சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு | சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சசிகலா நடராஜன், உடன் பிறவா சகோதரி, முதல்வரின் தோழி, சின்னம்மா என்று, அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்த சசிகலா, இப்போது, முதல்வரின்இருக்கையையும் தட்டி பறித்து விட்டார். இது குறித்து, தமிழகம் முழுவதும், மக்களின் கருத்துக்களை கேட்டோம்.

 சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு

அதன் விபரம்:

அரசியலுக்கு வருவதற்கான எந்த தகுதியும், சசிகலாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவுடன், 30 ஆண்டுகளாக இருந்தார் என்பது, பதவிக்கான தகுதியா? அவர் மீது நம்பிக்கை இருந்திருந்தால், ஏதாவது பொறுப்பையோ, பதவியையோ ஜெயலலிதா கொடுத்திருப்பாரே.

-எம்.ஹேமந்த் குமார், 29, மென்பொறியாளர், திருவொற்றியூர்.


எங்களை ஆட்சி செய்வது யார் என, நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் ஓட்டளித்து, ஜெ.,வை தேர்ந்தெடுத்தனர். அவர், எங்களை ஆட்சி செய்தார். ஜெ., உயிருடன் இருந்தபோது, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக்கினார். சசிகலாவைசீண்டவே இல்லை. எங்களை ஆட்சி செய்ய, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

-ஜின்னா, 32,ஓட்டல் உரிமையாளர், கள்ளக்குறிச்சி.

ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், சசிகலா முதல்வராவது வரை, அனைத்தும் திட்டமிடப்பட்ட திரைப்படம் போலவே, செயற்கையாக உள்ளது. இதில், ஒன்றைக்கூட நம்ப முடியவில்லை. சசிகலா, மத்திய அரசையும், நீதிமன்றத்தையும் எப்படி சமாளிப்பார் என்பதில் தான், அவரின் உண்மை முகம் வெளிப்படப் போகிறது.

-பி.ரேணுகாதேவி, 22,ஐ.டி., ஊழியர், காட்டுப்பாக்கம்.

சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ததன் மூலம், அ.தி.மு.க.,வின் எதிர்காலம் படு குழியில் தள்ளப்பட்டுள்ளது. பன்னீர் செல்வத்தை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சசிகலாவை ஜெயலலிதா ஒரு போதும் பதவிக்கு கொண்டு வர விரும்பியதில்லை. சசிகலாவின் சொந்த பந்தங்கள், அல்லக்கைகளின் ஆட்சியாகவே திகழும்.

-வி.டி.என்.பிரபாகரன் அ.தி.மு.க., உறுப்பினர், மதுரை.

ஜெ., முதல்வராக இருந்தபோது, பல்வேறு நலத் திட்டங்களை செய்துள்ளார். அவர் மறைவிற் குப் பின், தமிழகமே மறைந்தது போல் உள்ளது. சசிகலாவை முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தாலும், மக்கள் ஒருபோதும் ஏற்க

மாட்டார்கள். ஜெ., இடத்திற்கு சசிகலாவால் வரமுடியாது; மக்களும் அவரை விரும்பவில்லை.

-பாக்கியம், 45,ஓய்வு பெற்ற ஆசிரியர், விருத்தாசலம்.

ஜெ., மறைவுக்கு பின் கட்சியை சசிகலாவும், அவரது உறவினர்களான ஊழல் கும்பலும் கைப்பற் றியதை, தொண்டர்கள், பொதுமக்கள் எதிர்க்கின்ற னர். இனி, தமிழகம் ஊழலில் மிதக்கும். சசிகலா முதல்வராவதால், இனி தமிழகத்தை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.

-பி.ஜி.சேகர், அ.தி.மு.க., 4வது வார்டு செயலர், ராமேஸ்வரம்.

பணம், செல்வாக்கை பயன்படுத்தி, எம்.எல். ஏ.,க் களை மிரட்டி சசிகலா பதவிக்கு வந்து உள்ளார். அவரை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். மக்களும், கட்சியின் கடைக்கோடி தொண்டனும் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டர்; அ.தி.மு.க,வுக்கு இது பின்னடைவே.

