சசிகலா முதல்வரானால்... டுவிட்டரில் பறக்கிறது எதிர்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலா முதல்வரானால்... டுவிட்டரில் பறக்கிறது எதிர்ப்பு

Updated : பிப் 06, 2017 | Added : பிப் 06, 2017 | கருத்துகள் (75)
Advertisement
 டுவிட்டர், பறக்கிறது, எதிர்ப்பு , சசிகலா

சென்னை : ‛சசிகலா முதல்வராக பொறுப்பேற்றால் நாடு தாங்காது' என, பல தரப்பினரும், தங்களின் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இதன் விவரம் வருமாறு:
சுப்பிரமணிய சுவாமி : இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டு மூலம் சசிகலாவுக்கு எதிர்ப்பை காட்டலாம்.
ப.சிதம்பரம் :
அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி அவர்கள் தலைவரை தேர்வு செய்யும் உரிமை உள்ளதோ, அதே போல் தமிழகத்திற்கு முதல்வராக வருபவருக்கு என்ன தகுதி என கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. தமிழக மக்களும், அதிமுக.,வும் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்; ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டர் பதிவில், " தமிழக இளைஞர்கள் அனைவரின் கவனத்திற்கு, விரைவில் தமிழகத்தில் 234 இடங்கள் காலியாக உள்ளது. வாய்ப்பு காத்திருக்கிறது"கமலஹாசன்: குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
இதன் அர்த்தம், மிக மெல்லிய மயிலிறகே ஆனாலும், அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும்''. என்பதாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சசிகலா படத்தை கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளரை அடித்து உதைத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி: அதிமுகவில் புதிய சகாப்தம் தொடங்குவதன் அடையாளம் தான்! சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் -
ரவீந்திரஜடேஜா: நம் சின்னம்மாக்கு அனைத்தும் ஏற்கத்தக்கதல்ல. அம்மாவுக்கே வாக்களித்தனர் மக்கள்.சசிகலா என் முதல்வர் அல்ல.
மதி அரசி : சசிகலா ஜெவுக்கு துரோகம் செய்யவில்லை… ஜெ தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டார்.தி இந்து பத்திரிக்கை குடும்பத்தாரும், அதன் இயக்குனருமான மாலினி பார்த்தசாரதி : ஓபிஎஸ்.,ஐ உடனியாக பதவி விலக செய்து, அவசரமாக ஆட்சி பொறுப்பில் அமருவது ஏன் என தமிழக மக்களுக்கு சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இரந்த போது சசிகலாவை தனது அரசியல் வாரிசு என எப்போதாவது கூறி உள்ளாரா? தமிழகத்திற்கு வருத்தமான, ஆபத்தான காலம்.காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பூ : தமிழ்நாடு சபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை. எது எப்படி நடந்து இருந்தாலும் முறைப் படி தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள்தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராடினார்கள். அது போன்று இதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.
பஞ்சாப் அரசியல் விமர்சகர் சாத்வி கோஷ்லா : தமிழக முதல்வராக அதிகாரப்பூர்வமாக கவர்னர் மூலம் பதவியேற்பதற்கு முன் டுவிட்டரில் பதயேற்பு நடந்துள்ளது. தமிழகத்தின் இப்போதைய நிலையை கண்டு சொர்க்கத்தில் அம்மா அழுவார்.சுரேஷ் : தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனி மக்களாட்சி இல்லை மன்னார்குடி ஆட்சி தான். சசிகலா முதல்வராவதை எதிர்கின்ற தமிழர்கள் தமிழின துரோகி என்று அடிமை அமைச்சர்கள் கூறினாலும் ஆச்சிரிய படுவதற்க்கில்லை.இயக்குநர் தங்கபச்சன் : தமிழனென்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!சாம்ஏசுதாஸ் : மாட்டைக் காப்பாற்றிய நம்மால் மாநிலத்தை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
கானபிரபா : சசிகலா ஆட்சியை அரவணைக்க, சப்பைக்கட்டு கட்ட தமிழ்த் தேசியம், ஈழம்னு ஒரு கூட்டம் கிளம்பும் அவர்களிடமிருந்து விலகி இருக்கணும் மக்களே ! பிரபா.
எனக்கு வாய்த்த அடிமைகள்.
பிப்ரவரி வெளியீடு
இயக்கம் : சசிகலா
கதை,வசனம் : தம்பித்துரை
இசை : நாஞ்சில் சம்பத் (சிங் சக்)தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா : சுனாமி, வெள்ளம், சமீபத்திய புயல், அம்மாவின் மரணம் ஆகியவற்றை சென்னை தாங்கிக் கொண்டது. சசிகலாவை ஏற்றுக் கொள்ளாது.

இயக்குனர் ஆனந்த் குமார் : சசிகலாவை முதல்வராக்குவது பள்ளிக்கு போகாத ஒருவரை கல்லூரி முதல்வராக்குவது போன்றது.
ரிக்கெட் வீரர் சேவாக் :
சசிகலா மீது எனக்கு நம்பிக்கை. அவர் அம்மாவைப் போல் 10 சதவீதம் கூட வர முடியாது. அவரை முதல்வராக ஏற்றால், தமிழகத்திற்கு எனது அனுதாபங்கள்.பத்திரிக்கையாளர் அர்னாப் கோசுவாமி : முதல்வராவதற்கு என்ன ஒரு சிறந்த கதை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எந்த தகவலும் இல்லை. சசிகலாவை ஏற்க தமிழக மக்கள் முட்டாள் இல்லை.

டைரக்டர் ராம் கோபால் வர்மா : சசிகலா தமிழக முதல்வராக விரும்புகிறார். தமிழக இளைஞர்கள் அஜித்துக்காகவும், விஜய்க்காகவும் சண்டையிடுவதற்கு பதில் தங்களின் எதிர்காலத்திற்காக போராடலாம்.
கதாசிரியர் ரவீந்தர் சிங் :
டிரம்ப்பாவது ஜனநாயக முறையில் தேர்வ செய்யப்பட்டார். ஆனால் சசிகலா...

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Save TN - madurai,இந்தியா
07-பிப்-201707:05:55 IST Report Abuse
Save TN மக்கள் தமிழ் நாட்டின் எதிரிகளா 134 ADMK MLA வீடுகளை முற்றுகை இடவேண்டும். அறவழியில் போராட்டம் நடத்துவோம். அப்பொழுதுதான் மக்கள் சக்தி என்னவென்று தெரியும் ....
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
07-பிப்-201705:45:55 IST Report Abuse
Ramasami Venkatesan சசிகலா முதல்வர் ஆவதால் அடுத்த தேர்தலிலோ அல்லது அதற்கு முன்போ அதிமுக வின் அடிவாரம் ஆடி அழிய வழிவகுத்து விடும். மக்கள் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து ஒரு மூன்றாவது கட்சியை தேர்ந்தெடுக்கலாம். பாவம் அஸ்திவாரம் அமைத்த எம் ஜி ஆரும் கட்டிக்காத்த ஜெ வும் ஒரு கட்சி அழிய மற்றவரிடம் போய்சேருகிறது. தமிழ் நாடு குடும்ப ஆட்சியிருந்து மீண்டு வாரிசில்லாத தலைர்களை கொண்ட அதிமுக குடும்ப அரசியலுக்கு மாறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா
07-பிப்-201702:48:46 IST Report Abuse
Lt Col M Sundaram ( Retd ) Bad days are started for TN. She has been imprisoned for corruption and possession of disproposanate asset case. How can we trust her in administration of the govt?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X