

திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
காங்கயம் கிராஸ் ரோடு; தாராபுரம் ரோடு; பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக வரும் வாகனங்கள்; பெரியகடை வீதி, அரசு போக்குவரத்து கழக டிப்போ ஆகிய சந்திப்பு பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், சந்தித்து கொள்வதால், காங்கயம் ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசம், விபத்தும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, காங்கயம் ரோடு திருப்பம், பெரியகடை வீதி சந்திப்பு பகுதியில், ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் ரோடு வழியாக வரும் வாகனங்கள், பெரியகடை வீதி மற்றும் காங்கயம் ரோட்டின் இரு வழித்தடத்திம் வரும் வாகனங்கள் கக்கெடுக்கும் பணி நடந்தது.அதன் அடிப்படையில், ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான, திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வாகன கக்கெடுப்பு ஆய்வு அடிப்படையில், ரவுண்டானா அமைக்க வேண்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவுண்டானாவுக்கான வடிவம், மதிப்பீடு தயாரிக்கும் பணி கள் நடக்கிறது. திட்ட வடிவமைப்பு கிடைத்ததும், ரவுண்டானா அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X