எ-ஸ்.ஆரியக்கண்ணன் ஜெ., பேரவை நகரசெயலர், பள்ளத்துார்.

ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி, அதன் அடிப்படையில், ஆட்சி அமைப்பது தான் ஏற்புடை யது. அதை தவிர்த்து, தனி மனித ஆராதனை அடிப்படையில், ஆட்சியாளர்களை தேர்வு செய்வது ஜனநாயகத்திற்கும், மாநில வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான விஷயம் அல்ல.

-வேணுகோபால் பிரவுசிங் சென்டர் உரிமையாளர், ஊட்டி

எந்த அனுபவமும் இல்லாத சசிகலா அரசியலுக்கு வரும்போது, ஏன் இளைஞர்கள் வரக்கூடாது? ஜெ., போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா வை ஜெயிக்க சொல்லுங்க; பிறகு முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம்.

-கலைச்செல்வி கல்லுாரி மாணவி, கோவை.

ஜெயலலிதாவுக்கு தான் நாங்கள் ஓட்டு போட்டு, முதல்வராக தேர்வு செய்தோம். அவர் மறைந்ததும், கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. தகுதியற்ற சசிகலாவை முதல்வராக ஏற்றுக் கொள்ள, நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

-மோகன், 45,பெட்டிக்கடைக்காரர், பெண்ணாடம்.


ஜெ.,யின் உண்மையான தோழியாக இருந்தால், சசிகலாவிற்கு பதவி ஆசை வரக்கூடாது. பொதுச் செயலராக பதவியேற்ற போது, நிர்பந்தத்தால் பதவி ஏற்றதாக கூறிய சசிகலா, முதல்வர் பதவிக்கு அவசரப்படுவது ஏன்?

-காந்தி, 48,ரியல் எஸ்டேட் உரிமையாளர், செஞ்சி.

ஜெ., மரணத்திற்கு காரணமான சசிகலாவை, அ.தி. மு.க., தொண்டர்களும், மக்களும் ஏற்க மாட்டார்கள். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, கட்சியின் அடி மட்ட தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியி லும் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சசிகலா முதல்வரானால், தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம்.

-கம்சலா, 51,குடும்பத் தலைவி, கடலுார்.

அ.தி.மு.க.,வின் தேர்தல் விதிப்படி, தொண்டர்க ளால் தேர்வு செய்யப்படுபவர் தான் பொதுச் செயலர் ஆக முடியும். பொதுச் செயலர் தேர்வே செல்லாது என்கிற நிலையில், தற்போது,முதல்வராகவும் சசி கலா தேர்வு செய்யப்பட்டுள் ளார். ஜெ.,யின் மரணத் தில் சந்தேகம் உள்ளது. தற்போது அந்த சந்தேகம் வலுக்கிறது. சசிகலாவை சொத்து

Advertisement

குவிப்பு வழக்கு துரத்தி வருகிறது. எனவே, அவர் விரைவில் சிறை செல்வார்; தமிழகத்தில் மாற்றங்கள் வரும்.

-துரையப்பா, 67, வாசுதேவநல்லுார் தொகுதி - அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,


பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு சசிகலா முதல்வ ராவதை ஏற்க முடியாது. மக்கள் ஜெய லலிதாவிற்கு தான் ஓட்டளித்தனர். போயஸ் தோட்டத்து வேலை காரர்களுக்கு அல்ல. தமிழ கத்தில் ஏற்கனவே, தி.மு.க., குடும்ப ஆட்சி நடந்தது; இனி மன்னார்குடி குடும்ப ஆட்சி நடக் கும் நிலை ஏற்படஉள்ளது. ஜெயலலிதா இறப் பில் மர்மம் நீங்காத நிலையில், இரண்டே மாதத்தில், அவர் வகித்த பொதுச் செயலர், முதல்வர் பதவியை சசிகலா கைப்பற்றியது, ஏற்கனவே திட்டமிட்ட செயலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

-குணசேகரன், மானாமதுரை தொகுதி முன்னாள் - எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலர்.

