மக்களின் எண்ணத்திற்கு மாறாக சசிகலா தேர்வு: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் எண்ணத்திற்கு மாறாக சசிகலா தேர்வு: ஸ்டாலின்

Updated : பிப் 05, 2017 | Added : பிப் 05, 2017 | கருத்துகள் (103)
Advertisement
A.D.M.K,D.M.K,M.K.Stalin,Sasikala,Stalin,அ.தி.மு.க,சசிகலா,தி.மு.க,ஸ்டாலின்

திருவாரூர்: அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
மக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக ஓட்டுப்போடவில்லை. மக்கள் எண்ணத்திற்கும், ஜெயலலிதா எண்ணத்திற்கும் விரோதமாக அறங்கேறிய செயல் இது. சசி தேர்வை மக்கள் ஏற்க மாட்டார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., 4 ஆண்டு காலம் சிறை சென்ற போது ஓ.பி.எஸ்சை தான் முதல்வராக நியமித்தார். ஜெ., மருத்துவமனையில் நோய் வாய்ப்பட்டு இருந்த போதும், ஓ.பி.எஸ் தான் முதல்வராக இருந்தார். சசிகலாவுக்கு ஆட்சி மற்றும் கட்சியில் ஜெ., எவ்வித பொறுப்பும் ஜெ., கொடுக்கவில்லை. ஆனால் சசி தற்போது அதிகாரத்திற்கு வந்திருப்பது ஜெ., வின் எண்ணத்திற்கு எதிராக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தற்போது நிகழ்ந்த மாற்றத்தை தி.மு.க., ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கருத்து ஏதும் சொல்ல விருப்பமில்லை என்றார்.


அவசரம் ஏன்?

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: சசிகலா தேர்வு செய்யப்பட்டது அ.தி.மு.க.,வின் உரிமை. எம்.எல்.ஏ.,க்கள் அவசரப்படாமல் இருந்திருக்கலாம். அவசர அவசரமாக சசிகலாவை ஏன் தேர்வு செய்தனர் என புரியவில்லை. அவர் தற்போது முதல்வராக வேண்டிய அவசியமில்லை. ஜெ.,க்கு நிகராக சசிகலாவை கருதமுடியாது. சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டார். ஆட்சி என வரும்போது மற்ற கட்சி தலைவர்கள் கேள்வி கேட்டார்கள். தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள் என்பது எனது கணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: சசிகலாவை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்வது என்பது அ.தி.மு.க.,வின் உரிமை.


பொறுத்திருங்க...:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்: சசிகலா எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சசிகலாவை மக்கள் ஏற்கிறார்களா என்பது 6 மாதத்தில் தெரிந்துவிடும் .


வரவேற்பு:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: உள்கட்சி விவகாரம் என்பதால், நான் பெரிய கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒட்டு மொத்த ஆதரவுடன் சசிகலாவை சட்டசபை குழு தேர்வு செய்தது வரவேற்கத்தக்கது. ஆட்சியை மக்கள் அ.தி.மு.க.,விடம் ஒப்படைத்துள்ளனர்.


சந்தேகம்:

முன்னாள் தமிழக காங்., தலைவர் இளங்கோவன், சசிகலா தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் எனக்கூறியுள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது: மீண்டும் பதற்றம் தொற்றி கொண்டது. விறுவிறுப்பு ஜூரம் வந்துள்ளது. சசிகலா தேர்வு ஏன் அவசரம் என தெரியவில்லை. எதற்கு இந்த அவசரம். யாருக்காக அவசரம் என புரியவில்லை எனக்கூறினார்.
தலைமையும், அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இது மகிழ்ச்சியான தருணம்: - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.


Advertisement
வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravana Kumar - TIRUPUR,இந்தியா
06-பிப்-201710:26:13 IST Report Abuse
Saravana Kumar ஒரு நாளில் நாம் விரும்பியவருக்கு நாமளிக்கும் வாக்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் எவர் கைக்கு வேண்டுமானாலும் ( அது நாம் விரும்பாத நபரானாலும்) மாறலாம் என்கின்ற சட்ட வசதியே இது போன்ற நபர்களின் சூழ்ச்சி மிகு துணிச்சலுக்குக் காரணம்... இதில் மக்களாட்சித் தத்துவம் கேலிக் கூத்தாகின்றது...
Rate this:
Share this comment
Cancel
Uyirinam - Frankfurt,ஜெர்மனி
06-பிப்-201706:10:45 IST Report Abuse
Uyirinam அங்கேயும் காச வாரி இறைச்சி, தேர்தல் commision காதில் பூவைவச்சு, மக்கள் மூக்கில் வழக்கம்போல பஞ்சுவைக்கப்படும் . வாழ்த்துக்கள் என் மக்களே. இனி ரௌடி ராஜ்ஜியம், ஜாதி சண்டைகள் ஆரம்பம். அணைத்து ஆலைகளும் நாளைமுதல் சாராயம்தான் காய்ச்சணும்..
Rate this:
Share this comment
Cancel
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
06-பிப்-201700:36:26 IST Report Abuse
PENPOINT,INKLAND ஒருபுறம் "கள்ளக்குடி கொண்டான் " மறுபுறம் "கொல்லக்குடி கொண்டாள் " தமிழகத்தின் நிலைமை கட்டு வீரியனுக்கும் கண்ணாடிவீரியனுக்கும் நடுவே இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X