அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வீட்டில் வேலை செய்த
சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வர்?
அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முனுசாமி ஆவேசம்

கிருஷ்ணகிரி:''ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த சசிகலாவை, மக்கள் எப்படி முதல்வராக ஏற்று கொள்வர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஜெ., வீட்டில் வேலை செய்த சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வர்? அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முனுசாமி ஆவேசம்

காவேரிப்பட்டணத்தில் அவர் அளித்த பேட்டி:


அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். 'ஜெயலலிதா இல்லத்தில் வேலை செய்கிறேன்' என்ற போர்வையில், சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் பதவியை கைப்பற்ற திட்டம் தீட்டி வந்துள்ளது நன்றாகவே புலப்படுகிறது.

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், அவர்கள் பிராயச்சித்தம் தேடியே ஆக வேண்டும். அதற்கு, சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த, அந்த பதவியே வேண்டாம் என்று வெளியே வர வேண்டும்.

ஜெ.,க்கு துரோகம்


அப்படி நீங்கள், பதவியை ராஜினாமா செய்ய வில்லை என்றால், நீங்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்திருக்கிறீர்கள். அப்படி துரோகம் செய்த நீங்கள், ஜெயலலிதாவின் இல்லத்தில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக அந்த இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும். திராவிட இயக்க வரலாற்றில், இந்த இயக்கத்தை உருவாக்கி, அண்ணாதுரை முதல்வர் ஆனார். எம்.ஜி.ஆர்., மக்களை நேசித்து, தியாகம் செய்து, உழைத்து முதல்வர் ஆனார்.

ஜெயலலிதா மக்களை நேசித்து, தியாகம் செய்து முதல்வர் ஆனார். தி.மு.க., தலைவர் கருணாநிதியும் உழைத்து, மக்களை நேசித்து முதல்வர் ஆனார். இது, திராவிட இயக்கத்தின் வரலாறு. ஆனால், எந்தவித அரசியல் தியாக மும் செய்யாமல், எந்தவித அரசியல் வரலா றும் இல்லாமல், சதி கும்பலின் தலைவராக இருந்து சதி செய்து, ஜெயலலிதா மறைந்த,

60 நாட்களுக்குள், பின்புற வாசல் வழியாக, சசிகலா இந்த பதவியை ஏற்க உள்ளார்.

திராவிட அரசியல் வரலாற்றில், இந்த பதவி யேற்பு என்ற வைபவம், ஒரு கருப்பு சரித்திர மாகவே மாறும். தயவு செய்து, வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்த வேண்டாம். முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்திற்கு, ஒரு கருத்தை சொல்ல விரும்பு கிறேன். காரணம், இந்த குடும்பத் தின் வாயிலாக அவர் அரசியலுக்கு வந்துஇருந்தாலும் கூட, இரண்டு முறைஜெயலலிதா, முதல்வர் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

நடந்தது என்ன?


ஜெயலலிதா கொடுத்த பொறுப்பை, நீங்கள் ஏன் சசிகலாவுக்கு விட்டு கொடுத்தீர்கள். உங்களுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?நேற்று வரை, நல்ல முறையில் செயல்பட்ட முதல்வர், மக்கள் மத்தி யில் செல்வாக்குடன் வளர்ந்து வந்த முதல்வர், சசிகலா வீட்டுக்கு சென்றதும், இரண்டு மணி நேரத் திற்குள்ளாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளீர்கள் என்றால் அந்த வீட்டில் என்ன நடந்தது?

முதல்வர் பொறுப்பு, ஜெயலலிதா உங்களுக்கு கொடுத்தது. அந்த பொறுப்பை, அந்த வீட்டில், இரண்டு மணி நேரத்திற்குள்ளாக சசிகலா, தினகரன், நடராஜன், டாக்டர் வெங்கடேசனிடம் அடகு வைத்து வந்துள்ளீர்கள்.எவ்வளவு பெரிய துரோகத்தை, நீங் கள் ஜெயலலிதாவிற்கு செய்திருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்.