மக்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதாவை தான். தற்போது நடந்துள்ள இந்த செயல், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, மக்களை முட்டாள் களாக்கும் செயல்; மீண்டும் தேர்தல் நடந்தால்
அ.தி.மு.க.,வுக்கு பெரும் அடி கிடைக்கும்.

-விஜு, இன்டீரியர் டெக்கரேட்டர், குன்னுார்.

ஜெயலலிதா இருந்த இடத்தில், வேறொரு பெண்ணை எங்களால், நினைத்துக்கூட பார்க்க முடியாது. தேர்தலில் நின்று எம்.எல்.ஏ., ஆகும் வரை கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், சசிகலா முதல்வராக வருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஜெ., மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவசரமாக பதவி யேற்கக்கூடாது. தேர்தல் மூலம் மக்களின் ஆதரவு கிடைத்தால், அதற்கு பிறகு முதல்வ ராக சசிகலா பொறுப்பேற் கட்டும்.

-சிவகாமி, இல்லத்தரசி, திருப்பூர்-.

அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் யாரும் சசிகலாவை இன்னும் கட்சி பொதுச் செயலாளராகக்கூட ஏற்றுக்கொள்ளாத போது, முதல்வராக எப்படி பார்ப்பார்கள்? தனிப்பட்ட முறையில் அதிகாரத்தை வைத்து முதல்வ ராகும் சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகளே அதிகம்.

-ஆறுச்சாமி, டாக்சி டிரைவர், கோவை.

கட்சியில் மூத்த அமைச்சர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஏன், செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே கட்சியில் சிறப் பாக பங்காற்றியுள்ளார். அவர்களுக்கு மத்தி யில் எந்த அனுபவமும் இல்லாமல், தகுதியற்ற ஒருவர் தலைமை பொறுப்பில் வருவது என்பது நம் துரதிர்ஷ்டம்.

-ஆறுமுகம், தனியார் நிறுவன ஊழியர், கோவை.

எந்த அனுபவமும் இல்லாத சசிகலா அரசிய லுக்கு வரும்போது, ஏன் இளைஞர்கள் வரக் கூடாது? ஜெ., போட்டியிட்ட ஆர்.கே., நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலாவை ஜெயக்க சொல்லுங்க! பிறகு முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம்.

-கலைச்செல்வி, கல்லுாரி மாணவி, கோவை

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Mahendiran - Nagpur,இந்தியா
06-பிப்-201723:09:13 IST Report Abuse

P Mahendiranதமிழ்நாடே பத்திகிட்டு எரியுது. உங்களோட கனவு முதல்வர், மக்கள் தலைவி, அத்தை விட்டுச் சென்ற பணிகளை தொடருவேன் எனச் சொன்ன தீபா எங்க போனாங்க?

Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
06-பிப்-201721:52:44 IST Report Abuse

Roopa Malikasdஇதுலேருந்து என்ன புரியுதுன்னா கூடிய சீக்கரம் சென்னை மெரினா அல்லாமல் எல்ல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிக பயங்கமான போராட்டம் ஆரம்ப மாக போகுது

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
06-பிப்-201721:42:49 IST Report Abuse

Arasanகோர்வையாக ரெண்டு வரி பேசமுடியுமா? யாராவது குறுக்கு கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியுமா?

Rate this:
vidhuran - chennai,இந்தியா
06-பிப்-201722:38:45 IST Report Abuse

vidhuranகோர்வையாக பேச தெரிந்தவர்களுக்கு MLA க்கள் ஆதரவு இருக்கிறதா? சும்மா ஐயோ அப்பா என்று ஓலமிடாதீங்க அவங்களுக்கு அதிருஷ்டம் மத்தவங்களுக்கு இல்ல அவ்வளவுதான்....

Rate this:
மேலும் 129 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X