பொது செய்தி

தமிழ்நாடு

பிடிபட்ட மாடுகளை விடுவிப்பதில் இழுபறி; தீவனமின்றி பரிதாபம்

Added : பிப் 03, 2017
Advertisement

பல்லடம் : கேரளாவுக்கு மாடுகளை ஏற்றி சென்றதாக போடப்பட்ட வழக்கில் நிலவும் இழுபறியால், மாடுகளை விடுவிப்பதிம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் தென்னம்பாளையத்தில் இருந்து, மாடுகள் மற்றும் எருமைகளை ஏற்றி, ஜன., 23ல், லாரி மற்றும் வேன்கள் சென்றன. பல்லடம் அருகே, இந்து முன்னனி தொண்டர்களால், லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு நடைபெறும் நிலையில், பல்லடம் போலீசார் வசம், மாடுகள் தனியார் தோட்டத்தில் விடப்பட்டுள்ளன. வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விசாரø நடந்து வருகிறது.கோர்ட் விசாரøக்கு பிறகு, பிடிபட்ட, 155 மாடுகளும், நீதிபதி உத்தரவின் பேரில், கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். வழக்கு துவங்கி பல நாட்களான நிலையில், அதில் நிலவும் இழுபறியால், மாடுகள் உரிய தீவனங்கள், போதிய தண்ணீரின்றி இருப்பதாக கூறப்படுகிறது. உரிய பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப் படாமல், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.வழக்கு விசாரøயை விரைந்து முடித்து, பிடிபட்ட மாடுகளை, கோ சாலைக்கு அனுப்ப, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, பிராணிகள் நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X