ஜெயலலிதா வீட்டில் பணி செய்து கொண்டிருந்த சசிகலாவை, அ.தி.மு.க., தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்; மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர். அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் அன்பான வேண்டுகோள். இன்று, உங்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை, ஒரு தொண்டனும் ஏற்றுக் கொள்ளவில்லை; ஒரு வாக்காளரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தொண்டர்களால், பொதுமக்களால் ஏற்று கொள்ளப்படாத சசிகலாவை, சட்டசபைஉறுப்பினர் களான நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்.

தீவிர விசுவாசி


ஆகவே, நீங்கள் மறுபரிசீலனை செய்து, ஜெய லலிதாவிற்கு துரோகம் செய்த சசிகலா குடும் பத்தை வெளியேற்ற உறுதுணையாக இருங்கள். சதி செய்கின்ற இந்த கூட்டத்தை வெளியேற்றிவிட்டு, ஒரு புதிய முதல்வரை நீங்கள் உருவாக்க வேண்டும்.நான், தி.மு.க., - பா.ஜ., துாண்டு தலின் பேரில் இவ்வாறு பேசிவருகிறேன் என

Advertisement

கூறுகின்றனர். நான் எப்போதும், அ.தி.மு.க., வின் தீவிர விசுவாசி. இவ்வாறு அவர் கூறினார்.

நடராஜன் மீது சந்தேகம்


முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியதாவது:

நேற்று முன்தினம், திடீரென உடல்நலம் சரியில்லை என, அப்பல்லோ மருத்துவமனை யில் நடராஜன் சேர்ந்துள்ளார். ஆனால் நேற்று, அதே மருத்துவமனையில் மறைந்த ஜெய லலிதாவின் மருத்துவ அறிக்கையை, அந்த நிர்வாகம் வெளியிடுகிறது.

இந்த மருத்துவ அறிக்கையை, நிர்வாகம் எப்படி வெளியிடு கிறது என்பதை கண்காணிப்பதற்கா வும், அதில் தங்களுக்கு எந்தவித சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், இவர் மருத்துவ மனையில் போய் தங்கிஇருக்கிறார் என்ற சந்தேகம், மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதற்கு அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனென்றால், ஒரு நாட்டின் தலைவரை நாங்கள் இழந்திருக்கிறோம். ஒரு நாட்டின் தலைவரை, 75 நாட்களாக சசிகலா உத்தரவின் படி, யாருக்கும் நீங்கள் காட்டவில்லை.ஒரு தொண்டனில் இருந்து முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வம் வரை, யாருக்கும் காட்டவில்லை. சசிகலா சொன்னார் என்பதற் காக யாருக்கும் காட்டவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை, அறிக்கையாக இந்த மருத்துவ மனை குழு அளிக்க இருக்கிறது.

லண்டனில் இருந்து டாக்டர் வந்திருக்கிறார் என்று சொன்னால், இதில் ஏதாவது தவறு நடக்கிறது என்று சொன்னால், அதற்கு இந்த நிர்வாகமும், நடராஜனும் தான் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILSELVAN - bhubaneswar,இந்தியா
07-பிப்-201720:31:27 IST Report Abuse

TAMILSELVANஒ5வ5க்கு ஒரு பதவின ஒ.பி.ஸ் க்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கலாம்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-பிப்-201718:07:07 IST Report Abuse

Balajiநாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதை புரிந்துகொண்டு தற்போதைக்காவது தனது பதவி வெறியை நிறுத்திக்கொண்டால் சதிகாரிக்கு நல்லது...... இல்லையென்றால் கட்சி காணாமல் போகும்........ ஏதோ இப்போது ஒத்து ஊதிக்கொண்டு இருக்கும் சில நிர்வாகிகளை மட்டும் நம்பி ஆழம் தெரியாமல் காலை விட்டு பள்ளத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம்....... அப்புறம் ஒன்னரைக்கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை காணாமலடித்தவர் என்ற அடைமொழி தங்களை தழுவிக்கொள்ளும் ..........

Rate this:
Rajasekar D - Kudanthai,இந்தியா
07-பிப்-201714:09:57 IST Report Abuse

Rajasekar Dஒரு கேஷிற்கு 20 வருடம் ஆனால் இப்படித்தான் நாட்டில் நடக்கும். ஒரு கேஷிற்கு 5 வருட காலம் போதவில்லை என்றால் எதற்கு நீதி. எனது கோபம் எல்லாம் நீதிமன்றத்தின் மீதே

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X